17 August 2009

சென்னைக்கு வந்துவிட்டது ..... (பன்றி காய்ச்சல் இல்லை)

  • கூவத்தின் மணம் குறைக்க ...
  • மின்வெட்டை அதிகப்படுத்த ...
  • 6 கிலோ மீட்டரை கடக்க 60 நிமிடங்களாக்க ...
  • விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரை விற்பனையை அதிகப்படுத்த ...
  • இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர்களை மரத்தின் கீழ் ஒதுங்க வைக்க ...
  • பலரை அன்னியன் விக்ரம் கெட்டப்பில் அலையவைக்க ...
  • சூடான டீ, பஜ்ஜி, சமோசா விற்பனையை அதிகப்படுத்த ...
  • A/C யில் தூசி படிய ...
  • ஊர் முழுவதும் சாலைகளில் சிறு குளம் உருவாக ....
  • உடல் கச கசப்பை போக்க ...
  • சூரியனுக்கு ச்ற்று ஓய்வு கொடுக்க ...
  • சில பல இடங்களின் சாலை வழி போக்குவரத்தை, நீர் வழி போக்குவரத்தாக்க ......

(அப்பா !!! சொல்ல வந்ததை சொல்லுப்பா ....)


வந்துவிட்டது சென்னையில் (மற்றும்) ஒரு மழைக் காலம்.






இந்த மழைக்காலத்தை மேலும் சுகமாக்க, இதோ 3 அருமையான பாடல்கள்.
மாண்டேஜ் என்று சொல்லப்படுகிற, ஹிரோ, ஹீரோயின் பாடாத, காட்சிகளை மையப்படுத்தி படமாக்கப்பட்ட பாடல்கள்.

1. ஒரு வெட்கம் வருதே !! - பசங்க
(இந்த பாடல் முழுவதும் மழைக்காலத்தில் படமாக்கப் பட்டது. மழைசாரலில் நனைகின்ற சுகம் தர கூடிய பாடல்)

2. இது என்ன மாயம் !! - ஏய் ஆட்டோ
(கடல் அலை போல ஏற்ற, இறக்கங்களுடன், பாடலின் ரிதம் அமைந்திருக்கிறது)

3.காதல் வைத்து ...காதல் வைத்து -
(பாவனா வின் நடிப்பு + இசைக்காக இந்த பாடல்)

5 பின்னூட்டங்கள்:

Eswari said...

இது போல மழையை ரசிச்சி
எழுதிய கவிதையை(????) பார்த்ததில்லை.
ரொம்ப ச்வாரசியமா எழுதி இருக்கீங்க

Earn Staying Home said...

Good cool blog.

பின்னோக்கி said...

ஈஸ்வரி, உங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி. நான் உரை நடையில் எழுதியதை, கவிதையாக்கியதற்கு நன்றி :-).

கா.பழனியப்பன் said...

பாட‌ல்க‌லுட‌ன் காத்துக்கொண்டிருக்கிறேன் மழைக்காக !.

cheena (சீனா) said...

மழையை ரசிக்கலாம் - ரசிக்க வேண்டும் - நன்று - நல்வாழ்த்துகள்