14 September 2009

வானத்து மனிதர்கள் - எதுவும் நடக்கும்.


அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு மலைக்கிராமம். அங்குள்ள பழங்குடி மக்கள், அந்த காட்டுக்குள் இருக்கும் மரங்களை தன் முன்னோர்களாக பார்க்கிறார்கள். இறப்பவர்கள், அந்த காட்டினுள், மரமாக மாறி விடுவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

அங்கு புதிதாக வரும் பாரஸ்ட் ஆபிஸர், வன விலங்குகளைப் பற்றி ஆவணப்படம் எடுக்கும் அவரின் தம்பி ஆகியோருக்கு, அந்த காட்டில் இருப்பதாக நம்பப்படும், நினைப்பது எதையும் கொடுக்கும், நடமாடும் கற்பக மரத்தைக் காண ஆவல்.

கற்பகதரு மரத்தை அடையாளம் கண்டு கொள்ள, அந்த காட்டுக்குள் இருக்கும், வயதான தோற்றத்தில், சிலர் கண்ணுக்கு மட்டுமே தென்படுகிற வானத்து மனிதர்கள் எனப்படுகிற சித்தர்கள் உதவி வேண்டும்.

இந்த கதைக்களத்தை அற்புதமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் நாகா . மர்மத்தொடர் எடுப்பது இவருக்கு கை வந்த கலை. மர்ம தேசம், விடாது கருப்பு போன்றவை, இவர் இயக்கிய மற்றத் தொடர்கள்.

மர்மத்தொடர் என்றால் பார்ப்பவர்களை, திடீரென எழும்பும் இசை மற்றும், கதாப்பாத்திரங்களின் பயம் கலந்த கதறல் ஆகியவற்றின் மூலம் பயப்பட வைக்க வேண்டும் என்ற வழக்கமான பார்முலாவை தொடாமல், காட்சி அமைப்பு மற்றும் கதை சொல்லும் யுக்தி வழியே, பார்ப்பவர்களின் மனதில் பய உணர்ச்சியை, ஆர்வத்தைக் கிளப்ப வைப்பார்.

  • மூப்பர் என்ற கதாபாத்திரத்தில் 100 வயது கிழவராக பூவிலங்கு மோகன் (பல வாரங்களுக்கு இவர் தான் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அற்புதமான நடிப்பு)
  • சித்த வைத்தியராக சுபலேகர் சுதாகர்
  • வளையல், பொட்டு போன்ற பொருள்களை விற்பவராக ராஜேஷ்வர். என்ன ஒரு இயல்பான நடிப்பு !!
  •  ஆவணப்படம் எடுப்பவராக மோகன் வைத்யா
  • அருமையான, அமானுஷ்யமான, அடர்ந்த, பசுமையான காடு இந்த காட்டிற்காகவே இந்த தொடரைப் பார்க்கலாம்.
  •  மறக்காமல் டைட்டில் இசையைக் கேளுங்கள்.

நாகாவின் பலத் தொடர்கள், RAJSHRI.COM  என்ற இணையதளத்தில் இலவசமாக பார்க்கலாம். வழக்கமான மெகா சீரியல் பார்த்து பாழான கண்களுக்கு இத்தொடர் ஒரு அரு மருந்து.

நாகா இப்பொழுது இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் ஒரு திரைப்படம் எடுத்து வருகிறார். காத்திருப்போம்.

9 பின்னூட்டங்கள்:

சந்தனமுல்லை said...

மர்மதேசம் பார்த்திருக்கிறேன் - பார்த்து பயந்திருக்கிறேன்....:)) சுட்டி பற்றிய தகவலுக்கு நன்றி!

தேவன் மாயம் said...

நண்பரே!!தகவலுக்கு நன்றி

RAMG75 said...

வானத்து மனிதர்கள், பல்சுவை நாவலில் டிசம்பர் - 1 - 2014 ஆம் தேதி மூன்று பகுதிகளும் வெளிவருகிறது.
www.palsuvainovel.com

Bala Sakthis said...

வானத்து மனிதர்கள் is available now. Please check:

http://www.udumalai.com/vanathu-manitharkal.htm

ரகு வஜ்ஜிரம் said...

நண்பனே அந்த நாள் ஞாபகங்கள் கண்ணில் கண்ணீர் தழும்ப மர்ம தேசத்தின் அனைத்து பாகத்தையும் மீண்டும் youtube வாயிலாக பார்த்தேன் தற்பொழுது எதுவும் நடக்கும் தொடரி 33 எபிசோட்ஸ் பார்த்துவிட்டேன் 34வது எபிசோடில் இருந்து யூட்யூபில் காணவில்லை தயவுசெய்து பார்ப்பதற்கு உதவுங்கள்7708760870

Bala Sakthis said...

Ragu Sir,
In the 33rd Episode, scroll down and check Rajshri Tamil comments:

"Dear Viewers, this is the last Episode of Edhuvum Nadakkum. The show ends with this episode. The creators of this awesome show have not made any more episodes. Thanks for watching :)"

ரகு வஜ்ஜிரம் said...

Oh my god

Mani said...

எதனால் இதற்கு அடுத்த episode எடுக்க வில்லை

Unknown said...

Enaku full story venum na pakanum pls