2009 ஐ நியாபகப்படுத்தி பார்ப்பது மிகக் கடினமான செயலாகப் படுகிறது. கணினித்துறையில் வேலை பார்ப்பவர்களிடம் பெரும்பாலும் என்ன தேதி என்று கேட்டால், தவறாகவே பதில் வரும். வேலை என்ற சக்கரம் பெரிய வட்டமாக சுழல, கடந்து போன நாட்கள் மறுபடியும் மாற்றமில்லாமல் வந்து, நாட்களையும் தேதிகளையும் பெரிய மாற்றங்கள் இல்லாமல் மறக்க அடிக்கச் செய்கிறது.
- வழக்கம் போல ஆண்டு ஆரம்பம் புத்தகக்கண்காட்சியில் தொடங்கியது. இன்னமும் போன புத்தகக்கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களைப் படித்து முடிப்பதற்குள் அடுத்தது வந்துவிட்டது. மொகரம் பண்டிகை போல, இந்த வருடம் இரண்டு புத்தகக்கண் காட்சிகள்.
- என் மகனை புதிய பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன். புதிய சீருடை என்ற சந்தோஷத்துடன் அடம்பிடிக்காமல் பள்ளிக்குச் சென்றான். புதிய வார்த்தைகள், பாடங்கள் மற்றும் நண்பர்கள் (பல நண்பிகள்) அவனுக்கு.
- ஜீலை மாதத்தில் பிறந்த நாள் கொண்டாடும் போது, தலையில் இருந்த வெள்ளை முடிகளில் சில, கன்னத்திற்க்கும் வந்திருப்பது தெரிந்தது.
- என் மகனுக்கு இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது என்று தெரியாது. ஆனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி, பள்ளிக்கூடத்தில், சுதந்திரப் போராட்டம் பற்றி தமிழில் ஒரு கட்டுரை பிரிண்ட் அவுட் எடுத்து வரச் சொன்னார்கள். விக்கிப்பீடியாவில் தேடிய போது ஆங்கிலத்தில் தகவல்கள் கிடைத்தது. வேறு வழியில்லாமல் தமிழில் மொழி பெயர்த்து, NHM Writer மென் பொருளை நிறுவி, தட்டுத்தடுமாறி இரண்டு நாட்களில், இரண்டு பக்கங்கள் அடித்துக் கொடுத்தேன். அப்பொழுது தோன்றியது இந்த ப்ளாக். அதற்குப் பின் நடந்தது சரித்திரம் (???!!!). அது அனைவரும் அறிந்ததே. ஆரம்ப நாட்களில் எழுத நிறைய விஷயங்கள் இருக்க ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகளைப் போட்டு, இப்பொழுது எதைப் பற்றி பதிவு எழுத எனத் தெரியாமல், இது போல பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கிறேன். ”இந்த அளவுக்கு உனக்கு எழுதத் தெரியுமா” என்று பலருக்கு ஆச்சரியம். எனக்கும். டைரி எழுதும் பழக்கமில்லாத எனக்கு ப்ளாக் நல்ல டைரியாக இருக்கிறது.
- 2008 ஆம் ஆண்டு அளவுக்கு இல்லாமல், மழைக் காலங்கள் நிம்மதியாக கழிந்தது.
- உலகளாவிய பொருளாதார நெருக்கடி மனதில் கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தியது.
- நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்தேன். பாலகுமாரனின் “இரும்புக் குதிரைகள்”. அகதா கிறிஸ்டியின் சில துப்பறியும் நாவல்கள், லயன், முத்து காமிக்ஸ், ஆங்கிலத்தில் வெளிவந்த லக்கிலூக் காமிக்ஸ் தவிர வேறு எதுவும் இந்த ஆண்டு படிக்கவில்லை.
- டிசம்பர் மாத இறுதியில் என் மாமா (அம்மாவின் தம்பி) மறைந்து போனார். அடுத்த சில நாட்களில், காலை உடைத்துக் கொண்டதால், பார்க்க வேண்டிய “அவதார்” திரைப்படமும், போய்வர விரும்பிய “புத்தகக் கண்காட்சி” யையும் தவற விட்டேன், விடுகிறேன்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
26 பின்னூட்டங்கள்:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!
புத்தகக் கண்காட்சி அனுபவம் எனக்கும்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
சீக்கிரம் கால் குணமடைய என் பிரார்த்தினைகள் !!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
இவ்வாண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்பின் பின்னூக்கி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
2009 அலசல் நன்று - 2010 சிறப்பாக அமையும்
புத்தாண்டு வாழ்த்துக்கள் பின்னோக்கி. இந்த ஆண்டு கிரிக்கெட் விளையாடாம சமத்தா இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்...:-)
புத்தாண்டு வாழ்த்துக்கள்
* ராமலஷ்மி
* ஸ்ரீராம்
* ராம்பிரகாஷ்
* கலகலப்ரியா - போன வாரத்தில் பதிவுலகத்தை சுறுசுறுப்பாக வைத்ததற்கு நன்றி :)
* வசந்த்
* அத்திரி
* முகிலன்
* சீனா
* நாஞ்சில் - கிரிக்கெட்னா என்னங்க ?. எப்பவோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு :)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இனி வரும் காலம் இனிய காலமே ,புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் பின்னோக்கி... :)
இப்படிக்கு,
பின்னோக்கியை நேக்கும் முன்னோக்கி!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஜெயந்தி
கார்த்திக்
கலையரசன் - வாங்க கலை. நல்லவரா ? கெட்டவரான்னு தெரியலையே ? :)
இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.
valthukkal
regards
www.hayyram.blogspot.com
இவ்வாண்டு
சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்
இடுகை டைரி போன்றது. நூறு சதவிகித உண்மை.
சரித்திரம் பற்றி தேடிய போது ஒரு சோர்வு வந்து இருந்ததே, வந்து இருக்குமே? அது தான் இந்த நிமிடம் வரைக்கும் இழுத்துக்கொண்டே செல்கிறது.
அனுபவப்பட்டவன்.
நன்றி
* S.A. நவாஸுதீன்
* hayyram
* நினைவுகளுடன் -நிகே
* ஜோதிஜி - சரித்திரத்தில் சில எனக்கு உடன்பாடில்லாத விஷயங்களிலிருந்து விலகியிருக்க நினைத்தேன். மற்றபடி வேறு காரணம் இல்லை. வேறு வரலாறு ஆரம்பிக்கும் போது இணைந்து கொள்ள ஆர்வம்.
நல்ல நினைவு திரும்பல்.புத்தாண்டு வாழ்த்துக்கள்
கிருபாநந்தினி கட்டுரையைப் பார்த்து ஆச்சரியப்பட்ட உங்களுக்கு மேலும் ஆச்சரியம் தர் :
http://lathananthpakkam.blogspot.com/2008/06/blog-post.html
http://lathananthpakkam.blogspot.com/2009/07/blog-post_18.html
தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்.
//அப்பொழுது தோன்றியது இந்த ப்ளாக். அதற்குப் பின் நடந்தது சரித்திரம் (???!!!).//
சொல்லவேயில்ல.....இன்றைய சம்பவம் நாளைய சரித்திரம்,
நடத்துங்க
யாசவி
புத்தாண்டு வாழ்த்துக்கள். கால் எப்படி இருக்கு? புது வருடம், புது ஆசிர்வாதங்களோடு இருப்பதாக.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (ரொம்ப லேட்டோ???)
\\என் மகனை புதிய பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன்.//
நான் இந்த நாள் எப்போது வரும் என்று எதிர் பார்கிறேன் பாஸ் .
Post a Comment