11 January 2010

(எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் - 11.01.2010

இன்று காலை மருத்துவரை (பயப்படாதீர்கள் ! என் காலுக்கு வைத்தியம் செய்யும் டாக்டரை), பார்க்க 11 மணிக்கு போய், அவரின் தரிசனம் கிடைத்தது மாலை 5 மணிக்கு. 5 நிமிடத்தில் என் பிரச்சினைகளைக் கேட்டு, அறையின் வெளியே அனுப்பி விட்டார். அந்த 5 நிமிடத்திற்குள், அவரின் ஏர்டெல் டெலிபோன் பில்லை, ஏர்டெல் வலைத்தளத்தின் வழியே கட்டினார். அவரின் கடவுச்சொல் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அந்தக் கடவுச்சொல் “fracture"

*********

சமீபத்தில் பார்த்த ”ப்ரூ-இரண்டாம் டிகாக்‌ஷன்” விளம்பரம் மிகவும் பிடித்தது. அந்த 30 நொடிகளுக்குள், மருமகளின் முகபாவனைகள், மறுபடியும் பார்க்கத் தூண்டியது. வசனமும், பின்ணனி இசையும் இல்லாத அந்த 10 நொடி மௌனம். ஆஹா !.


*********

பல, பிரபல பதிவர்களின் புரபைலில் இருக்கும் புகைப்படத்திற்கும், சமீபத்தில் வெளியாகி வரும், அவர்களின் பதிவர் சந்திப்பு மற்றும் புத்தகக் காட்சி புகைப்படத்திற்கும் உள்ள வித்தியாசம் அதிகம். மிகவும் வித்தியாசம் தெரிந்த ஒருவர் ”புலம்பல்கள் - ஆதிமூல கிருஷ்ணன்”.


சில மாதங்களுக்கு முன், பெரிய மீசை வைத்த அவரின் படத்தைப் பார்த்த போது 1980 களின், பெரிய பாட்டம் பெல்ஸ்  அணிந்த, ஸ்டெப் கட்டிங் ஹீரோ நியாபகம் வந்தது. அவரது மீசை, கிராமத்தில் வசிப்பவர் போல இருந்தது. தினமும் அந்த புகைப்படத்தைப் பார்த்து, ஒரு பிம்பம் ஏற்பட்டது. சில வாரங்கள் (மாதங்கள் ?)க்கு முன் அவர் மாற்றிய  இந்த படம் வேறு ஒரு பிம்பத்தை (நகரப்புற, ஸ்டைலான) ஏற்படுத்தியது. இன்று பரிசல்காரன் அவர்களின் இந்த பதிவில் இன்னுமொரு வித்தியாசமான தோற்றம்.

**********
ராட்டினத்தில் 7 வயது பையனின் கை சிக்கி உடைந்து, கட்டு போட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். வலி குறைந்து அழுகை நின்றிருந்தது. அவனின் அம்மா எக்ஸ்-ரே பார்த்துக் கொண்டிருந்தார்.

”ஏம்மா ! முதல் எக்ஸ்-ரேல என் கை எலும்பு  “v" மாதிரி இருந்துச்சு, கட்டு போட்டோன்ன இப்ப “U" மாதிரி இருக்கும்மா” என்றான்

இன்று இரவு அவனுக்கு மயக்கமருந்து கொடுத்து, “u' வடிவில் வளைந்திருக்கும் அவன் கை எலும்பை, நேராக்க சிகிச்சை அளிக்கப் போகிறார்கள்.

நன்றி - புலம்பல்கள் (படத்திற்காக)

24 பின்னூட்டங்கள்:

Romeoboy said...

எனக்கும் அந்த ப்ரு விளம்பரம் புடிச்சி இருக்கு தலைவரே .

Prathap Kumar S. said...

டாக்டர் கடவுசொல் மேட்டரு கலக்கல், fracture தானே அவருக்கு சோறுபோடுது அதனால இருக்கும் :-)

ஆதிமுலகிருஷ்ணன் படத்தைபார்த்தா சுந்தர் சி மாதிரி இருக்கு, பதிவுல இருக்குறதை ரொம்ப வித்தியாசம்,

கடைசியா சொன்னது எனக்கு புரியலையே...

அண்ணாமலையான் said...

ஹா ஹா ஹா ஹா எல்லாத்துக்கும்.. ப்ரூ டாப்புதான்..

பின்னோக்கி said...

நன்றி
ரோமியோபாய்
நாஞ்சில் - அட ! நீங்க சொன்னது சரி. சுந்தர் சி மாதிரி இருக்காரு. அந்த கடைசி மேட்டர, கொஞ்சம் மாத்தி(விளக்கி) எழுதியிருக்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

ஸ்ரீராம். said...

கடவுச் சொல்லை எல்லோருக்கும் காட்டுகிறாரா அவர்?

ப்ரூ விளம்பரம் பார்த்ததில்லை.

பாவம் அந்தப் பையன்.

கால் முற்றிலும் குணமாகி விட்டதா?

பின்னோக்கி said...

ஸ்ரீராம் - அவரிடம் இரண்டு கம்பியூட்டர்கள். ஒன்று நோயாளிகளின் விவரங்கள். இன்னொன்று அவரது தனிப்பட்ட உபயோகத்திற்கு. நோட்பேடை திறந்து கடவுச்சொல்லை பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னோக்கி said...

ஸ்ரீராம் - கட்டுப் பிரித்தவுடன் மானைப் போல துள்ளிக் குதிக்கலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேன். 21 நாட்கள் கழித்து, முட்டி, 40 டிகிரிக்கு மேல் வளைய மாட்டேங்குது. இன்னும் 1 வாரம் ஆகும்னு சொன்னாங்க.

Unknown said...

ப்ரூ ரெண்டாம் டிக்காக்‌ஷன். நானும் ரசித்தேன். என் மனைவி இண்டியன் ஸ்டோரில் ப்ரூ ஃபில்டர் காஃபி என்று வாங்கி வந்தார். நான் ப்ரூவில் ஃபில்டர் காஃபியே இல்லை. இன்ஸ்டண்ட் மட்டும் தான் என்று விவாதம் செய்தேன். எங்கள் விவாதம் முடியும் முன் இந்த விளம்பரம். என் முகத்தில் வழிந்த அசடைப் பார்க்கணுமே..
//ஸ்ரீராம் - கட்டுப் பிரித்தவுடன் மானைப் போல துள்ளிக் குதிக்கலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேன். 21 நாட்கள் கழித்து, முட்டி, 40 டிகிரிக்கு மேல் வளைய மாட்டேங்குது. இன்னும் 1 வாரம் ஆகும்னு சொன்னாங்க.
//

அதே தான் என் கை சர்ஜரிக்கும். ஏழு வாரமா தெரபி போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் 100% சரியாகல. :(

vasu balaji said...

போனவாரம் கேட்ட கேள்விக்கு முகிலன் இந்த வாரம் பதில் தர்ரார். முகிலன் அட்லீஸ்ட் அங்க ப்ரூல காஃபி இருக்கா. இங்க 40%காஃபி 60% சிக்கரி இருக்கும்.

பாவம் சார் அந்தப் பையன். :(.

பின்னோக்கி said...

வானம்பாடி சார், காலைல இருந்து ஆஸ்பத்திரியில உட்கார்ரது கொடுமைங்க. சின்ன சின்ன பசங்க, ரொம்ப வயசானவங்க. அப்ப தடுக்கி உழுந்து வலி தாங்காம கத்திக்கிட்டு வீல் சேர்ல வர்றவங்க. (3 வாரத்துக்கு முன்னாடி நான் கத்துறத இன்னொருத்தர் பார்த்திட்டு இருந்திருப்பார்).

Unknown said...

//வானம்பாடிகள் said...
போனவாரம் கேட்ட கேள்விக்கு முகிலன் இந்த வாரம் பதில் தர்ரார். முகிலன் அட்லீஸ்ட் அங்க ப்ரூல காஃபி இருக்கா. இங்க 40%காஃபி 60% சிக்கரி இருக்கும்.
//

அங்க என்ன கிடைக்கிதோ அதே தான் இங்கயும். என்ன உங்களுக்கு ஃப்ரெஷ்ஷா கிடைக்கும் எங்களுக்கு சில சமயம் எக்ஸ்பயர்ட் ஐட்டம் கூட கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே பாருங்க.

பாலா said...

இப்பவும்.. நாமக்கல்லில் தான் இருக்கீங்களா பின்னோக்கி? (இல்ல... மணி டாக்டர்கிட்ட போனீங்களான்னு கேட்கலாம்னு:]).

பின்னோக்கி said...

ஹாலிவுட் பாலா - என் காலின் எதிர்காலம், அந்த டாக்டரின் கையில் இருப்பதால், மேலாதிக்க விபரங்களைத் தர இயலாத நிலையில் இருக்கிறேன் :)

geethappriyan said...

நண்பர் பின்னோக்கி,
கால் சீக்கிரம் குணமாக பிரார்த்தனைகள்.வேலைக்கு லீவு சொல்லியிருக்கிறீர்களா?புத்தகம் படிக்க ஆர்ம்பித்து விட்டீர்களா?

பின்னோக்கி said...

நன்றி கார்த்திக் - இன்னும் அலுவலகம் போகவில்லை. ராஜிவ் படித்துவிட்டேன். இன்று ஆஸ்பத்திரியில் அப்பா,அன்புள்ள அப்பா முடித்தேன்.

Chitra said...

அந்த டாக்டர் உண்மையிலேயே சிறந்த மருத்துவர்தானா? உங்கள் கடைசி தகவல், அந்த சந்தேகத்தை வலுக்க செய்கிறது.

Get well, soon!

thiyaa said...

எனக்கும் அந்த ப்ரு விளம்பரம் புடிச்சி இருக்கு

அண்ணாமலையான் said...

ம்ம்ம் .. தனியா வந்தாலே நம்மள கண்டுக்க மாட்டாங்க.. இதுல கூட்டமா இருக்கற இடத்துக்கு வந்துட்டேனா.. அதான் யாரும் கண்டுக்கல. சரி பரவால்ல இந்த இடத்துல இருக்கோமே அதுவே போதும்...

பின்னோக்கி said...

நன்றி - அண்ணாமலையான் - உங்களை கண்டுக்காம இருக்க முடியுமா ?. ஏன் அப்படி நினைக்கிறீங்க ?
நன்றி - தியாவின் பேனா
நன்றி - சித்ரா - நல்ல டாக்டர்ங்க.

sathishsangkavi.blogspot.com said...

ப்ரு விளம்பரம் புடிச்சி இருக்கு

ஹுஸைனம்மா said...

//பிரபல பதிவர்களின் புரபைலில் இருக்கும் புகைப்படத்திற்கும், சமீபத்தில் வெளியாகி வரும், அவர்களின் பதிவர் சந்திப்பு மற்றும் புத்தகக் காட்சி புகைப்படத்திற்கும் உள்ள வித்தியாசம் அதிகம்//

ஹீரோஸ் மேக்கப் போட்டு/ போடாம எடுத்த படங்கள் மாதிரி!!

அண்ணாமலையான் said...

அட வாயுள்ள புள்ளக்கி பிஸ்கட் கிடச்சுடுச்சு...

மாதேவி said...

பையன். :((((

Cable சங்கர் said...

கடவுசொல் மேட்டர்.. :)