30 August 2009

இரண்டு விஷயம் எஃப்.எம்-ல் கேட்டது.





சமீபத்தில், பிக் எஃப்.எம்-ல் கேட்ட துணுக்கு.
கேள்வி வந்து, கொக்கு ஏன் ஒத்த கால்ல நிக்குது ?




- "சார், அது யோகா பண்ணுது."

- "அது ஒத்த கால்ல நின்னு பிச்சைக் கேக்குது."

அடுத்த பதில் கேட்குறத்துக்குள்ள என் ஆபீஸ் வந்துடுச்சு.அப்புறம் யோசிச்சு பார்த்தேன். அறிவியல் பூர்வமா எதாவது காரணம் இருக்கனுமே !! என்னவா இருக்கும்னு.

- கொக்கு தண்ணியில நின்னு மீன புடிக்கனும். ஆன தண்ணியில சூரிய ஒளி பட்டு பிரதிபலிக்குறதுனால, கொக்கால மீன பார்க்க முடியாது. அதுனால, ஒத்த கால எடுத்து சூரிய ஓளிய தடுத்து, அதனால ஏற்படுகிற, நிழலை வெச்சு, மீன புடிக்குது.

- சூரிய ஒளிய கால் வெச்சு தடுக்கும் போது ஏற்படுகிற நிழல், மீன்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஏன், அந்த இடம் இருட்டா இருக்குன்னு பார்க்க வர்ற மீன, கொக்கு லபக் பண்ணிடும்.
மேல கூறிய இரண்டு காரணம் எனக்கு தோன்றியது. உங்களுக்கு எதாவது காரணம் தெரிஞ்சா சொல்லுங்க.



”டேய் !! ஏன்டா ஒரு வாரமா ஈ-மெயில் அனுப்பல ?”

“எங்க வீட்டுல broadband connection வேலை செய்யல”

“அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், BSNL broadband connection எடுன்னு. இப்போ இன்ஸ்டாலேசன் சார்ஜ் கம்மி பண்ணிட்டாங்க. சூப்பர் fast -அ வேலை செய்யும்”
இது ஒரு BSNL broadband விளம்பரம்.


நீங்க பார்த்தீங்கன்னா, ஒரு வாரமா connection வேலை பார்க்கலைங்கறது தான் பிரச்சினை. ஆனா, BSNL connection எடுத்தா, இந்த மாதிரி பிரச்சினை வந்தா உடனே சரி பண்ணிடுவாங்கன்னு விளம்பரத்துல சொல்லவே இல்லை. அத விட்டுட்டு, இன்ஸ்டாலேசன் சார்ஜ் கம்மி பண்ணிட்டாங்க, அதுனால BSNL connection எடுங்கன்னு சொல்றது எப்படி ஒரு சரியான விளம்பரம்னு தெரியலை.

என் நண்பன் ஒருவன், சென்னைப் புற நகர் பகுதியில் இருப்பவன். அவனுக்கு வேற வழி இல்லாம, BSNL connection, எடுத்தான். ஒரு மாசமா அது வேலை செய்யலை. இவன் குடுக்காத புகார் இல்லை. சரி பண்ணவே இல்லை. ஒவ்வொரு அதிகாரிக்கும் ஈ-மெயில் அனுப்பி அனுப்பு அலுத்து போய், கடைசியில General Manager-க்கு, எல்லா ஈ-மெயிலயும் அனுப்பினான். அதுக்கு அப்புறம், ஒரு அதிகாரி வீட்டுக்கு வந்து 10 நிமிஷத்துல சரி செஞ்சாங்க.

“சார், இனிமேல பிரச்சினைன்னா என்கிட்ட சொல்லுங்க, GM-க்கு சொல்லாதீங்கன்னு” சொல்லிட்டு போனாங்க.

இப்படி ஒரு நிலைமையில, விளம்பரம், வேற எப்படி குடுக்க முடியும் ??

5 பின்னூட்டங்கள்:

Eswari said...

சில விளம்பரங்கள் நீங்க சொல்லுவது போல அர்த்தம் இல்லாமல் பார்ப்பவர்களை எரிச்சல் அடைய செய்யுது. சில விளம்பரங்கள் அதுவும்
குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் விளம்பரங்களில் குழந்தைகள் மயங்குகிறார்களோ இல்லையோ நான் மயங்குகிறேன்.

ஏரியல் சோப்பு விளம்பரத்திற்கு வரும் அந்த பையனின் தன்னம்பிக்கை மிக்க நடிப்பு சுப்பர்

கவின் மில்க் க்கு இப்ப ஒரு குட்டி வருது. அவங்க அப்பா நீ பெரியவன் ஆனதும் தான் கார் ஓட்டனும் ன்னு சொல்லுவர். அப்ப அது முகத்தை பார்க்கணுமே சுருங்கி போயீ...., கோபத்தோடு வீட்டுக்குள் போயீ பால் குடிச்சுட்டு அவங்க அப்பா கிட்டே சாவி கேட்கும் அழகுக்கு 200 மார்க் கொடுக்கலாம். so sweeeeeeeeeeet

அதே போல கரை நல்லதுக்கு தான் விளம்பரத்தில் தன் தங்கையின் அழுகை நிறுத்த ஒரு குட்டி பையன் சேரில் குதிப்பதையும், ரோசி மிஸ்க்காக அந்த பையன் நாய்க் குட்டி போல சேரில் புரளும் போதும் ரசிக்காதவர்கள் கண்கள் கண்களே இல்லை.

பின்னோக்கி said...

நீங்கள் சொல்லும் விளம்பரங்கள் அருமை. இப்பொழுது, மெகா சீரியல் விட, விளம்பரங்கள் தான் சுவாரசியமாக இருக்கிறது.

mightymaverick said...

The problem you are saying persists in all the service provider. I had Tata Indicom connection and I transferred the connection. I called customer care for 5 times, mailed them 100 times but nothing happened. I called the regional manager and the next evening it started working. That's the customer care.

cheena (சீனா) said...

பல விளம்பரங்கள் பலரின் மனதைக் கவருகின்றன. முடிந்த வரை நல்ல முறையில் வருகின்றன. பி எஸ் என் எல் விளம்பரம் கூட சூப்பர் பாஃஸ்டா வேலை செய்யும் எனபதன் பொருளே பிரச்னைகள் உடனுக்குடன் சந்திக்கப்படுகின்றன - சரி செய்யப்படுகின்றன என்பது தான் பொருள். என்னைப் பொறுத்த வரையில் அவர்களின் சேவை எனக்குச் திருப்தியாக இருக்கிறது.

ஜோதிஜி said...

மற்றவர்களை ஒப்பிடும் போது அரசாங்க சேவை சிறப்பானது தான். ஆனால் மேலே உள்ள கொக்குகள் திங்கும் மீன்களுக்குக்காக செய்யும் அக்கிரமத்திற்கு அளவே இல்லை. என்னுடைய பாடுகள் நாகாவிற்கு உரையாடும் போது புரிந்து கொண்டார். இன்று தான் வேகம் அதிகமாக இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் பயத்தில் வலை தள பயணம் செல்வதே இல்லை.