கூகிளார்
பிரெஞ்சு புரட்சி
ஆண்டு ?
கூகிளாரைக் கேள்
பிரேம் நசீரின் 60வது
படம்?
கூகிளாரைக் கேள்
அம்மா எங்கே ?
கூகி
என்று சொல்லி
சுதாரித்தேன்
தொடர்கதை
அந்த கால
தொடர்கதை
தைக்கப்பட்டு மொத்தமாக
கிடைத்தது பரணில்
கதையை விட
சுவாரசியம்
துணுக்குகளும்
விளம்பரங்களும்
22 பின்னூட்டங்கள்:
அழகான வரிகள்...
Super
கவிதைன்னா என்ன?
கேபிளாரை கேள்
:)))))))
சங்கர் - கேபிளார் தான் வழிகாட்டி எண்டர் கவிதைகளுக்கு :)
நன்றி
Sangkavi
T.V.R
இப்ப வீட்ல இருந்துட்டு கூகிளையும், பழைய கதைகளும் படிச்சுட்டு இருக்கீங்களா?
கவிதைகள் நல்லாருக்கு..
அந்த துணுக்குகளையும் கொஞ்சம் பகிர்ந்துக்கிட்டா நல்லா இருக்கும்.
கால் சரியாயுடுச்சா?
நல்லாருக்குங்க.
/முகிலன் said...
கால் சரியாயுடுச்சா?//
முதல்ல உங்க கை சரியாயுடுச்சான்னு இடுகை போடுங்க முகிலன். :))
முதல் கவிதை நடந்தாலும் நடக்கும்..:)
ச,சரியான இரண்டு கவிதை நண்பரே,
அம்மா, எனக்கும் உரைத்தது.
-------------------
இரண்டாம் கவிதையும் கண்கூடாக உணர்ந்திருக்கிறேன்.80 களில் வந்த தொடர்கதைகளை பைண்டு செய்து வைத்திருந்தேன்
அப்போது வந்த சாலிடர் , டயனோரா, மிருகம்,திருடரை விரட்டும் அசெம்பிள்டு துப்பாக்கி ரவைகளுடன், கல்யாணி கவரிங், ஹார்லிக்ஸ் விளம்பரங்கள்,ஜண்டூ பாம், பிளாக் அண்ட் ஒயிட் விளம்பரங்களை பார்த்து வியப்பேன்.
சூப்பர்,,, இன்னும் ரெண்டு போட்டுருக்கலாமே,,,,
கூகுளாண்டர் கவிதை டாப்பு
கதையை விட
சுவாரசியம்
துணுக்குகளும்
விளம்பரங்களும் ...so true.அந்த எழுத்து நடை புரிய கஷ்டமா இருக்கும். ஆனால் விளம்பரங்கள்....துணுக்குகள்.....நல்லா இருக்கும் .. அப்பாவுக்கு தெரியாமல் அந்த புத்தகங்களை பார்த்து, தொட்டாலே, நொறுங்கி விடும் அந்த காகிதங்களை தொட்டு.....
ரெண்டு கவிதையும் பிடிச்சிருக்கு பின்னோக்கி.ரெண்டாவது கவிதை ரொம்ப..
நான் கூட ‘கடல் புறா’ வை இப்படித்தான் படித்தேன். குமுதத்தில் 25 வருடங்களுக்கு முன் தொடர்கதையாக வந்திருந்தது.
இந்த கால
பல்சுவை இடுகைகள்
தைக்கப்பட்டு மொத்தமாக
கிடைக்குது ப்ளாக்கரில்
இடுகைகளை விட
சுவாரசியம்
பின்னுட்டங்களும்
கும்மிகளும்
\\அம்மா எங்கே ?
கூகி
என்று சொல்லி
சுதாரித்தேன் //
நச்சுன்னு இருக்கு .
நல்லாருக்கு..
முதல் ஒன்று உண்மை...
பழைய புத்தகங்களில் படித்த பல விஷயங்கள் இப்போது மறுபடியும் வருவது கூடப் பார்க்க முடியும்...
ரெண்டுமே சூப்பர்...
//அம்மா எங்கே ?
கூகி
என்று சொல்லி
சுதாரித்தேன்//
:)
இரண்டாவது கவித ரொம்ப உண்மை . . எக்கச்சக்கமா துணுக்குகள் படிச்சிருக்கேன் இந்தமாதிரி . .அதையெல்லாம் இப்போ நினைவுக்கு கொண்டுவந்துட்டீங்க . . அய்யய்யோ இப்போ சரக்கு அடிச்சே ஆகணுமே . . .:-)
எனக்கும் அந்தக் கால கதைகள் வாசிக்கப் பிடிக்கும்
தங்கவிலை கிராம்50 ரூபாய் என்று சொல்லிய பிறகு “அம்மாடி அநியாயத்துக்கு விலை ஏறிப்போச்சே” என்று அங்கலாய்ப்பதைப் படிக்கப் பிடிக்கும்
சம்பளம் 35 ரூபாய்
அவ்வளவா!!!!
என்று வாய்பிளந்து நிற்கும் பெண்வீட்டாரைப் பார்க்கலாம்...இது போல் நிறைய
Post a Comment