25 October 2010

வந்துடுச்சு (காமிக்ஸ்) தீபாவளி

நீங்கள் காமிக்ஸ் பிரியர் என்றால், யுவகிருஷ்ணா (லக்கிலூக்) அவர்களின் இந்தப் பதிவை கண்டிப்பாக படியுங்கள். காமிக்ஸ் பிரியர்களுக்கான ஸ்பெஷல் தீபாவளி வந்துவிட்டது. தகவல் தந்த யுவகிருஷ்ணாவுக்கு நன்றி.

அக்டோபர் - 1987 - தீபாவளிஅக்டோபர் - 2010 - தீபாவளி

இன்று காமிக்ஸ் கிடைத்தது. அட்டைப் படங்கள் இங்கே.

08 October 2010

எந்திரன் - திரைக்கதையில் தந்திரன் ?

ஒரு வழியாக முக்கியமான ஜனநாயக கடமையான எந்திரன் படம் பார்த்தல் நிறைவுக்கு வந்தது. இந்தப் படத்தில் நடிக்க ஏன் ரஜினி சம்மதித்தார் என்று புரியவில்லை. படம் பார்க்கும்போது ஸ்கிரீனில் தெரிவது ரஜினி என்ற உணர்வே ஏற்படவில்லை. சங்கர், பழைய பாக்கியராஜ் பட சிடிக்களை உடனடியாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். திரைக்கதை படு சொதப்பல். ஒவ்வொரு காட்சியும் மனதில் பதிவதற்கு பதிலாக எப்பொழுது முடியும் என்று இருந்தது.

தீ விபத்தில் காப்பாற்றப்படும் பெண்ணின் தற்கொலை; அதுவும் லைவ்வாக டிவியில் காட்டப்படுவது  - என்ன ஆச்சு சங்கருக்கு என்ற கேள்வி எழுப்பியது.

சயன்டிஸ்ட் ரஜினியை அடக்கிவாசிக்க வைத்தாகிவிட்டது. ரோபோ ரஜினியும், தன் மேனரிசங்களை காட்ட முடியாத நிலையில் இருப்பதற்கு காரணம் அது ஒரு இயந்திரம். ஒரிஜினல் ரஜினியை ரசிகர்கள் பார்க்க இருந்த ஒரே வாய்ப்பு வில்லன் ரஜினி. கார், ஹெலிகாப்டர் மற்றும் போலீசைத் தாக்குவதே முழுவேலையாக இருந்ததால், வில்லன் ரஜினிக்கும் ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றவைகள் சண்டை போடுவதிலேயே போய்விட்டது. அவர் சிரிக்கும் சிரிப்பு கொஞ்சம் அதிகமாகவே பட்டது.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் சம்மந்தப்பட்ட காட்சிகள் தனியாக எடுத்து பிறகு கிராபிக்ஸ் செய்து ஒட்டிவிட்டார்களோ என்று தோன்றியது. பல இடங்களில் அவரின் ரியாக்‌ஷன் காட்சியமைப்பிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது. வில்லன் ரஜினி தன் மாளிகைக்கு அவரைக் கடத்திப் போகும்போது, பொருட்காட்சியில் வேடிக்கை பார்ப்பது போன்ற அவரது ரியாக்‌ஷன்..ம்ம்...

உலக அழகி, ராம்ப் வாக் செய்யவேண்டும். அப்படி செய்யும் போது கையில் எதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு போகவேண்டும். அதற்காக ஒரு சூட்கேஸ். அந்த சூட்கேஸில் “காதல்ரத்து பத்திரம்”. சங்கர்ஜி என்னங்க இதுதானா உங்க 10 வருஷ திரைக்கதை உழைப்பு ??. பாலகுமாரன் மற்றும் சுஜாதா போன்றவர்களின் உதவி கிடைக்கவில்லையா ?கிளைமேக்ஸ் கோர்ட் சீன் - ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

முத்தாய்ப்பாக, வில்லனுக்கு பில்டப் பாடல்வைத்து சங்கர் தான் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்று நிரூபித்திருக்கிறார்.

மற்ற விஷயங்களை இந்தப் பதிவுகளில் சொல்லிவிட்டார்கள்.

ஜய்ன்ஜ் பிக்ஜன்(எந்திரன்) - விசா பக்கங்கள்
எந்திரன் (2010) - கருந்தேள் கண்ணாயிரம்
எந்திரன் - கருப்புபெட்டி

ரஜினி தன் அடுத்தப் படத்தை மிகவும் கவனமாக தேர்வு செய்யவேண்டும் என்பதே என் போன்ற ரசிகனின் வேண்டுகோள்.