22 August 2009

கண்ணடிக்கும் வானத்து தேவதை.

அந்தி சாயும் வேளை. நீங்கள், உங்கள் குழந்தையுடன், மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்க்கிறீர்கள். அப்பொழுது, வானத்தில், ஒரு சிறு வெளிச்ச புள்ளி தோன்றி மெதுவாக நகர்கிறது. முதலில், அது பறக்கும் விமானம் என்று நினைக்கிறீர்கள். நகர்கிற ஒளி, பளீர் என்று ஒளிர்கிறது. அடுத்த நொடி, அது மறைந்துவிடுகிறது. உங்களுக்கு வியப்பு !!. விமானமாக இருந்தால், உடனே, மறைந்து விடாதே !!. அப்படியானால் என்ன அது ?. ஒரு வேளை, அயல் கிரகவாசிகள் செல்லும் பறக்கும் தட்டா ??. அந்த வெளிச்ச புள்ளியை மறுமுறை பார்க்க முடியுமா ?. அந்த 3 நொடி நிகழ்வு, உங்களை வியப்பிலாழ்த்துகிறது. நீங்கள் பார்த்ததை, மற்றவர்களிடம் சொல்ல மனது துடிக்கிறது. ஆனால், கண்ணில் காட்டாவிட்டால் மற்றவர்கள் நம்பமாட்டார்களே ??.
ஒரு நற்செய்தி !!. உங்களால் அதை அடிக்கடி பார்க்க முடியும். அந்த கண்ணடி(க்கும்)த்த வானத்து தேவதை, ஒரு செயற்கை கோள். அதன் பெயர் ”இரிடியம்”.
உலகம் முழுவதும், செயற்கை கோள் செல்போன் சேவையை வழங்கும் ஒரு நிறுவனத்தால் வானில் ஏவப்பட்ட பல செயற்கை கோளில் ஒன்று தான் நீங்கள் வானில் பார்த்தது. செயற்கை கோள்கள், இயங்க சூரிய ஓளியை கிரகித்து, மின்சாரமாக மாற்றி தர, அதில் solar pannel -கள், இருக்கும். ஓரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட கோணத்தில், சூரியன் ஓளியை, solar pannel -கள் பிரதிபலிக்கும் போது, நமக்கு அந்த பளீர் என்ற ஒளி தெரிகிறது. இதை நாம் இருக்கும் இடத்தைக்கொண்டு முன்னமே தெரிந்து கொள்ள http://www.heavens-above.com/ என்ற இணையதளம் உதவுகிறது.


1. நீங்கள் இருக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள். இதற்கு கூகுள் மேப் பயன்படுத்தலாம் அல்லது ஊர் பெயர் வைத்து கண்டுகொள்ளலாம்.
from database->india->madras->Neighbours->mylapore (இதை வரிசையாக க்ளிக்குங்கள்)
2. அடுத்த 24 மணி நேரம் அல்லது 7 நாட்களுக்கு, எப்பொழுது தெரியும் என அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள அட்டவணையை பாருங்கள். உங்களுக்கு வசதியான நேரத்தை தேர்ந்து எடுங்கள். எடுத்து காட்டாக, 24 ஆகஸ்டு, 18:37:17 தேர்வு செய்வோம். மாலை 6 மணி, 37 நிமிடம். -2 என்பது, அந்த ஒளி அளவை குறிக்கிறது. -2 வை விட -5 என்பது, அதிக ஒளி. அடுத்து 163 SSE (south south east). வானில் தெற்கு பகுதிக்கும் கிழக்கு பகுதிக்கும் நடுவில், 163 கோணத்தில், 67 உயரத்தில் (உங்கள் தலைக்கு மேல் உயரம் 90 எனக்கொண்டால், 67 என்பது சற்று குறைவான உயரத்தை குறிக்கும்.), மாலை 6 மணி, 37 நிமிடம், அந்த திசையை பாருங்கள், கண்டுகளியுங்கள்.




கீழே சில படங்கள் இருக்கின்றன. இது உலகம் முழுவதும் தெரிந்த, ஒளியை எடுத்த படங்கள்.

- வானவியல் ஒரு அற்புதமான, உபயோகமான, செலவு இல்லாத பொழுதுபோக்கு. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்.
- இந்த ஒளியை பார்க்க நான் மேற்கொண்ட முதல், 3 முயற்சி தோல்வியில் முடிந்தது. அதற்கு காரணம், என்னால், திசையை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த முறை, சரியான நேரத்தில் பார்க்கவில்லை. அதனால், 10 நிமிடங்களுக்கு முன்பே மாடிக்கு சென்று விடுங்கள். உங்கள் watch சரியான நேரத்தை காட்டுகிறதா என சரி பார்த்து கொள்ளுங்கள். இப்பொழுது, இதை பார்ப்பது எனக்கு எளிதாகி விட்டது. ஆனால், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கிடைக்கின்ற அனுபவம் புதிது.
- இதே முறையில் நீங்கள் , ISS எனப்படும், விண்வெளி ஆராய்சி மையத்தை பார்க்கலாம். முயன்று பாருங்கள்.
- வெறும் கண்களால் பார்க்க கூடிய, mars, jupiter, saturn கோள்களை, உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள். அதற்கு starcalc எனப்படுகிற மென்பொருளை உபயோகியுங்கள்.
இந்த பதிவுக்கு முன்/பின் , நீங்கள், இரிடியம்/ISS பார்த்திருந்தால், உங்கள், அனுபவத்தை, பின்னோட்டம் இடுங்கள். ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

**** வாருங்கள் வானத்தை பார்ப்போம். ****

9 பின்னூட்டங்கள்:

Mohan said...

மிக உபயோகமான பதிவு.

Eswari said...

ஒளியை பார்த்துட்டு சொல்லுறேன்.
நல்லா உபயோகமான பதிவு

Eswari said...

தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.தயவு செய்து word verification என்கிற option ஐ எடுத்து விடுங்கள்.தவறான அல்லது தேவையற்ற பின்னூட்டங்களை மட்டுப் படுத்த இது உதவாது.பின்னூட்டங்களை approval க்கு பின்னால் வெளியிடும்படி செய்து கொள்ளலாமே?

பின்னோக்கி said...

இந்த பிளாக் புதியது. நான் settings change பண்ண வேண்டும் என நினைக்கிறேன். மாற்றி விடுகிறேன். உங்கள் suggestion க்கு நன்றி.

கா.பழனியப்பன் said...

அழ‌கான ப‌திவு.உங்க‌ள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்க‌ள்.

Unknown said...

Ok Ok!!!!!!!!!!!!!!!!!

cheena (சீனா) said...

தகவலுக்கு நன்றி - பார்த்து விடுகிறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

தெளிவான விளக்கம் பின்னோக்கி...

வான் நோக்கி பார்க்க வச்சுட்டீங்க...!

வாழ்த்துக்கள்...!

Unknown said...

ஆனால் நான் ஒன்றன் பின் ஒன்றாக 13 வெளிச்ச புள்ளிகள் ஒரே நேர் கோட்டில் சென்றதை பார்த்தேன் அது என்னவாக இருக்கும்..நேரம் காலை.05:29...