13 October 2012

திரும்பி வந்த சிங்கம்

லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வருடமாகிறது.

கடந்த ஒரு வருடத்தில் வந்த இதழ்களின் ஒரு கழுகுப் பார்வை இதோ :

டிசம்பர் - 2011 -ல் புத்தகக் காட்சியில் வெளியான இதழ் இது. முதல் முறை பெரிய சைஸில்; வண்ணத்தில் வந்த இதழ். பார்க்க மற்றும் படிக்க நன்றாக இருந்தாலும், தொடர்ந்து இது போல இதழ்களை மாதம் ஒரு முறை லயன் காமிக்ஸ் நிர்வாகியால் வெளியிட முடியுமா என்ற ஒரு கேள்வி மனதில் நிலவியது.


அந்த சந்தேகத்தைப் பொய்யாக்கி அடுத்தடுத்து சொன்ன தேதிக்கு காமிக்ஸ்கள் வர ஆரம்பித்தன.


வழக்கமாக கார்டூன் மற்றும் கௌபாய் கதைகளே லயன் மற்றும் முத்துகாமிக்ஸை ஆக்கிரமித்திருந்த சமயம் வந்த இதழ் “என் பெயர் லார்கோ”. படித்த உடன் மிகவும் பிடித்துப்போன கதாநாயகர்களுள் ஒருவராக லார்கோ மாறிப்போனார். சித்திரங்களா ? இல்லை போட்டோவா என்று ஒன்றுக்கு இருமுறைப் பார்க்கவைக்கும் அளவுக்கு அற்புதமாக வண்ணச் சித்திரங்கள் மற்றும் ஆங்கிலப் படங்களே தோல்வியடையும் வகையில் பிரம்மிக்க வைக்கும் கதைசொல்லும் திறன் என்று மிகப் பெரிய மாறுதலை தமிழ் காமிக்ஸ் உலகில் இந்த இதழ் கொண்டுவந்தது.

சற்றே ஏறக்குறைய 30-40 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு கதை, இன்று படித்தாலும் ரசிக்கவைக்கும் வகையில் இருக்குமா ? என்ற கேள்வியினைத் தகர்ந்தெறியும் கார்டூன் ஹீரோ - லக்கி லூக். நகைச்சுவையை கதைகளில் கொண்டுவருவது அதுவும் படிக்கும் போது வாய்விட்டு சிரிக்கவைப்பது என்பது மிக மிகக் கடினமான ஒரு விஷயம். ஆனால் இந்த இதழில் வந்த வண்ணமயமான இரண்டு கதைகளும் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கும் ஒரு சேர ரசிக்கும் வகையில் இருந்தது.

ரிப்போர்டர் ஜானி என்ற கதாநாயகனின் கதைகள் பெல்ஜியம் நாட்டில் மிகவும்  பிரபலமான ஒன்று. சிக்கலான துப்பறியும் கதைகள். ஒவ்வொரு இதழும் 5 லட்சங்கள் விற்பனையாகும். அந்தக் கதைகளை வண்ணத்தில், தமிழில் படிக்க இந்த புத்தகம் உதவியது.

இந்த வருடத்தில் வந்த கதைகளில் மிகச் சிறந்தது இந்த இரண்டு கதைகள். ஒன்று மிகவும் சாமன்யமான ஒரு கௌபாயின் வாழ்வில் நடக்கும் கதை. மற்றொன்று கௌபாய் கதைகளில் மிகவும் பிரபலமான கேப்டன் ப்ளூபெரி (தமிழில் கேப்டன் டைகர்). சித்திரங்கள், மனதை கனக்கச் செய்யும் கதையமைப்பு என்று இரண்டு கதைகளும் சூப்பர் ஹிட் ரகம். காமிக்ஸ் பற்றி பெரிய ஆர்வம் இல்லாதவர்களும் இந்த இரண்டு கதைகளைப் படித்தால் உடனடியாக ரசிகராக மாற்றும் வல்லமைப் படைத்தக் கதைகள் இவை. இந்தக் கதைகளைப் பற்றிய மிகச் சிறந்த விமர்சனங்கள் இதோ :

இளம்பிராயத்தில் படித்த இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் மற்றும் இரும்பு மனிதன் ஆர்ச்சி என்ற மூன்று கதாநாயகர்கள் தோன்றும் கருப்பு - வெள்ளை இதழ் இது.


கேப்டன் டைகரின் மெகா ஹிட் கதை மறுபதிப்பாக முழு வண்ணத்தின் நவம்பர் மாதம் வெளிவர இருக்கிறது - தங்கக்கல்லறை.

மேலே குறிப்பிட்டிருந்தக் கதைகளில் பல ஆங்கிலத்தில் கிடைக்கிறது. ஒவ்வொரு கதையின் விலை ரூ 250 - ரூ 500. அந்த வகையில் தமிழில் ரூ 100 விலையில் வெளியாகும் இந்தக் கதைகள் ஒரு அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். சென்னையில் டிஸ்கவரி பேலஸ் மற்றும் ebay-ல் கிடைக்கிறது.

லயன் காமிக்ஸ் பற்றி மேலும் அறிய மற்றும் வாங்க இந்தத் தளத்தைப் பாருங்கள். லயன் - முத்துகாமிக்ஸ்

2012 வருடம் போலவே 2013ஆம் வருடமும் பல தரம் உயர்ந்த காமிக்ஸ்கள் வெளிவரும் நம்பிக்கையிருக்கிறது.

3 பின்னூட்டங்கள்:

ஜோதிஜி said...

30 வருடங்களை பின்னோக்கி நினைத்துப் பார்க்கின்றேன். பைத்தியம் அலைந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றது. மந்திரவாதி மாண்ட்ரேக் நினைவில் உள்ளதா?

கிருஷ்ணா வ வெ said...

இன்னும் பலரிடம் நமது காமிக்ஸ்களை கொண்டு சேர்க்க இந்த பதிவு உதவும்.
நன்றி நண்பரே,

Unknown said...

பதிவுக்கு நன்றி. இன்னும் நிறைய பேர் அறிந்து கொள்ள உதவும். என் விமர்சனத்தை சிறந்த விமர்சனமாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி :D
இந்த லின்க்கும் சந்தா பற்றிய நிறைய விஷயங்களை சொல்லும். இதையும் பதிவுக்கு உள்ளிடலாமே
http://www.bladepedia.com/2012/07/lion-and-muthu-comics-subscription-info.