26 June 2010

ஜெயிக்குமா இந்த படங்கள் ?

அது ஒரு காலம் - எப்ப வரும் ரஹ்மான் இசையில் வரும் கேசட் என்று தினமும் கேசட் கடைகளில் தொந்தரவு செய்தது. அதே காலகட்டத்தில், மணிரத்தினம் படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த இரண்டு எதிர்பார்ப்பும் போய் பல வருடங்களாகி விட்டது (படமோ அல்லது இசையோ தரமிழந்துவிட்டது என்று பொருள் கொள்ளாதீர்கள்)

சில வருடங்களுக்கு முன் வந்த சிவாஜி, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே போல, இப்பொழுது ஆர்வத்தைக் கிளப்பியிருக்கும் இரண்டு படங்கள்.

மதராசபட்டினம் மற்றும் ஆனந்தபுரத்து வீடு.


மதராசபட்டினம் டிரெய்லர் அந்த கால சென்னையை கண்முன் நிறுத்தியது. பெரிய (தியேட்டர்) ஸ்கிரீனில் பார்க்கும் போது, கிராபிக்ஸ் என்று நன்றாக தெரியுமளவுக்கு கிராபிக்ஸ் இருக்காது என நம்புவோம். ரொம்ப நாள் கழித்து, அழகான வெளிநாட்டுப் பெண் நடித்திருக்கும் தமிழ் படம் (நாடோடித் தென்றல் படத்து வெளிநாட்டு நாயகி மாதிரி இல்லாதது பெரிய ஆறுதல்) என்று நினைக்கிறேன்.

ஆனந்தபுரத்து வீடு, ஷங்கர் தயாரிப்பு என்ற எதிர்பார்பை விட, “விடாது கருப்பு”, “வானத்து மனிதர்கள்” மற்றும் “ருத்திர வீணை” போன்ற (நிஜமான) மர்மத்தொடர்களை இயக்கிய நாகா அவர்களின் படம் என்பதனால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஜெயிக்கும் தமிழ் படங்கள் தேவையான இந்த நேரத்தில், இவை இரண்டும் வெற்றிபெறுமா என பார்ப்போம்.

11 பின்னூட்டங்கள்:

Prathap Kumar S. said...

அப்ப நீங்க எந்திரனை எதிர்பார்க்கலையா....
அய்யய்யோ...பின்னோக்கி அது தெய்வ குத்தமாயிடும்...உடனே எடிட் பண்ணிப்போட்டுருங்க....

பின்னோக்கி said...

எந்திரன் எல்லாம் படம் வெளிய வர்றத்துக்கு முன்னாடியே (??? !!!) ஜெயிச்ச படங்கள் வரிசையில இருக்குங்க. ஏங்க இந்த 2 படமும் அடுத்த மாசம் வருதுங்க. எந்திரன் எப்ப வரும் ? எப்படி வரும்னு தெரியலையே ?

சென்ஷி said...

:)

நாகாவின் இயக்கம் என்பதாலேயே எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய படம் அனந்தபுரத்து வீடு.

geethappriyan said...

நண்பரே,
பீரியட் ஃபிலிம் எடுக்க ஒரு அற்பணிப்பு வேணும்,குறையில்லாமல் செய்தால் நன்கு எடுபடும்,அதற்கென்றே ரசிகர்கள் உண்டு,நாகா நல்ல படைப்பாளி,உங்க பாஷியில் திக் பக் பக் தான்.
எந்திரன்,[?]எவ்வளவு ஓட்டை இருந்தாலும் ஜிம்மிக்ஸ் செய்தே அடைபார் ஷங்கர்,அதை நாமும் பார்த்துவிட்டு விசிலடிப்போம்,கொடும சார்.

Unknown said...

me too waiting for அனந்தபுரத்து வீடு

ஸ்ரீராம். said...

மசாலா தடவி பிரம்மாண்டங்கள் காட்டும் ஷங்கர் இந்த மாதிரிப் படங்களை தயாரிக்க முன் வருவது வியாபாரமா, கலை ஆர்வமா, இளையவர்களை ஊக்குவிக்கும் செயலா?

அமுதா said...

இதைப் படிச்ச பிறகு எனக்கும் ஆர்வம் உண்டாகிடுச்சு

ஈரோடு கதிர் said...

பார்ப்போம்

Chitra said...

பின்னோக்கி said...

எந்திரன் எல்லாம் படம் வெளிய வர்றத்துக்கு முன்னாடியே (??? !!!) ஜெயிச்ச படங்கள் வரிசையில இருக்குங்க. ஏங்க இந்த 2 படமும் அடுத்த மாசம் வருதுங்க. எந்திரன் எப்ப வரும் ? எப்படி வரும்னு தெரியலையே ?


....... அப்படி சொல்லுங்க..... அது எப்போ வந்தாலும், ஹிட் தான்!

பின்னோக்கி said...

நன்றி

@ஷென்ஷி
@கீதப்ப்ரியன் - எதுக்குங்க வம்பு. ரஜினி ரசிகர்கள் கொதிச்சுடுவாங்க. சித்ரா பயங்கர ரஜினி ஃபேன் :)
@ஸ்ரீராம் - OPM :) (Other People's Money நிறைய செலவு பண்ணலாம். நம்ப பணம்னா :))
@கதிர்
@அமுதா
@சித்ரா - ரஜினிய எதாவது சொல்ல முடியுமா சொல்லுங்க :). சொல்லிட்டா அடுத்த பதிவு போட முடியாதுங்க

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

நாகா இன்னொரு பரிமானத்திற்கு தமிழ் சினிமாவை கூட்டிக்கிட்டு போவார் என நினைக்கிறேன்.

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/