!!! வலையுலக நண்பர்களுக்கு வணக்கம் !!!
நான் கவிதை எழுதுபவன் கிடையாது. அதனால் கவிதை இங்கு தென்படாது.நான் இலக்கியவாதி கிடையாது. அதனால் இலக்கியம் பற்றி ரொம்ப பேச மாட்டேன்.தினம் தோறும் எனக்கு தோன்றுவதை சேமிக்க எனக்கு இந்த வலைப்பதிவு.
நான் பிறந்ததை பற்றி சொல்லி ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்.
என் அப்பா ஒரு பொறியாளர். அம்மா இல்லத்தலைவி. மூன்று மகன்களுடன அமைதியான வாழ்வு. நான்காவதாக நான் பிறந்தேன்.
என் அப்பா, அம்மா ஆசை ஒரு பெண் குழந்தை. நள்ளிரவில் பிறந்தேன். அந்த செய்தியை என் அப்பாவிடம் அவர் அலுவலக பணியாளர் வந்து சொன்னார். நான்காவது பையன் என்று தெரிந்ததும், அப்பா சொன்னது "அப்படியா !! சரி" . என் மூன்றாவது அண்ணன் என் அப்பாவை கட்டி கொள்ள, இருவரும் தூங்கிவிட்டார்கள். அடுத்தநாள் காலை தான் அப்பா என்னை வந்து பார்த்ததாக பிறகு என் பாட்டி சொன்னதுண்டு. அம்மாவும் , பெண் பிள்ளை இல்லை என்று தெரிந்து வருத்தப்பட்டதாக பிற்காலத்தில் சொல்ல கேட்டேன். இது நடந்தது 1975 -ஆம் வருடம். அப்பவே பெண் குழந்தைக்கு ஆசை பட்ட என் அப்பா, அம்மாவுக்கு ஒரு ஷொட்டு.
"நட்ட நடு ராத்திரி, கன்னங்கரேர்னு இருந்த நீ. நர்ஸ் உன்னை வெறும் கட்டில்ல போட்டுட்டா. நீ கத்த ஆரம்பிச்சுட்ட. நான் தான் ராத்திரி முழுக்க உன்னை தூக்கி வெச்சுருந்தேன் தெரியுமா ?" - இது நான் வாலுத்தனம் பண்ணும்போது பாட்டி சொல்வது.
இப்படியாக நான்காவது பையனாக வாழ்க்கையை தொடங்கினேன். ம்ம்..ம்ம் மூன்று அண்ணன்களை எப்படி சமாளித்தேன்னு பிறகு சொல்றேன்.
விரைவில் வருகிறேன் !!!.
3 பின்னூட்டங்கள்:
//தினம் தோறும் எனக்கு தோன்றுவதை சேமிக்க எனக்கு இந்த வலைப்பதிவு.//
நானும் இதே எண்ணத்தில் தான் வலைப்பதிவை ஆரம்பித்தேன்.
// ம்ம்..ம்ம் மூன்று அண்ணன்களை எப்படி சமாளித்தேன்னு பிறகு சொல்றேன்.//
அண்ணன்களை சமாளிப்பது அவ்வளவு கஷ்டமா?
சொல்லுங்க பாப்போம்
ஈஸ்வரி, அனைத்தும், சுகமான சுமைகள் தான் :-). அவர்கள் என்னை பாடு படுத்தவில்லை, மாறாக உதவியாகத்தான் இருக்கிறார்கள் :-).
34 ஆண்டு கால வாழ்க்கைச் சரிதம் எழுதுக நண்பா - சுவையாக இருக்கும் - நால்வரும் ஆணகளாகப் பிறந்தது ஆஸ்திக்காக - ஆசைக்கு ஒரு பெண்ணும் பிறந்திருக்கலாம்.
நல்வாழ்த்துகள்
Post a Comment