16 August 2009

ஐய்யோ !!!!! வேண்டாம் அந்த website !!!


ஒரு வெப்சைட். அதை மக்கள் பார்க்க, பார்க்க ஹிட் counter அதிகம் ஆகும். இது வழக்கமான விஷயம் தான். ஆனால், வெப்சைட் counter உடன், ஒரு விஷம், ஆசிட் கக்கும் கருவி பொருத்தி அதன் மறு முனையில் ஒரு மனிதனை கட்டி போட்டிருக்கிறான் வில்லன். FBI சைபர் க்ரைம் வேலை பார்க்கும் ஹீரோயின், எப்படி வில்லனை வீழ்த்துகிறாள் என்பது தான் கதை.


படத்தின் பெயர் : Untraceable
வெளியான ஆண்டு : 2008.


படம் ஒரு சின்ன சைபர் திருடனை கண்டு பிடிப்பதில் தொடங்குகிறது. அப்புறம், வில்லன் ஒருவனை கடத்தி, கட்டி போட்டு, heparin என்ற மருந்தை அவனுக்கு சிறிது சிறிதாக, ஒவ்வொரு வெப்சைட் விசிட்டர் வரும்போது உடலில் செலுத்துமாறு ஏற்பாடு செய்கிறான். இதை லைவ்வாக ஒளிபரப்புகிறான். இந்த செய்தி பரவ பரவ, அதிகம் மக்கள் அந்த வெப்சைட் க்கு வருகிறார்கள், அதனால் பரிதாபமாக இறக்கிறான். கடைசியில் வில்லன், ஹீரோயினை கடத்த, அவள், அவனிடம் இருந்து தப்பித்தாளா ? இல்லையா என்பது தான் கிளைமாக்ஸ்.


இந்த படம் நியூஸ் பைத்தியம் பிடித்து அலையும் நியூஸ் டிவி க்களுக்கு ஒரு சவுக்கடி. மக்கள் எந்த அளவுக்கு கொடுரமான விஷயங்களை இன்டர்நெட்டில் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்; ஒரு மனிதன், தான் வெப்சைட் ஒன்றை பார்த்தால், அதனால் ஒருவன் கொல்லபடுவான் என்று தெரிந்தும் குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த படம்.


நம்மில் எத்தனை பேர் ஈராக் போர் நடக்கும் போது பத்திரிக்கையாளர்கள் கழுத்து அறுத்து கொல்லப்பட்டதை பார்த்தோம் ?.
நம்மில் எத்தனை பேர் சதாம் ஹுசைன் தூக்கில் போடுவதை இன்டர்நெட்டில் ஆர்வத்தோடு பார்த்தோம் ?


இப்படி பட்ட ஒரு நிகழ்வுக்கு பழி வாங்க புறப்படுகின்ற வில்லனை பற்றிய படம்.

3 பின்னூட்டங்கள்:

Eswari said...

//இந்த படம் நியூஸ் பைத்தியம் பிடித்து அலையும் நியூஸ் டிவி க்களுக்கு ஒரு சவுக்கடி. //
உண்மை தான்


//மக்கள் எந்த அளவுக்கு கொடுரமான விஷயங்களை இன்டர்நெட்டில் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்; ஒரு மனிதன், தான் வெப்சைட் ஒன்றை பார்த்தால், அதனால் ஒருவன் கொல்லபடுவான் என்று தெரிந்தும் குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது //
ஒவ்வொருவரும் உணர வேண்டிய விஷயம்

பின்னோக்கி said...

ஒவ்வொரு மனிதனுக்கும், மிருகத்தின் தன்மை இருக்கிறது. ஒரு ஆர்வம் + மிருகம், இந்த மாதிரி கொடூரங்களை பார்க்க தூண்டுகிறது என நினைக்கிறேன்.

cheena (சீனா) said...

நாம் அத்தளத்தினைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கப்படுகிறான் எனபதனைத் தெரிந்த பின்னும் அத்தளத்தினிற்குச் செல்கிறோமே - அதுதான் மனித மனம். ஆர்வம் - கொல்லபடுகிறான் என்பதனை நம்ப மறுக்கும் மனம் - அல்லது எப்படிக் கொல்லப்படுகிறான் என்பதனை ஆராயும் மனம்

இதெல்லாம் தவிர்ர்க இயலாது நண்பா