23 January 2010

பெயரில் என்ன இருக்கு ?

                  
பெயரில் என்ன இருக்கு ?

பெயரில் என்னயிருக்கு ?
பிறந்ததிலிருந்து
கஸ்தூரி
பத்து வயதிலிருந்து
மாலதி
இருபது வயதிலிருந்து
ரஞ்சனி
இருபத்தியேழிலிருந்து
ஸ்ரீதேவி
பெயரைக் கேட்கும் போதெல்லாம்
தன்னிச்சையாய் திரும்புது
தலையும் கவனமும்
பெயரில் என்னவோயிருக்கிறது
எல்லாமுமிருக்கிறது

கடலில் கப்பல் போல
நினைவலைக் கடலில்
நீந்தும் கப்பலாய்
பெயர்கள்
எல்லாமுமாய் இருக்கிறது

ஆறறிவும்


ஐந்து கிலோமீட்டர் தொலைவில்
துணை எழுப்பும் ஒலி
குரங்குக்கு புரியும்
பல கிலோமீட்டர் தொலைவில்
துணை எழுப்பும் ஒலி
யானைக்குப் புரியும்
ஒலி எழுப்பும் கைப்பேசி
என்னுடையதா ?
அவனுடையதா ?

30 பின்னூட்டங்கள்:

எறும்பு said...

ரெண்டாவது அருமை

சந்தனமுல்லை said...

இரண்டாம் கவிதை - !!!

பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்களேன்!

T.V.Radhakrishnan said...

அருமை

S.A. நவாஸுதீன் said...

இரண்டுமே நல்லா இருக்கு. இரண்டாவது ஒலி கொஞ்சம் கூடுதலாவே இருக்கு

Vidhoosh said...

silent-டா போடுங்கப்பா... பத்திரிக்கைக்கு..

அகஆழ் said...

அருமை பின்னோக்கி !! முதலில் கப்பல் கவிழ்ந்திருந்தால் ரெண்டாவதில் ‘silent' ஆக இருந்திருக்குமோ !!

ரெட்டைவால் ' ஸ் said...

கவிதைகள் சுவாரஸ்யம் பின்னோக்கி சார்!

நாஞ்சில் பிரதாப் said...

முதல் கவிதை எனக்கு புரியலைங்க...
இரண்டாவது கவிதை புரிஞசதுனால சூப்பர்

வானம்பாடிகள் said...

அருமை.

சைவகொத்துப்பரோட்டா said...

முதலாவது ஆட்டோகிராப்ஐ நினைவூட்டுகிறது, இரண்டாவது நிகழ்கால குழப்பம்,
இரண்டுமே அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்லா இருக்கு..

Sivaji Sankar said...

ரெண்டுமே too Gud :)

VISA said...

இரண்டாவது ஒன்று அருமை. அட...சொல்ல வைத்துவிட்டது.

முகிலன் said...

எனக்கு ரெண்டாவது பிடிச்சிருக்கு.. அருமை..

Sangkavi said...

இரண்டு கவிதைகளும் நச்...

கண்ணகி said...

இர்ண்டில் எத்ற்கு முத்லிடம் தரலாம் என்பதில் பட்டிமன்றமே வைக்கல்லாம் போல இருக்கிறது....

Chitra said...

ஒலி எழுப்பும் கைப்பேசி
என்னுடையதா ?
அவனுடையதா ?

.....ha,ha,ha,.....

ஸ்ரீராம். said...

என்ன பழைய நினைவா?
ரெண்டாவதும் நல்லாருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

இரண்டாவது நல்லாயிருக்கு

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நண்பரே இரண்டுமே சரியான கலக்கல்.நன்றாக வந்துள்ளது

நட்புடன் ஜமால் said...

இரண்டாவது பின்னோக்கியல்ல

முன்னோக்கி ...

நாய்க்குட்டி மனசு said...

உங்களுக்கு இருபத்திஎட்டில் திருமணம் முடிந்து விட்டதா?
பெயர்கள் இருபத்தியேழில் முடிந்து விட்டதே?
நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்ம பேர் சொல்லி கூப்பிடும்போது ஒரு சுகம் கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் பழகிய பின் பேர் சொல்லி கூப்பிடுவதைக் குறைத்து விடுகிறார்கள்.

பின்னோக்கி said...

நன்றி * எறும்பு
நன்றி * சந்தனமுல்லை - ஆ.விக்கு அனுப்பினேன். அவர்களின் மெயில் பாக்ஸில் இடம் இல்லாததால், அனுப்பியது திரும்பு வந்துவிட்டது. ஆரம்பமே இப்படி :)
நன்றி * டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி * S.A.நவாஸுதீன்
நன்றி * விதூஷ்
நன்றி * அக ஆழ் - ரொம்ப யோசிக்கிறீங்க சார்.
நன்றி * ரெட்டைவால்ஸ்
நன்றி * நாஞ்சில் - புரியவில்லையா. ஆட்டோகிராப் பட ஸ்டைல்.
நன்றி * வானம்பாடிகள்

பின்னோக்கி said...

நன்றி * சைவகொத்துப்பரோட்டா - உங்கள் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் பசியெடுக்கிறது :)

நன்றி * முத்துலெஷ்மி
நன்றி * சிவாஜி சங்கர்
நன்றி * விசா - எல்லாருக்குமே 2வது பிடித்திருக்கிறது.

நன்றி * முகிலன்
நன்றி * சித்ரா
நன்றி * கண்ணகி
நன்றி * ஸ்ரீராம்
நன்றி * ஆ.ஞானசேகரன்
நன்றி * ஜமால்
நன்றி * சங்கவி
நன்றி * நாய்க்குட்டி மனசு - ஆமாங்க. சரியா சொல்லிட்டீங்க :)
நன்றி * கார்த்திக்

ஜோதிஜி said...

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை பின்பற்றி முன்னோக்கி செல்லும் போது நீங்கள் ஏன் இந்த இது போன்ற கவிதையை கைபிடித்து முன்னால் வரக்கூடாது?

காரணம் உங்கள் கவிதைகள் பலருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்களா?

சங்கமித்திரன் said...

என்ன எழவுக்கு இப்படி?
வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம்.ஐயோ,ஐயோ

Mohan said...

இரண்டாவது கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க!

அமுதா said...

இரண்டுமே அருமை.

பின்னோக்கி said...

நன்றி * ஜோதிஜி - நீங்கள் ரொம்பவும் எதிர்பார்கிறீர்கள் :). சமூக கருத்துக்கள் கவிதையின் மூலம் சொல்ல நிறைய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். இது ரசனைக்காக. அவ்வளவே.

நன்றி * சங்கமித்திரன் - திட்டுறீங்களா ? பாராட்டுறீங்களா ? ஒண்ணுமே புரியலையே :)

நன்றி * மோகன்
நன்றி * அமுதா

சிவன். said...

ரெண்டுமே ரொம்ப அருமை....
கலக்கிட்டீங்க... :)