15 August 2009

காலத்தின் குரல்

கால இயந்திரம், நமக்கு பிடித்த, ஆனால் அனுபவிக்காத ஒரு கருவி. அப்படி ஒரு வேலை அது கண்டுபிடிக்கபட்டால், நீங்கள் எந்த காலத்துக்கு போக விரும்புவீர்கள்? எனது லிஸ்ட் இதோ.
  • கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தருணம்.

நான் தூத்துக்குடியில் இருந்தபோது, பாஞ்சாலம்குறிச்சி சென்று பார்த்தேன். இப்போது, அந்த கோட்டை ஒரு மண்மேடு மாதிரி இருக்கிறது.. ஒரு மாவீரன் வாழ்ந்து மறைந்த இடம் என்ற உணர்வு, நம்மை சிலிர்க்க வைக்கும். முன்னூறு வருடங்களுக்கு முன் நமது மனது சென்று விடும். கட்ட பொம்மனை தூக்கில் இட்ட புளிய மரம் இருந்த இடத்தில், இப்போது ஒரு நினைவு சின்னம் இருக்கிறது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களில், தற்கால காங்கிரீட் கட்டடங்களை கட்டுவது சரியா என்று தெரியவில்லை. இந்த வலை தளம், கட்டபொம்மன் கோட்டை இருந்த இடத்தில், இந்தியா அகழ்வு ஆராய்ச்சி பற்றி விளக்குகிறது.  • மொகலாய மன்னர்கள், அக்பர், ஷாஜகான் இருந்த காலம். .தாஜ் மகால கட்டும் போது, நாம் அருகில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் ?. ஷாஜகான், தாஜ்மஹால் கட்டியவர்கள் கைகளை வெட்ட ஆணையிட்டது உண்மையா பொய்யா என்று பார்க்கலாம். ஒரு பிரச்சனை, நம்மையும் வேலை செய்ய பிடித்து போனால், டவுசர் கிழிந்து விடும் :-). இந்த மன்னர்கள் பற்றி மதன் அவர்கள் எழுதிய "வந்தார்கள், வென்றார்கள்", ஒரு அருமையான புத்தகம்.


3. சோழர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள்.மாமல்லபுரம் சென்று பார்க்கும் போது, எப்படி அந்த காலத்தில, பல்லவர்களால், குடவறை கோவில் கட்ட முடிந்தது ? எதை வைத்து அவ்வளவு பெரிய பாறையை வெட்டினார்கள் ?. சற்று கூர்ந்து கவனித்தால் அவர்கள் கையாண்ட யுக்தி என்ன என்று கண்டுபிடிக்கலாம். ஒரு பெரிய பாறையில், சிறு துவாரங்கள் இட்டு அதில், மரக்கட்டை வைத்து அடித்துவிடுவார்கள். இப்படியே சிறு சிறு துளையிட்டு, ஒரு நேர் கொடு வரைந்து, பிளக்கவேண்டிய பாகங்களை முடிவு செய்வார்கள். பிறகு, அந்த மரகட்டையில் தண்ணீர் விடுவார்கள். மரகட்டை விரிவு அடையும் போது, பாறை பிளந்துவிடும். இன்று பார்த்தாலும் சில பாறைகளில், அப்படி பட்ட துளைகள் இருப்பதை பார்க்க முடியும்.


கல்கி அவர்கள் எழுதிய "பொன்னியின் செல்வன்" படித்த அனைவரும், சோழ மன்னர்களை பற்றி அறிய ஆவலாக இருப்பார்கள்.


இன்றும் பழங்கால கோவில்களுக்கு போகும்போது, இன்று நாம் நடக்கும் இடத்தில், சில ஆயிரம் வருடங்கள் முன், மன்னர்கள் நடந்திருப்பார்கள் என்ற நினைவு வரும்.


அடுத்த முறை வரலாற்றுக்கு முக்கியத்துவம் பெற்ற இடங்களுக்கு போகும்போது, அந்த காலத்தின் குரல் கேட்கிறதா என்று பார்க்க வேண்டும் (அப்பாடி !!! இந்த பதிவின் தலைப்பை சொல்லியாச்சு :-) ).காலத்தின் குரல் கேட்க்குமான்னு தெரியலை. ஆனா யார், யாரை லவ் பண்றாங்கன்னு நம்ம தற்கால மன்னர்கள், பெயிண்ட் மற்றும் சாக்பீஸ் உதவியுடன், இந்த இடங்களில், தங்களின் முத்திரை பதித்திருக்கிறார்கள் :-(. America போனால், 300 வருட பாரம்பரிய இடங்களை கூட அவர்கள் எப்படி பாதுகாக்கிறார்கள் என்று தெரியும். இன்(நம்) நாட்டு மன்னர்கள் திருந்தினால் வரலாற்றுக்கு சின்னங்களை பாதுகாக்க முடியும்.

!! நம் மனமே கால இயந்திரம். !!

5 பின்னூட்டங்கள்:

Eswari said...

//கல்கி அவர்கள் எழுதிய "பொன்னியின் செல்வன்" படித்த அனைவரும், சோழ மன்னர்களை பற்றி அறிய ஆவலாக இருப்பார்கள்.

இன்றும் பழங்கால கோவில்களுக்கு போகும்போது, இன்று நாம் நடக்கும் இடத்தில், சில ஆயிரம் வருடங்கள் முன், மன்னர்கள் நடந்திருப்பார்கள் என்ற நினைவு வரும்.//
இது என் மனதில் ஒளித்துக்கொண்டு இருக்கும் குரல்

பின்னோக்கி said...

இந்த வார குமுதம் பத்திரிக்கையில், தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ள பிரச்சினைகளை எழுதியிருக்கிறார்கள். படித்து பாருங்கள்.

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் தங்களின் இந்த செய்தி முன்னணி இடுகையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

cheena (சீனா) said...

உண்மை உண்மை - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, தொல்பொருள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய இடங்கள் சின்னங்கள் பாதுகாப்பற்று இருக்கின்றன. நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது உண்மைதான்

SARAVANABALAAJI said...

எனக்கும் தான், மன்னர் ராஜ ராஜ சோழர், தனக்கு கிடைக்க இருந்த பதவியை துறக்க முன் வந்த நேரத்தில் இருக்க விரும்புகிறேன், மன்னர் ராஜ ராஜ சோழரின் சிலை ஒன்று கடத்தப்பட்டு, வெளிநாட்டு அரும்காட்ச்சியகம் ஒன்றில் இருப்பதாக சொல்கிறார்களே, அது உண்மையா, அப்படி என்றால் அதன் விவரங்கள் அறியத்தருகிறீர்களா நண்பரே, முக்கியமாக அவரின் படம் காண கிடைக்குமா

சரவணபாலாஜி