Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

27 August 2010

தரமாட்டேன்



காலை வந்த வார இதழை
எடுத்துவைத்து
விளையாட்டு காட்டும் மகன்.

காட்பரீஸ் சாக்லேட்,
சிறுத்தைப் பட நோட்டு,
கலர் பென்சில்,
எதற்கும் மசியாமல்,
”தரமாட்டேன் போப்பா !”
என்பதே பதில்.

பள்ளிக்குப் போனபின்
கேட்பாரற்றுக் கிடக்கும்
புத்தகத்தை எடுக்க
ஏனோ மனமில்லை.

21 August 2010

ஹைக்கூ


16 June 2010

கோடு போட்ட சட்டை

சட்டை வாங்க
கடைக்குப் போவோம்
”அந்த கோடு போட்ட
துணியில் ஒரு மீட்டர்”
என்பார் அப்பா.
”நீலக் கலர் துணியில்
அரை டிராயர்”
என்பார் அப்பா.

”கொஞ்சம் பெரிசாவே
தச்சுடுங்க
வளர்ற பையன்”
என்பார் அப்பா.

கருப்பு, சிகப்பு,
ரெண்டு ஸ்பைடர் மேன்
சண்டை போடுற
டி-ஷர்ட்
ஜீன்ஸ் துணியில்
நாலு பாக்கெட் வெச்ச
முக்கால் பேண்ட்
கேட்கிறான்
என் பையன்

06 June 2010

நித்தியும் சுயநலமும்

நித்திஷ் !
சுருக்கமாக,
செல்லமாக,
நித்தி !!.
வேற செல்லப்பெயர்
யோசிக்கணும்
மகனுக்கு இப்போ.



"தன்னலம்" கருதா
பொதுநலவாதி
நான்
சனியன் புடிச்ச
மழை
வீடு போனதும்
வந்திருக்கலாம்.

12 April 2010

பிரயோஜனம்


இனி பிரயோஜனமில்லை !!!
முடிவானதும்
அடுத்த மாநிலத்துக்கு
அடி மாடுகள்
முதியோர் காப்பகத்திற்கு
பெரிசுகள்

நன்றி: www.ronitbaras.com

07 March 2010

உச்சி முகர்தல்


புரண்டு படுத்து
தூக்கம் தொலைக்கும் இரவுகள்
ஆழ்ந்த உறக்கத்தில்
அருகிலிருக்கும் மகனை
கையிடுக்கில்
அவனை அணைத்து
தலைமுடியும் நெற்றியும்
இணையும் இடத்தில்
என் முகம் புதைத்து
முகர்ந்து பார்க்கையில்
வரும் அவன் வாசம்
சொக்கவைக்கும்

23 January 2010

பெயரில் என்ன இருக்கு ?

                  
பெயரில் என்ன இருக்கு ?

பெயரில் என்னயிருக்கு ?
பிறந்ததிலிருந்து
கஸ்தூரி
பத்து வயதிலிருந்து
மாலதி
இருபது வயதிலிருந்து
ரஞ்சனி
இருபத்தியேழிலிருந்து
ஸ்ரீதேவி
பெயரைக் கேட்கும் போதெல்லாம்
தன்னிச்சையாய் திரும்புது
தலையும் கவனமும்
பெயரில் என்னவோயிருக்கிறது
எல்லாமுமிருக்கிறது

கடலில் கப்பல் போல
நினைவலைக் கடலில்
நீந்தும் கப்பலாய்
பெயர்கள்
எல்லாமுமாய் இருக்கிறது





ஆறறிவும்


ஐந்து கிலோமீட்டர் தொலைவில்
துணை எழுப்பும் ஒலி
குரங்குக்கு புரியும்
பல கிலோமீட்டர் தொலைவில்
துணை எழுப்பும் ஒலி
யானைக்குப் புரியும்
ஒலி எழுப்பும் கைப்பேசி
என்னுடையதா ?
அவனுடையதா ?

05 January 2010

கூகிளாரும் தொடர்கதையும்

கூகிளார்


பிரெஞ்சு புரட்சி
ஆண்டு ?
கூகிளாரைக் கேள்
பிரேம் நசீரின் 60வது
படம்?
கூகிளாரைக் கேள்
அம்மா எங்கே ?
கூகி
என்று சொல்லி
சுதாரித்தேன்


தொடர்கதை



அந்த கால
தொடர்கதை
தைக்கப்பட்டு மொத்தமாக
கிடைத்தது பரணில்
கதையை விட
சுவாரசியம்
துணுக்குகளும்
விளம்பரங்களும்

23 December 2009

மௌனம்


புறாவும்,
தூதுவனும்,
தோழியும்,
அஞ்சலட்டையும்,
தொலைபேசியும்,
மின்னஞ்சலும்,
பயனில்லை
மௌனம் பேச
முடிவு செய்தால்.

வெற்றிடத்தில் பரவுவதில்லை
ஒலி
உன் மௌனம்
என்னை வந்தடைவது
எப்படி ?

06 November 2009

அக்கா-அலாரம்-மகன்-நெல்


இளவரசன் என்ன ஆனான் ?
பூதத்தின் உயிர் எங்கே ?
அக்காவுக்கு கல்யாணம்


பேப்பர் போடும் பையன்
பக்கத்து வீட்டு சுப்ரபாதம்
தப்பாய் வைத்த அலாரம்





டோரா புஜ்ஜியை நிறுத்தலாம்
மின்னஞ்சல் படிக்கலாம
தூங்கிவிட்டான் மகன்




நாளை நெல் அறுவடை
உணவுக்கு கடும் பஞ்சம்
எலி வளையில்



படங்களுக்கு நன்றி:wildlifetrust.org.uk,chandamama.com,hiren.info,worldofstock.com

19 October 2009

பதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 3


ஜன்னலருகில் சிறுவன்
பசியில் காகம்
பள்ளி திறந்தாச்சு





மேலே தொடர்ந்தது
கீழே முடிந்தது பயணம்
பேருந்தினடியில் அவன்





வெயில் சுட்டெரிக்கிறது
அணைக்க யாருமில்லை
தெருவோர விளக்கு




பட்டாசு வெடிக்கும் குழந்தைகள்
மெதுவாக வரலாம்
மழை

06 October 2009

03 September 2009

பதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 1

என்னங்க பண்ணுவது ? பதிவர்களின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமே ?

ஹைக்கூ ? கவிதை ? சில வரிகள் ?.

நீங்களே முடிவு செய்யுங்கள் !!!


என்ன ரகசியம் சொன்னது ?
வண்டுகள்
பூக்களிடம் !!.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜன்னலோர இருக்கையில்
அனைவரது தலை திரும்பும்
கீழே நிற்கும் பெண்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிதறிய கவனத்தை
கவனமாக சேகரிக்கும்
அழகிய பெண்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குள்ளமானவன்
சீக்கிரம் உயரமானான்
நிழல்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடற்கரை மணலில்
நிறைய முகவரிகள்
பாத சுவடுகள்