25 July 2010

கனவே கலையாதே

சென்னை - மிக அழகான, அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு நகரம். இதன் சிறப்பு, இங்கு நிலவும் வெப்ப நிலை. குளிர்காலத்தில் 15 டிகிரியாகவும், வெயில் காலத்தில் 28 டிகிரியாகவும் இருக்கிறது.

குண்டு குழியில்லாத சாலைகள்; கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து; குறைந்த மக்கள்தொகை என்று இந்தியாவிலேயே முதன்மையான, வாழத்தக்க நகரமாகத் திகழ்கிறது.

( **** )

நேற்று நடந்த தேர்தலில் சுமார் 98 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்தியாவின் அடுத்த பிரதமராக ******** தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் தொகுதியில், இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

( **** )

கடந்த ஆண்டு, இந்தியாவிலேயே அதிக வருமான வரி கட்டியவர் தொழிலதிபர் பின்னோக்கி. தன் வருமானத்தின் பெரும்பகுதியை அறக்கட்டளையின் மூலம் ஏழை எளியவர்களின் முன்னேற்றத்திற்காக செலவழிக்கிறார்.

( ****** )

இப்படியெல்லாம் மனசுல தோணுச்சுன்னா, அதுக்கு பேருதாங்க கனவு.

தூங்கும் போது மட்டும் கனவு காண்றவன் சோம்பேறி. முழிச்சுக்கிட்டும் கனவு காணுறவன் தான், தலைவன் - எப்படி இருக்கு இந்த பன்ச் டயலாக் ?

கனவு வேட்டை படம் பார்த்ததால, கனவ பத்தி எழுதலைங்க. CHELLA நாய்குட்டி தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருந்தாங்க.  அதுனால தான் இந்தப் பதிவு.

”பரிட்சையில கொஸ்டியன் பேப்பர் குடுத்துடுவாங்க. நானும் பேனாவ எடுத்து பதில் எழுத ஆரம்பிச்சா - கடவுளே !! எழுதவே வராது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகியும், ஒரு வரி கூட எழுதியிருக்க மாட்டேன். சூப்ரவைஸ்சர், இன்னும் 10 நிமிஷம் தான் நேரமிருக்குன்னு சொல்லுவாரு. எனக்கு படபடப்பா இருக்கும்” - அந்த நிமிஷத்துல முழிப்பு வரும். ஸ்ஸ்.. கனவு !!!. பெரும்பாலும் இந்தக் கனவு, பரிட்சை முடிஞ்சு 2 அல்லது 3 நாட்களுக்கு அப்புறம் தான் வரும். என்னக் காரணம்னு தெரியலை.

நமக்கு புடிச்ச மாதிரி ஒரு சம்பவம் கனவா வரணும்னா, தூக்கம் வர்றத்துக்கு முன்னாடி, அதாவது, மூளை தூக்கத்த தொடங்குறத்துக்கு முன்னாடி உள்ள நிலையில அந்த சம்பவத்தை நினைக்க வேண்டுமாம். கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, கரெக்ட்டா மூளை தூங்கத் தொடங்குற நேரத்துல எப்படி நினைக்குறதுன்ற டெக்னிக் யாருக்காவது தெரியுமா ? தெரிஞ்சா சொல்லுங்க.

மத்தபடி, நிறைவேறாத ஆசைகள் தான் கனவா வருதுன்னு சில பேரும், கனவு என்பது உணர்ச்சிகளின் வடிகால்னு சில பேரும் ( இப்ப நீ என்ன சொல்ற சண்முகமணின்னு சுந்தரகாண்டம் பட டயலாக் மாதிரி கேட்காதீங்க) சொல்றாங்க.

ஒவ்வோரு கனவுக்கும் ஒவ்வொரு பலன் இருக்காம். கனவு ஜோசியம்னு பெரிய சைஸ் புஸ்தகம் எல்லாம் இருக்கு. நேரம் இருந்தா படிச்சு பாருங்க.

கனவு காணுங்கள் !!

16 பின்னூட்டங்கள்:

ஸ்ரீராம். said...

கனவில் மட்டுமே காண முடியும் இன்பங்கள்... சென்னையின் அழகை சொல்கிறேன்...

Manickam said...

கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் கூறியுள்ளார். நிச்சயம் கனவு நிறைவேறும். கர்ம வீரர் காமராஜ் போன்று தன்னலம் தன் குடும்ப நலம் பேணாது பொது நலம் காக்க ஒரு தலைவர் தமிழ்நாட்டில் தோன்றுவார்.

Chitra said...

மத்தபடி, நிறைவேறாத ஆசைகள் தான் கனவா வருதுன்னு சில பேரும், கனவு என்பது உணர்ச்சிகளின் வடிகால்னு சில பேரும் ( இப்ப நீ என்ன சொல்ற சண்முகமணின்னு சுந்தரகாண்டம் பட டயலாக் மாதிரி கேட்காதீங்க) சொல்றாங்க.


.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,.... செம காமெடியா எழுதி இருக்கீங்க..... கலக்கல் பதிவு!
இருங்க ஒரு நிமிஷம். கிள்ளி பார்த்துக்குறேன்...
ஆமாம், இது கனவு இல்லை.... நிஜமாக சிரிக்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா....

நாஞ்சில் பிரதாப் said...

அந்த பரிச்சை எழுதுறமாதிரி கனவு எனக்கம் வந்துருக்கு பின்னோக்கி...நீங்களாவது பரிட்சை ஹால்ல உக்காந்திதுட்டீங்க...நான் பரிட்சைக்குபோறதுக்கே லேட் பண்ணிட்டேன்...

அப்ப அய்யா அப்துல் கலாம் காண சொன்னது இந்தக்கனவைத்தானா???

வானம்பாடிகள் said...

/ஒவ்வோரு கனவுக்கும் ஒவ்வொரு பலன் இருக்காம். கனவு ஜோசியம்னு பெரிய சைஸ் புஸ்தகம் எல்லாம் இருக்கு. நேரம் இருந்தா படிச்சு பாருங்க./

அதப் படிச்சிட்டு அப்புறம் 10 நாளைக்கு தூக்கமே வராம ஆயிட்டா:))

பின்னோக்கி said...

நன்றி

* ஸ்ரீராம் - அப்படிப்பட்ட காலநிலை இருந்தால் எப்படி இருக்கும் என அடிக்கடி நினைத்துப்பார்ப்பேன்.

* மாணிக்கம் - நம்பிக்கையே வாழ்க்கை. நீங்கள் சொல்வது போல ஒருவர் வந்தால் மகிழ்ச்சி அனைவருக்கும்.

* சித்ரா - கதையில்லை நிஜம் மாதிரி கனவு இல்லை நிஜம் :)

* நாஞ்சில் - உங்களுக்கும் இதே கனவா ?. அதிசயமாக இருக்கிறது.

* வானம்பாடிகள் - சார் ! எப்படி ? இப்படி யோசிக்கிறீங்க :)

நாய்க்குட்டி மனசு said...

நன்றி பின்னோக்கி
சென்னை - மிக அழகான, அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு நகரம். இதன் சிறப்பு, இங்கு நிலவும் வெப்ப நிலை. குளிர்காலத்தில் 15 டிகிரியாகவும், வெயில் காலத்தில் 28 டிகிரியாகவும் இருக்கிறது. //
ஊட்டிக்கு சென்னைன்னு பெயரை மாத்திடலாமா?

கலாநேசன் said...

//இந்தியாவின் அடுத்த பிரதமராக ******** தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.//

எதுக்கு இத்தனை ஸ்டார்கள். சிம்பிளா என் பேர் எழுதி இருக்கலாம்.

நல்ல கனவு ......

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

தூள்

பின்னோக்கி said...

நன்றி

* நாய்க்குட்டி மனசு - பேர மாத்துற ஐடியா நல்லாயிருக்கு.

* கலாநேசன் - உண்மையா சொல்லுங்க. உங்களுக்கு பிரதமரா ஆகவேண்டும் என்று ஆசை இருக்கிறதா ??? :)

* கீதப்ப்ரியன்

Eswari said...

எங்க அம்மா கனவுல எதாவது கல்யாணம் வந்தா அவங்க வீட்டுல யாரோ சாக போறாங்க, இவங்க வீட்டுல யாரோ சாக போறாங்க ன்னு புலம்பிகிட்டே இருப்பாங்க. சில சமய அதுவும் நடக்கும்.

Jayadeva said...

I wrote my last exam in 1996, and that too my last Exams in Tamil, History were in 1989. Yet, even now I am getting dreams like I had to appear for a Tamil exam and then only they will give my degree certificate to continue my job, otherwise my job is at risk!! [It is never English or Mathematics which even now I can write and get through, but Tamil and History are not easy]. //நமக்கு புடிச்ச மாதிரி ஒரு சம்பவம் கனவா வரணும்னா, தூக்கம் வர்றத்துக்கு முன்னாடி, அதாவது, மூளை தூக்கத்த தொடங்குறத்துக்கு முன்னாடி உள்ள நிலையில அந்த சம்பவத்தை நினைக்க வேண்டுமாம். // No way you can control what you are going to dream. It is absolutely beyond ones control. Your thoughts, fears, expectations, anticipations all are responsible for the dream, but what you will see in a particular dream is not in you hands.

Jayadeva said...
This comment has been removed by the author.
அமுதா said...

சென்னை கனவு நல்லா இருந்தது. எனக்கு இப்பல்லாம் என் பொண்ணுங்க கனவைக் கேட்க சந்தோஷமா இருக்கு சாக்லேட் , தேவதைகள், டினோசர் என்று அவர்கள் கனவுகள் வெகு சுவாரசியம். அந்த மாதிரி கனவு வேணும்னு எனக்கொரு கனவு :-) சரி... நிறம், கனவுனு ஜாலி ரூட்ல பதிவா கொட்டுது. சுவாரசியமா இருக்கு தொடருங்கள்...

பின்னோக்கி said...

நன்றி

* ஈஸ்வரி - என்னங்க இப்படி பயமுறுத்துறீங்க :)

* ஜெயதேவா - கனவு பற்றி நீங்கள் சொன்ன விஷயத்திற்கு என் நன்றிகள்.

* அமுதா - குழந்தைகளின் கனவும் வாழ்வும் அற்புதம். கேட்க நன்றாக இருக்கிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

நேத்து என் கனவுல வந்து நீங்க திட்டுனீங்க...!

கனவுகள் சுகமான பயணம் சிலநேரம் எதிர்பாராவிதமாக நம் நிஜ வாழ்க்கையிலும் கிராஸ் ஆகி விபத்துகளும் உண்டு...