- கூவத்தின் மணம் குறைக்க ...
- மின்வெட்டை அதிகப்படுத்த ...
- 6 கிலோ மீட்டரை கடக்க 60 நிமிடங்களாக்க ...
- விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரை விற்பனையை அதிகப்படுத்த ...
- இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர்களை மரத்தின் கீழ் ஒதுங்க வைக்க ...
- பலரை அன்னியன் விக்ரம் கெட்டப்பில் அலையவைக்க ...
- சூடான டீ, பஜ்ஜி, சமோசா விற்பனையை அதிகப்படுத்த ...
- A/C யில் தூசி படிய ...
- ஊர் முழுவதும் சாலைகளில் சிறு குளம் உருவாக ....
- உடல் கச கசப்பை போக்க ...
- சூரியனுக்கு ச்ற்று ஓய்வு கொடுக்க ...
- சில பல இடங்களின் சாலை வழி போக்குவரத்தை, நீர் வழி போக்குவரத்தாக்க ......
(அப்பா !!! சொல்ல வந்ததை சொல்லுப்பா ....)
வந்துவிட்டது சென்னையில் (மற்றும்) ஒரு மழைக் காலம்.
இந்த மழைக்காலத்தை மேலும் சுகமாக்க, இதோ 3 அருமையான பாடல்கள்.
மாண்டேஜ் என்று சொல்லப்படுகிற, ஹிரோ, ஹீரோயின் பாடாத, காட்சிகளை மையப்படுத்தி படமாக்கப்பட்ட பாடல்கள்.
1. ஒரு வெட்கம் வருதே !! - பசங்க
(இந்த பாடல் முழுவதும் மழைக்காலத்தில் படமாக்கப் பட்டது. மழைசாரலில் நனைகின்ற சுகம் தர கூடிய பாடல்)
2. இது என்ன மாயம் !! - ஏய் ஆட்டோ
(கடல் அலை போல ஏற்ற, இறக்கங்களுடன், பாடலின் ரிதம் அமைந்திருக்கிறது)
(பாவனா வின் நடிப்பு + இசைக்காக இந்த பாடல்)
5 பின்னூட்டங்கள்:
இது போல மழையை ரசிச்சி
எழுதிய கவிதையை(????) பார்த்ததில்லை.
ரொம்ப ச்வாரசியமா எழுதி இருக்கீங்க
Good cool blog.
ஈஸ்வரி, உங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி. நான் உரை நடையில் எழுதியதை, கவிதையாக்கியதற்கு நன்றி :-).
பாடல்கலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் மழைக்காக !.
மழையை ரசிக்கலாம் - ரசிக்க வேண்டும் - நன்று - நல்வாழ்த்துகள்
Post a Comment