சின்ன வயதில் மிகப் பெரிய ரஜினி ரசிகனான என்னை, கமல் ரசிகனாகவும் மாற்றிய படம் “நாயகன்”. எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்பது நினைவிலில்லை. தியேட்டரில் முதல் நாள், முதல் ஷோ பார்த்த ஒரே படம் இது. பல வருடங்கள் கழித்து, நாயகன் படம், God Father என்ற ஆங்கிலப் படத்தில் மார்லன் பிராண்டோ என்பவர் செய்த கதாப்பாத்திரம் போலவே இருந்தது என கேள்வி பட்டிருக்கிறேன் (இத்தனை வருஷம் ஆச்சா இதைக் கண்டுபிடிக்க எனக் கேட்காதீர்கள்.).
இரண்டு படங்களும், தாதாக்களைப் பற்றிய படம் என்ற அளவிலே மட்டுமே ஒற்றுமை என்று இன்று வரை (மதியம் 2 மணி வரை) நினைத்திருந்தேன். God Father படத்தின் முதல் காட்சியைப் பார்த்ததும், இது நாயகன் படத்தில் வரும் காட்சி போலவே இருக்கிறதே என்று நினைத்தேன். பல ஆச்சரியங்களை கொடுத்தது. இரண்டு படங்களுக்குமான சில ஒற்றுமைகள் இதோ.
நாயகன் - உயர் போலீஸ் அதிகாரி, தன் மகளை சீரழித்த பெரிய வீட்டு பசங்களை பழிவாங்க உதவி கேட்பார். God Father-ன் முதல் காட்சி இது. அதே காரணம். அதே போல பழி வாங்க உதவி கோருகிறார்.
நாயகன் - கமலை ஏமாற்றி வீட்டுக்கு வெளியே வரவழைத்து, மனைவி சரண்யாவை வில்லன்கள் கொன்று விடுவார்கள். God Father-ல் அல் பேசினோவின் மனைவியை, கூட இருக்கும் ஒருவனே வில்லனுக்கு உதவி செய்து, காரில் பாம் வைத்து கொன்றுவிடுகிறார்கள்.
நாயகன் - மகன் இறந்தது தெரியாமல் எழுந்து வரும் கமல், தன் மகன் உடலைப் பார்த்துவிட்டு அழுவார். God Father-ல் இதே காட்சி அப்படியே இருக்கிறது.
நாயகன் - தன் மனைவி இறந்தவுடன் அஸ்தியைக் கரைக்கும் போது, வில்லன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக கொல்லப்படுவதைக் காட்டுவார்கள். God Father-ல் தன் அப்பா இறந்தவுடன் அல் பேசினோ, சர்ச்சில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவில் இருக்கும் போது, வில்லன்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுவார்கள். அந்த வில்லன்கள் இறக்கும் விதம், அப்படியே நாயகனில் வில்லன்கள் இறக்கும் விதத்தைப் போலவே இருக்கும்.
- போலீஸ்காரருடன் கமல் சுத்தியல் வைத்து சண்டை போடும் போது, தண்ணீர் பம்ப் உடைந்து, தண்ணீர் நீரூற்றைப் போல வெளியியே வரும் காட்சி.
- ஜனகராஜ் மேற்பார்வையில் ஒரு இளைஞன் காரில் வைத்துக் கொல்லப்படும் போது, கார் கண்ணாடியில் அவனது கால் பட்டு கண்ணாடி உடையும் காட்சி
- திருவிழாவில், 5 தாதாக்கள் உட்கார்ந்திருக்க, கமல் அவர்களுடன் பேசும் காட்சி.
- மகள் காரை வேகமாக ஓட்டும் போது, கமல் பதறுவது போன்ற காட்சி.
- நாசரின் தலைமையில் போலீசார், கமலின் அனைத்து தொழில்களையும் முடக்கும் காட்சி.
வயதான கமல், மார்லன் பிராண்டோவின் மேனரிசங்களையும், இளைய வயது கமல், அல் பேசினோ மேனரிசங்களையும் செய்வதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. ஏன் திரைக்கதையை மணிரத்தினம் மாற்றவில்லை ?. கமல் ஏன் அவர்களைப் போலவே நடித்தார் ? என்ற கேள்விகள் தோன்றியது. மணிரத்தினம் + கமல் கூட்டணியிலிருந்து இதை எதிர்பார்க்கவேயில்லை. இவையாவும் இருந்தாலும் கமலைத் தவிர வேறு யாராலும் நாயகனில் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. இளையராஜாவின் இசையையும் மறக்க முடியாது.
ஆங்கிலப்படத்தின் கதையை, நம் டைரக்டர்கள், வேறுவிதமான திரைக்கதையுடன் எடுத்தால் கூட நன்றாக இருக்கும். புரிந்துகொள்வார்களா ?.
16 பின்னூட்டங்கள்:
நல்ல கொசுவத்தி பதிவு
ஆம் அந்த யாரடிச்சாரோ பாட்டு மெட்டு மாதிரி இ.ரா.வே நினைச்சாலும் இனி முடியாது சுகமான பாட்டு...!
இதுல இந்தப் பட்த்த ஆஸ்கருக்கு அனுப்பப் போறதா அப்போ ஒரே பேச்சு. கமலுக்கு ஆஸ்கார் நாயகன்னு பேர் வேற வச்சிட்டாங்க. ஆஸ்கர் அமெரிக்கப் படங்களுக்கு குடுக்குறது அப்படிங்குற விசயமே கமலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்குனப்போ தான் ஞாபகம் வந்துச்சி
:))
முதல் வரியை படிக்கும் போதே நினைச்சேன் ஏதோ காமெடி பீஸ் இருக்கும்ன்னு ..இதுக்குதான் அடிகடி டோண்டு ராகவன் சார் பதிவ படிக்ககூடாது பின்ன 22 வருடங்கள் என்பது உங்களுக்கு சற்று கால தாமதமா ? ஆனாலும் அண்ணே உங்களுக்கு இத்தனை வருஷம் கழிச்சு இரண்டு படங்களை ஒப்பிட்டு பார்க்கும் ஆவல் ஏன் வந்தது ?? என்னமோ போங்க கால் எப்படி இருக்கு ?
எல்லாம் சரி, இசை? அது காட்பாதை போல இல்லை ல? அங்க தான் ராசா தன்னை நிரூபிக்கிரார்.
காப்பின்னாலும் நான் ரொம்ப ரசிச்ச படம் நாயகன்.
:-)))
நன்றி - ரோமியோ பாய் - பதிவுல சொன்னதுமாதிரி இன்னைக்குதான் அந்த ஆங்கிலப்படத்தை பார்த்தேன். பதிவே படிக்கலை போல :-). சரி..சரி..
நன்றி - சின்ன அம்மிணி, வானம்பாடிகள், வசந்த்,டி.வி.ராதாகிருஷ்ணன்.
நன்றி - முகிலன் - கதை மட்டும் தான் ஆங்கிலப்படம் என நினைத்திருந்தேன். ஆனால் திரைக்கதை அப்படியே இருந்ததால் தாங்க முடியவில்ல. அதனால் இந்த பதிவு.
நன்றி -அனானி நீங்க சொன்னதை நான் பதிவுல எழுதியிருக்கேனே ? படிக்காம பின்னூட்டமா ? :-)
//22 வருடங்களுக்கு முன்பே எழுதியிருக்க வேண்டிய பதிவு, சற்று கால தாமதத்துடன் ..//
என்னது சற்று காலதாமதமா...??? 22 வருஷத்துல 5 தடவை ஆட்சி மாறியிருக்குதுங்க...ரைட்டு நீங்கதான் பின்னோக்கியாச்சே ரொம்ப பின்னால நோக்கிட்டீங்க... இருந்தாலும் பதிவு சூப்பர்...
நாயகன் படம் வந்தபுதுசுல இந்தஅளவுக்கு தொழில்நுட்பம் இல்லாததனால் காப்பி அடிக்கிறத பத்தி யாரும் இந்தஅளவுக்கு விமர்சனம் பண்ணியிருக்கமாட்டாங்க... அதான் கமல்,மணிரத்னத்தின் வெற்றி... இப்போ அதைமாதிரி பண்ணா லெப்ட் ரைட்டு வாங்கியிருவாங்க...
பின்னோக்கின்னு சரியாத்தான் தலைப்பை வச்சிருக்கீங்க...
கார்த்திக்கும் பிரபுவும் ஒரு மணிரத்தினம் படத்தில் நடித்திருப்பார்கள். அதன் கிளைமாக்ஸும் காட்பாதரில் இருந்து காப்பிதான்
சரி, காட்பாதருக்கும் தேவர் மகனுக்கும் உள்ள ஒற்றுமை பார்க்க
காட்பாதர் - நாயகன் = தேவர்மகன்
http://marchoflaw.blogspot.com/2007/05/blog-post_07.html
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் கொண்டு வர வேண்டுமென்ற முயற்சியோ என்னவோ
என்னது? மார்லன் பிராண்டோ செத்துட்டாரரரரா?
என்ன பாஸ் நீங்க.. எல்லாம் எழுதி கிழிச்சி காயவிட்டதை... திரும்பி துவைக்க ஆரம்பிச்சிருக்கீங்க??
கலையரசன், பிரபு - இந்த பதிவு எழுதும் முன் காட் ஃபாதர் என்று கூகிள் ப்ளாக் சர்ச்ல் தேடிப் பார்த்துவிட்டு பின்புதான் எழுதினேன். ஆனால் பிரபு அவர்கள் காட் பாதர் என்று எழுதியிருந்ததால், அவரின் இடுகை மிஸ் பண்ணி விட்டேன். நீங்க சொன்னது மாதிரி அவர் துவைத்துக் காய போட்டதை நான் திருப்பி காய போட்டுட்டேன் :-).
நன்றி - தர்ஷன்,நாஞ்சில்
என்னது? மார்லன் பிராண்டோ செத்துட்டாரரரரா?
என்ன பாஸ் நீங்க.. எல்லாம் எழுதி கிழிச்சி காயவிட்டதை... திரும்பி துவைக்க ஆரம்பிச்சிருக்கீங்க??//
இதை கலையே நிறைய பேர் பதிவில் போய் பின்னூட்டியுள்ளார். அப்போது நிறைய சர்ச்சை நடந்தது
அருமையான பகிரல்..
Post a Comment