01 December 2009

பரிட்சைக்கு நேரமாச்சு

இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவி, புற்றுநோயால் அவதிப்பட்டதால், வகுப்புக்களுக்கு வர இயலாமல், போதிய வருகை நாட்கள் இல்லாததால், அந்தப் பெண் வரும் மாத பரீட்சை எழுத அனுமதிக்க கிடைக்கவில்லை என செய்தி வெளியிட்டிருந்தார்கள். அந்தப் பெண் மருத்துவ ஆதாரங்கள் (புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தாலே போதும். என்ன ஆதாரம் வேண்டும் ?) கல்லூரியில் தந்தும் பரீட்சை எழுத இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இப்பொழுது நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் அந்தப் பெண்.

அந்தப் பெண்ணின் தவறு
1. ப்ராக்ஸி அட்டெனன்ஸ் எனப்படும் ஒன்றை பயன்படுத்தி வருகையை பொய்யாக 70 சதவிகிதத்திற்கு கொண்டுவராதது.
2. பிரின்ஸிபால் அல்லது கல்லூரி வாட்ச்மேனின் சித்தப்பாவின் ஒன்று விட்ட பெரியப்பாவின் தூரத்து சொந்தமாக இல்லாதது

சட்டங்களில் பல ஷரத்துக்களில் முடிவு எடுக்கும் உரிமையை அதிகாரிகளுக்கு வழங்குயிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, வருமான வரி அதிகாரிக்கு சட்டத்தை மீறி சில விதி விலக்குகளை, நன்கு ஆராய்ந்த பிறகு அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது.  இப்படி அந்தப் பெண்ணை அலையவிடாமல், சில விதிவிலக்குகளின் அடிப்படையில் கல்லூரியின் பிரின்ஸிபால் அல்லது பல்கலைக்கழக்த்தின் உயர் அதிகாரிகள் அந்தப் பெண்ணை பரீட்சை எழுத அனுமதித்திருக்கலாம்,
இதே மாதிரி நான் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, என் தந்தையின் திடீர் மரணத்தினால், 12 நாட்கள் விடுப்பு எடுக்க, அதனால் 70 சதவிகித வருகைப் பதிவு கிடைக்கவில்லை. அதற்காக என் கல்லூரி பிரின்ஸிபாலிடம் Undertaking எனப்படும் உறுதிமொழி எழுதிக் கொடுத்து விட்டு, அந்த செமஸ்டரில் பின்பகுதியில் வகுப்புகளுக்குத் தவறாமல் போய் 70 சதவிகிதம் பெற்றபின் பரீட்சை எழுத அனுமதி கிடைத்தது.

இத்தனைக்கும் என் நிலையை, எனது கணினித்துறை தலைமையாளரிடம் மற்றும் பிரின்ஸிபாலிடம் விவரித்தும், Undertaking கடிதம் தர என்னை அலைய விட்டார்கள். அப்பொழுது என் மனநிலை, அப்பாவை இழந்த சோகம் ஒரு புறம், மற்றொரு புறம் வகுப்புகளில் முதல் 2 ரேங்க் எடுத்து பல்கலைக்கழக ரேங்கில் இருந்தும், கடிதம் கொடுக்க வைக்கிறார்களே என்ற அவமானம் ஒருபுறம் (பிரின்ஸிபால் அறைக்கு செல்வதை அவமானமாகக் கருதி கல்லூரிப்படிப்பை படித்த ஒரு அப்பாவி மாணவன் நான்).

இதில் வகுப்புக்களுக்கு சாதாரணமாகவே வராமல் இருக்கும் சிலர், கடிதமும் கொடுக்காமல், பரீட்சைக்கு முதல் நாள் வேறு வழியின்றி அவர்களை கல்லூரி கடைசி நேரத்தில் பரீட்சை எழுத அனுமதித்த போது எனக்குத் தோன்றியது

“போங்கப்பா !! நீங்களும் உங்க சட்டமும்”

20 பின்னூட்டங்கள்:

வானம்பாடிகள் said...

ம்ம். இதாங்க ப்ராணாவஸ்தை. செய்ய வழி இருக்கும். என்னிய மாதிரி நடுவில இருக்கிறவன் கெடந்து அல்லாடுவான். அய்யா இது படி பண்ணலாம்னு. சரின்னு சொல்லுற நிலைமையில இருக்கிற பரதேசி ஏன் ரிஸ்க் எடுக்கணும். அலைய விடலாம்னு சொல்லுறப்ப குமட்டிகிட்டு வரும் பாருங்க. கெஞ்சாத குறையா இயலாமைய சொல்லுறப்ப வர அவமானம் இருக்கே. என்னடா பிழைப்பு இதுன்னு தோணும். அவ்வ்வ்வ்

Anonymous said...

//இப்பொழுது நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் அந்தப் பெண்.//

அங்கியாவது இழுத்தடிக்காமல் அவருக்கு நீதி கிடைக்கட்டும்.

Anonymous said...

பதிவுக்கு ஓட்டு போட்டாச்சு

நர்சிம் said...

எலோருக்கும் சட்டம் பொது

சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதில்லை

எங்கோ படித்தது..இங்கே நினைவுக்கு வருகிறது.

நல்லா எழுதி இருக்கீங்க

பின்னோக்கி said...

வானம்பாடி நீங்கள் சொன்னது 100% சரி. சட்டம் சிலருக்கு வளைகிறது. பலரைப் படுத்துகிறது.

Romeoboy said...

சட்டம் என்பது எல்லாம் அவன் அவன் இஷ்டதுக்கு மாத்திகிறாங்க. உங்க கொடுமையான நாட்களை நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கு .

அமுதா said...

:-( என்ன சட்டமோ... என்று எல்லோருக்கும் அது சமமாகக் கிடைக்குமோ?

ஸ்ரீராம். said...

உண்மைதான்...புற்று நோய் தாக்கியவர்களைக் காணும் மனத் துணிவே வராது.

புலவன் புலிகேசி said...

//1. ப்ராக்ஸி அட்டெனன்ஸ் எனப்படும் ஒன்றை பயன்படுத்தி வருகையை பொய்யாக 70 சதவிகிதத்திற்கு கொண்டுவராதது.
2. பிரின்ஸிபால் அல்லது கல்லூரி வாட்ச்மேனின் சித்தப்பாவின் ஒன்று விட்ட பெரியப்பாவின் தூரத்து சொந்தமாக இல்லாதது//

சரியா சொன்னீங்க...படிக்கிற பொண்ணு இதெல்லாம் பண்ணனும் (?) இல்லையா...நம் நாட்டில் சட்டங்கள் எல்லாம் இயலாதவர்களுக்கும், நேர்மையாளர்களுக்கும்தான்..

Eswari said...
This comment has been removed by the author.
Eswari said...

நானும் கல்லூரியில் படிக்கும் போது அப்பாவியாக தான் இருந்தேன் முதல் வருடம் மட்டும். NCC க்காக அடிக்கடி வெளியே போகும் படி இருக்கும்.
வெளியே செல்லும் போது 1 hr cut ஆனா கூட முதலில் NCC மேடத்திடம் ஒரு லெட்டர்ல sign வாங்கணும் அதை காட்டி எந்த வகுப்பை கட் அடிக்கிரோமோ அந்த Lecturerரிடம் Permission, அப்புறம் H.O.D. அப்புறம் Principal. ஒவ்வொர்த்தரும் permission தரும் போது கூடவே திட்டுகளையும் இலவசமாக தருவார்கள். Principal Permission இருந்தா தான் எங்கள் கல்லூரி வாட்ச் woman எங்களை வெளியே விடும். இப்படியெல்லாம் அப்பாவித்தனமாக முதல் மூன்று semester க்கு இருந்தோம். பின் தெளிந்து 1 hr க்கு ஒரு நாள் முழுதும் கட் அடித்துவிட்டு NCC மேடத்திடம் (அவர்களும் ஜாலி டைப் ன்னு அப்புறம் தான் தெரிஞ்சுது எங்களுக்கு) letter வாங்கி வகுப்புக்கு அனுப்பி விட்டு ஊர் சுத்துவோம்.

எல்லாத்துக்கும் experience வேணும்ல்லை!!!!!!!!

கிருபாநந்தினி said...

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் பெயர் கொண்ட சட்டக் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவிக்கே இந்த கதிங்களாண்ணா! ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்! நான் இந்த நாட்டு நிலமையைச் சொன்னேன்!

அத்திரி said...

சன(பண) நாயக நாட்டில் இதெல்லாம் சகஜம்

பிரியமுடன்...வசந்த் said...

//(பிரின்ஸிபால் அறைக்கு செல்வதை அவமானமாகக் கருதி கல்லூரிப்படிப்பை படித்த ஒரு அப்பாவி மாணவன் நான்). //

அடப்பாவி மனுசா?

ஆ.ஞானசேகரன் said...

//“போங்கப்பா !! நீங்களும் உங்க சட்டமும்”//

நல்லா எழுதியுள்ளீர்கள் நண்பா,... இதற்கு எப்படி முடிவு சொல்லுவது??????

அமுதா கிருஷ்ணா said...

ஹும்..என் அப்பா இறந்த இரண்டாவது நாள் எனக்கு செமஸ்டர் எக்ஸாம்(முதுநிலை)..என் புரஃப்ஸர் தினம் நான் கிளாஸில் அமரும் இடத்திலேயே நான் எக்ஸாம் எழுதுமாறு சீட் அரேன்ஞ்மெண்ட் செய்து இருந்தார்...சிலருக்கு மனசாட்சி இருக்கும் அப்பொழுது சட்டமாவது ஒன்னாவது...இப்ப பணம் தான் எல்லாத்துக்கும்...

நாஞ்சில் பிரதாப் said...

சட்டம் என்பது சராசரி மனிதனுக்காவே உருவாக்கப்பட்டது. நீங்கள் சராசரி மனிதனாக இருந்தால் கட்டுப்பட்டுத்தான் ஆகனும்.

உருப்படா சட்டங்கள், அதை பின்பற்றச் சொல்லும் உருப்படாத அதிகாரிகள்... சமயங்களில் வெறுப்புத்தான் தோன்றுகிறது. நீங்கள் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன்.
//“போங்கப்பா !! நீங்களும் உங்க சட்டமும்”//

- பாதிக்கப்பட்ட ஒருவன்.

Chitra said...

"இத்தனைக்கும் என் நிலையை, எனது கணினித்துறை தலைமையாளரிடம் மற்றும் பிரின்ஸிபாலிடம் விவரித்தும், Undertaking கடிதம் தர என்னை அலைய விட்டார்கள். அப்பொழுது என் மனநிலை, அப்பாவை இழந்த சோகம் ஒரு புறம், மற்றொரு புறம் வகுப்புகளில் முதல் 2 ரேங்க் எடுத்து பல்கலைக்கழக ரேங்கில் இருந்தும், கடிதம் கொடுக்க வைக்கிறார்களே என்ற அவமானம் ஒருபுறம் (பிரின்ஸிபால் அறைக்கு செல்வதை அவமானமாகக் கருதி கல்லூரிப்படிப்பை படித்த ஒரு அப்பாவி மாணவன் நான்). " ---------------- அப்பாவிகளுக்கு, சட்டம் ஒரு இருட்டறை.

பேநா மூடி said...

// சின்ன அம்மிணி said...

//இப்பொழுது நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் அந்தப் பெண்.//

அங்கியாவது இழுத்தடிக்காமல் அவருக்கு நீதி கிடைக்கட்டும். //

நீங்க இந்தியால தான இருக்கீங்க...

Veliyoorkaran said...

பிரின்ஸிபால் அல்லது கல்லூரி வாட்ச்மேனின் சித்தப்பாவின் ஒன்று விட்ட பெரியப்பாவின் தூரத்து சொந்தமாக இல்லாதது////
"India Today" Punch..."