22 July 2010

மூழ்கிப் பார்க்கப் போறாங்க

கி.பி 2010

தமிழ் செம்மொழி மாநாடு முடிந்ததும், இன்று தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள துறைமுக நகரான பூம்புகார் அல்லது காவேரிபூம்பட்டினம், கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதால், அதனை ஆராய்ந்து, புதைந்து கிடக்கும் பழங்காலப் பொருட்களை வெளியே எடுத்து வர திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.


கோவாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனமும் இந்தப் பணியை மேற்கொள்ள இருக்கிறது. மாமல்லபுரம் மற்றும் துவாரகை போன்ற இடங்களில், கடலுக்கு அடியில் ஆய்வு மேற்கொண்டதில் இந்த நிறுவனங்களுக்கு அனுபவம் இருக்கிறது.





ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில், சோழர்கள் காலத்தில், பூம்புகார் நகரம், கடல் கொந்தளிப்பால் (சுனாமி ?) கடலுக்கடியில் சென்று விட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 




கி.பி 2200

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம், கடலுக்கு அடியில் காணாமல் போன, சேது சமுத்திரக் கால்வாய் (??? !!!) கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. சற்றே ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன் இந்தக் கால்வாய் கடலில் தோண்டப்பட்டது. காலப்போக்கில், அது கடலுக்கு மிக ஆழத்தில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

8 பின்னூட்டங்கள்:

vasu balaji said...

புதையல் கிடைக்குதோ! பூதம் கிளம்புதோ!!

Chitra said...

மாநாட்டு செலவுக்கு புதையல் வேறையா? ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.... நல்லது நடந்தா சரிதானே!

அமுதா said...

எவ்ளோ கோடி முழுகப் போகுதோ???

ஸ்ரீராம். said...

மூழ்கிப் பார்க்கப் போறாங்களா.... முழுங்கிப் பார்க்கப் போறாங்களா...

Prathap Kumar S. said...

அடுத்த புராஜக்ட்டா... நடக்கட்டும்...பல கோடிகளை முழுங்கிய சேது சமுத்திரம் அப்படியே கிடப்புல கிடக்கு... பலபேருக்கு சோத்துக்கு வழியைக்காணோம்...

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல...

geethappriyan said...

இதுல எவ்ளோ அடிப்பாங்களோ?
இல்ல ஆயிரத்தில் ஒருவன் போல எதாவது மன்னர் பரம்பரையின் குலதெய்வ சிலை இருக்குமோ தெரியலை,ஏதோ,ஆர்காலஜிஸ்டுக்கும் டூரிசத்தும் வேலை கிடைச்சா சரி

Eswari said...

//இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம், கடலுக்கு அடியில் காணாமல் போன, சேது சமுத்திரக் கால்வாய் (??? !!!) கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.//
இது தான் பின்னோக்கி.
நல்ல பதிவு

pinkyrose said...

மூழ்கிப் பார்க்கப் போறாங்களா.... முழுங்கிப் பார்க்கப் போறாங்களா..

ditto