24 July 2010

ஆண்களுக்கு நீலம் ! பெண்களுக்கு ?

பெரும்பான்மையான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விருப்பமான நிறம் என்ன ? என்று ஒரு உலகளாவிய அளவில் ஆராய்ச்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள், வெவ்வேறு நாட்டிலிருந்து கலந்து கொண்டனர்.

முடிவில் பெரும்பான்மையான ஆண்களுக்கு நீலம் மற்றும் அதனைச்சார்ந்த நிறங்களும் பிடித்தமானவையாக இருந்தது. பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிறம்.


இந்த முடிவின் அடிப்படையில், பல நிறுவனங்கள், தங்களின் தயாரிப்பு பொருட்களின் நிறத்தை முடிவு செய்தனர்.

எப்படி உலகம் முழுவதும் இப்படி நிறத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையேயான ஒற்றுமை ?. பதில்.பரிணாம வளர்ச்சியில் இருந்தது.

மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில், ஆண்களுக்கு வேட்டையாடுதலும், பெண்களுக்கு குழந்தைகளை பேணும் கடமையும் இருந்தது. வேட்டையாட நல்ல காலநிலை அவசியம். அதனால், கருமையான மழை மேகங்கள் இல்லாத நீல வானம், அவனுக்குப் பிடித்த மற்றும் அவசியமான ஒன்றாக இருந்தது.

பெண்கள், உணவுத்தேவைகளுக்காக, நன்றாக பழுத்த சிவப்பு நிற பழங்களை சேகரிப்பதில் ஈடுபட்டனர். இந்த இரண்டு நிறங்களும் வாழ்வியல் சார்ந்த நிறங்களாக, மரபணுக்களில் பதிந்தது.  அது இன்றும் தொடர்கிறது.

எனக்குப் பிடித்த நிறம் நீலம். சட்டையில் இருந்து கார் வரை இந்த நிறத்தையே தேர்ந்தெடுப்பேன்.

உங்களுக்குப் பிடித்த நிறம் எது ?

நன்றி: இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்ட, காபி குடிப்போர் சங்கப் பிரதிநிதிகளுக்கு.

14 பின்னூட்டங்கள்:

ஜெகதீஸ்வரன். said...

Pink பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றவை புதியது.

நாஞ்சில் பிரதாப் said...

நல்லாத்தான் ஆராய்ச்சி பண்றாய்ங்க...... கா.கு.ச.

ஆ.ஓ.அ.ச(ஆபிசில் ஓபி அடிப்போர் சங்கம்) விட நல்லா முன்னேறிடிச்சே.....


எனக்கு பிடிச்ச கலர் பச்சை.... ஆனா பச்சை பச்சையா பேசமாட்டேன்...:))

பின்னோக்கி said...

நன்றி - ஜெகதீஸ்வரன்

நன்றி - நாஞ்சில் - எதிர்பார்த்த கலர் தான் :)

தமிழ் அமுதன் said...

நல்ல ஆராய்சி ...!


எனக்கு கருப்பு...!

Chitra said...

I like yellow and green. :-)

சுரேஷ் கண்ணன் said...

முன்பொரு பதிவில் எழுதியது.

நீலம்.. நீலம்.. நீலம்... இந்த நிறத்தைத் தவிர வேறு எந்தவொரு நிறத்தையும் என்னால் யோசிக்கவே முடியாது. பல்துலக்கும் பிரஷ்ஷில் இருந்து உள்ளாடை சமாச்சாரம் வரை நீலத்தில்தான் தேர்ந்தெடுப்பேன். (படங்களிலும் நீலமா என்று கேட்கக்கூடாது). அதுவும்தான். ஹிஹி.
http://pitchaipathiram.blogspot.com/2009/06/blog-post_14.html

அப்படியே பிளாக்கின் பின்னணி நிறத்தையும் கவனியுங்கள். :)

வார்த்தை said...

//மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில், ஆண்களுக்கு வேட்டையாடுதலும், பெண்களுக்கு குழந்தைகளை பேணும் கடமையும் இருந்தது. வேட்டையாட நல்ல காலநிலை அவசியம். அதனால், கருமையான மழை மேகங்கள் இல்லாத நீல வானம், அவனுக்குப் பிடித்த மற்றும் அவசியமான ஒன்றாக இருந்தது.

பெண்கள், உணவுத்தேவைகளுக்காக, நன்றாக பழுத்த சிவப்பு நிற பழங்களை சேகரிப்பதில் ஈடுபட்டனர். இந்த இரண்டு நிறங்களும் வாழ்வியல் சார்ந்த நிறங்களாக, மரபணுக்களில் பதிந்தது. அது இன்றும் தொடர்கிறது.//

inthu unmaiya illa ka.ku.sa hypothesisaa?

பின்னோக்கி said...

நன்றி

தமிழ் அமுதன் - நல்ல நிறம்.

சித்ரா - பச்சைக்கலர் எனக்கும் பிடிக்கும்.

சுரேஷ் கண்ணன் - :). உங்களின் அந்தப் பதிவினைப் படித்திருக்கிறேன்.

வார்த்தை - hypothesis இல்லைங்க. இணையத்தில் துழவிப்பார்த்த போதும், இதன் அடிப்படைக் காரணம் ஆதிமனிதனின் வாழ்க்கை முறைதான் என்றிருந்தது. பெரும்பாலனவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிறம் ஏன் பிடித்திருக்கிறது என்பதற்கான விடையாக வல்லுனர்கள் கண்டறிந்தது. உண்மையா ? யாருக்கும் தெரியாது.

வானம்பாடிகள் said...

லாவண்டர், கரும்பச்சை:)

ஸ்ரீராம். said...

எனக்குப் பிடித்த நிறம் சட்' டென சொல்லத் தெரியவில்லை. மனைவியைக் கேட்டேன். ரோஸ் என்று பதில் வந்தது..!

Manickam said...

எனக்குப்பிடித்த நிறம் நீலம். எனக்குத்தேவையான பொருட்களை வாங்கும்போது நீல நிறத்தையே நான் தேர்வு செய்வேன். என் மனைவியும்(துணைவியும் அவளேதான்) பிள்ளைகளும் என்னை கேலி செய்வர். இதைப்படித்தபின் சந்தோஷமாக உள்ளது. நன்றி! நன்றி!!
மா.மணி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பரே,
எனக்கு எல்லா நிறமுமே பிடிக்கும்,ஒண்ணு கவனிச்சீங்கன்னா புரியும்,ஆண்கள் போடும் டியோடரண்ட் நீல ஷேடில் இருப்பதையும் பெண்கள் போடும் டியோடரண்ட் பின்க் ஷேடில் இருப்பதையும்..குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நிறமும் பின்கு தான்.

கலரை பற்றி உளவியல் ரீதியா பேசனும்னா பேசிக்கிட்டே போகலாம்.

ப்ரியமுடன் வசந்த் said...

கருப்பும்,நீலமும் ...

கார்பன் கூட்டாளி said...

எனக்கும் நீலம் தான் பிடிக்கும் ஆனால் இதில் இடப்பட்டுள்ள காரணம் தான் சற்று வித்தியாசமாக இருக்கிறது.