15 September 2009

பார்க்க கூடாத படம் !

எச்சரிக்கை -1 : கதையல்ல நிஜம்


1982 ஆம் வருடம், நாமக்கல், 30 வீடுகள் கொண்ட பழைய முன்சீப் கோர்ட் தெரு.
இரண்டு சின்ன பசங்க, ஒருத்தன் 8 வயசு, இன்னொருத்தனுக்கு 10 வயசு. தெரு முனையில, சுவத்துல ஒட்டியிருக்குற சினிமா பட போஸ்டர என்ன பண்றாங்கன்னு பார்ப்போம் வாங்க.

அந்த ரெண்டு பேரும் வேற யாரும் இல்லை. நானும், என் 3 வது அண்ணனும் தான். போஸ்டர்ல சென்சார் சர்டிபிகேட் “A” வ, என் அண்ணன் ப்ளேட வெச்சு, வெட்டி எடுத்துட்டான். இதை மேற்பார்வை பார்த்தது நான்.

நானும், அவனும், ரஜினி ரசிகர்கள். எந்த ரஜினி படம் வந்தாலும் எங்கள் அப்பாவிடம் சொல்லி கூட்டி போக சொல்லுவோம். அவரும், மறுப்பு சொல்லாமல் கூட்டி போவார். ஆனால் இந்த படத்திற்கு வீட்டில் தடா போட்டுவிட்டார்கள். காரணம், சின்ன பசங்க பார்க்க தேவையில்லாத படம். அதுனால முடிவு பண்ணி போஸ்டர்ல இருந்த சென்சார் சர்டிபிகேட்ட கட் பண்ணிட்டு ("A" சர்டிபிகேட் தான் காரணம்னு எப்படி முடிவு பண்ணுனோம்னு எனக்குத்தெரியலை. ஆன அந்த வயசுலயே உலக அறிவு எங்களுக்கு அதிகம்) மறுபடியும் அப்பா கிட்ட போய் படம் நல்ல படம்னு சொல்லி கூட்டிக்கிட்டு போக சொல்லி கேட்கலாம்னு ஐடியா.

வீட்டுக்கு போனதும் தான் தெரிஞ்சது, எங்க போஸ்டர் கிழிப்பு வேலைய, எங்க பள்ளிக்கூட வாத்தியார் பார்த்திட்டு, வீட்டுல போட்டுக்குடுத்துட்டார். அப்புறம் என்ன “ஏன்டா !! இஞ்சினியரோட பையன்கள் தெருவுல போஸ்டர் கிழிக்குறாங்கன்னு கேட்குற மாதிரி வெச்சுட்டீங்களே” ன்னு சரி டோஸ் வீட்டுல. கெட்டதுலயும் ஒரு நல்லது என்னன்னா, எங்க வாத்தியார் நாங்க "A" வ வெட்டி எடுக்குறத பார்த்தவர், நாங்க மொத்த போஸ்டரையும் கிழிக்குறதா நினைச்சுட்டார்.

இதனால் அறியப்படுவது என்னன்னா
  • வீடு, ஸ்கூல், வாத்தியார் வீடு, கிழிக்கப்போகும் போஸ்டர் எல்லாம் ஒரே தெருவுல இருக்கக் கூடாது.
  • நம்ம வீடு, வாத்தியாருக்கு தெரியக் கூடாது.
  •  நாம கிழிக்குற போஸ்டர் இருக்குற ஏரியா, நம்ம வீட்டுல இருந்து ரொம்ப தொலைவுல இருக்கணும்.

அப்புறம் என்ன, அந்த படத்தை, ஒரு வருடம் முன்பு (2008)ல் தான் பார்த்தேன். நல்ல படம். ஆனா 8,10 வயசுல பார்க்கத் தேவையில்லாத, பார்த்தாலும் புரியாத படம்.


சரி..சரி..படம் பேர இன்னம் சொல்லலைன்னு பயங்கர கடுப்பில் இருப்பவர்களின் நலம் கருதி சொல்கிறேன்.

படத்தின் பெயர் : புதுக்கவிதை
நடிகர்கள்           : ரஜினி, ஜோதி, சரிதா, டெல்லி கணேஷ்.

படத்தின் கடைசி ட்விஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்.

எச்சரிக்கை - 2 : எங்களிருவரின் அட்டகாசங்கள் தொடரும் பதிவுகளில் ...

5 பின்னூட்டங்கள்:

geethappriyan said...

நண்பர் பின்னோக்கி. நல்ல அனுபவ பகிர்வுங்க
இந்த படத்தில் வரும் ரயில் சேஸிங் சீனும்,எல்லா பாடல்களும் அருமையாய் இருக்கும்.
இந்த படத்துக்கு ஏன் A சர்டிபிகேட் கொடுத்தார்கள்?
கொடுமைங்க..

நான் நீங்கள் சொன்ன ஹீட், ஸ்பானிஷ் ப்ரிசனர்,பார்த்தேன்,அருமையான படங்கள்,கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.

Unknown said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

பின்னோக்கி said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் - அப்போ A சர்டிபிகேட் கொடுக்குறத்துக்கான வழி முறை என்னன்னு தெரியலை. ஒ ! படங்கள் பார்த்துவிட்டீர்களா ?. உங்கள் பதிவுக்கு காத்திருக்கிறேன். கை வசம் நிறைய படங்கள் இருக்கிறது. உங்கள் பதிவின் பின்னோட்டத்தில் சொல்கிறேன்.

நையாண்டி நைனா said...

பேருக்கேத்த மாதிரியே... பின்னே போய்ட்டீங்களே...

ARAN said...

புதுகவிதை அருமையான ரஜினி படம் பாடல்கள் ஓவொன்றும் இன்றும் தேனாக இருக்கும்.பகிர்வுக்கு நன்றி.