இரண்டு நாட்களுக்கு முன், கிண்டி மேம்பாலத்தில், முன்னே சென்று கொண்டிருந்த, ஆட்டோவில் பார்த்த வாசகம் (இந்தப் புகைப்படத்தில் பாருங்கள்). சிகரெட் புகை மட்டுமே நமக்குப் பகை என அந்த ஆட்டோ ஓட்டுனர் நினைத்துவிட்டார் போல.
நேற்று, கிண்டியிலிருந்து வேளச்சேரி செல்லும் முக்கிய சாலையில், பயங்கர வாகன நெரிசல். 500 மீட்டரைக் கடக்க, கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆனது. அரை அல்லது ஒரு லிட்டர் பெட்ரோல் காலி. மில்லி மீட்டர், சென்டி மீட்டர் கணக்கில், வண்டிகள் நகர்ந்து கொண்டே இருந்ததால், இஞ்சினை நிறுத்திவைக்க முடியவில்லை. வாகன நெரிசலுக்கு காரணம் ? பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 3 அதிகமாகப் போகின்றது என்ற செய்தி கேட்டு, எல்லா பெட்ரோல் போடும் இடங்களிலும் நின்ற வாகனங்களினால் ஏற்பட்ட சாலை நெரிசல். 3 ரூபாய் மிச்சம் பிடிப்பதற்காக, அன்று அனைவரும் இழந்தது 30 ரூபாய்.