ஒரு வழியாக, ஒரு மாதம் கழித்து, அலுவலத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறேன். இவ்வளவு நாளாக லேப்டாப்பில் வேலை பார்த்ததின் விளைவு; என் கம்பியூட்டரின் மானிட்டர் 70 MM ஸ்கிரீன் அளவுக்கு பெரியதாக தெரிகிறது. நலம் விசாரித்தார்கள். ஒரு சிலர் “என்ன ? உங்களுக்கு கால்ல அடிபட்டுச்சா ? ஒரு மாசமா ஆபீஸ்க்கு வரலையா ?” என்று கேட்டார்கள்.
என் பையன் போன் செய்து, அழுது “நீ ஆபிஸ் போகவேண்டாம் ! வீட்டுக்கு வா” என்றான். இரண்டொரு நாட்களில், அவன் விளையாடுவதற்கு இடையூறு செய்தால், “நீ ஆபிஸ்க்கு போ !!” என்று விரட்டுவான்.
************
விண்ணைத்தாண்டி வருவாயா - பாடல்கள் கேட்டேன். வாரணம் ஆயிரம் அளவுக்கு முதலில் கேட்ட உடனேயே ஈர்க்கவில்லை. இசையின் நுட்பம் தெரிந்தவர்கள் சிலாகிக்கக் கூடும். படம் வந்தவுடன் பிடிக்கும் என நினைக்கிறேன். எனக்கு என்னவோ, ஹாரிஸ் பாட்டுக்கள் கேட்ட உடனே பிடித்துவிடுகிறது.
************
ரத்த மேகங்கள் - அகதா கிறிஸ்டி, ராஜிவ் கொலை வழக்கு - ரகோத்தமன் படித்தாயிற்று. அடுத்து, புத்தகக் காட்சியில் வாங்கப்பட்ட சில காமிக்ஸ்கள் படிக்க வேண்டும்; நேரம் கிடைக்கும் போது. பார்த்த இங்கிலீஷ் படங்களில், State Of Play, Time Line, Law Abiding Citizen அருமையாக இருந்தது.
*************
பல வருடங்களுக்கு முன் “சிலம்பு’ என்ற தமிழ்ப்படம் வந்தது. கண்ணகியின் உடையாத இன்னொரு சிலம்பு இருக்கும் இடத்தை தேடிப் போகும் கதை. திரைக்கதையில் சொதப்பலான அந்த படத்தை, வரலாற்று ஆராய்ச்சி செய்து யாராவது படமாக எடுக்கலாம். உண்மையிலேயே இன்னொரு சிலம்பு இருக்கிறதா ?. தெரிந்தால் சொல்லுங்கள்.
20 பின்னூட்டங்கள்:
சரியா போயிடுச்சா, சந்தோஷம், வாங்க ஒரு மேட்ச் ஆடலாம்
//பல வருடங்களுக்கு முன் “சிலம்பு’ என்ற தமிழ்ப்படம் வந்தது. கண்ணகியின் உடையாத இன்னொரு சிலம்பு இருக்கும் இடத்தை தேடிப் போகும் கதை.//
டைரடக்கர் யாரு கஸ்தூரி ராஜாவா?
'சிலம்பு' படத்தை செல்வ ராகவன் எடுத்தால் இன்னும் நன்றாக வரும் என்று தோன்றுகிறது :-)
கால் குணமாயிருச்சா... ஒரு 20-20 போட்ரலாமா?
கண்ணகி என்பவள் இருந்திருந்தால் தானே சிலம்பு இருக்கும்... லாஜீக் உதைக்குதே...
வேணும்னா மாதவி பத்தி எடுக்கலாம் படம் பிச்சிகிட்டு ஓடும்...
ஒரு சரித்திரப் படம் எடுத்து நொந்து நூடில்ஸ் ஆறது போறாதா. அப்புறம் சிலம்பின் ஓசைன்னு கலைஞர் டரியல் பண்ணுவார். அந்த கொடுமை வேறயா.அவ்வ்வ்:))
கால் சரியாச்சா:)
வாழ்த்துக்கள்...இனி எப்போதும் கவனமாக இருங்கள்..
திரும்ப ஆஃபிஸ் வந்துட்டதுக்கு வாழ்த்துகள். இனிமே கிரிக்கெட் பாக்குறதோட நிறுத்திக்குங்க..
சிலம்பு படத்த ரீமேக் பண்ணா அதுல சிம்பு தான் நடிக்கணுமா?? :)))
கால் சரியானதும், கால் சிலம்பை தேடுறீங்களே? இதில் ஏதும் உள்குத்து உண்டா?
அலுவலகம் செல்ல ஆரம்பித்தாயிற்றா? வாழ்த்துக்கள்..
பாடல்கள் டிவியில் சிலமுறை காதில் விழுந்தவுடன்தான் கேட்க முடியும்...தரவிறக்கம் செய்து கஷ்டப் படுவதில்லை.
ராஜீவ் புத்தகம் (இரண்டும்) நானும் வாங்கினேன்..காமிக்ஸ் ஆவலுடன் போய் ஏமாந்தேன்..
"உண்மையிலேயே இன்னொரு சிலம்பு இருக்கிறதா ?. தெரிந்தால் சொல்லுங்கள்"
அதாங்க இது...! ஏங்க ஒரு சிலம்பு இருக்குன்னா இன்னொண்ணு இருக்கும்தானே..!
எல்லாருமே ரூம் போட்டு யோசிப்பீங்களா.. மற்றது, நானும் "நல்ல" புது தமிழ் படம் பாக்கோணும் என்டு நினைச்சுக்கொண்டு இருக்கிறன். யாராவது நல்லதா ரெகம்ன்ட் பண்ணுங்களன்
ரஹ்மான் பாடல்கள் மீண்டும், மீண்டும் கேட்ட பின் பிடிக்கும்.
மிக சரியாக சொல்லி இருக்கிறிர்கள். ஹாரிஸ் ஜெயராஜின் அருமை நம்மவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. இசைஞானிக்கு பிறகு என்னை ஈர்த்ததே ஹாரிஸ் தான். மின்னலே தொடங்கி சமீபத்திய படங்கள் வரை, தானொரு LEGEND தான் என்பதை நிருபித்தே வருகிறார்
//
பல வருடங்களுக்கு முன் “சிலம்பு’ என்ற தமிழ்ப்படம் வந்தது. கண்ணகியின் உடையாத இன்னொரு சிலம்பு இருக்கும் இடத்தை தேடிப் போகும் கதை. திரைக்கதையில் சொதப்பலான அந்த படத்தை, வரலாற்று ஆராய்ச்சி செய்து யாராவது படமாக எடுக்கலாம். உண்மையிலேயே இன்னொரு சிலம்பு இருக்கிறதா ?. தெரிந்தால் சொல்லுங்கள்.//
ஆமாம்,இந்தப் படம் முன்னால அடிக்கடி மத்தியானம் சன் டி.வி ல போடுவாங்க,நான் பார்த்திருக்கேன்,சரத் பாபு,கே.ஆர்.விஜயா நடிச்சது தானே!மகா மொக்கை.
இன்னொரு சிலம்பு இருக்குமா என்ன? தெரியலை.
/ஒரு சிலர் “என்ன ? உங்களுக்கு கால்ல அடிபட்டுச்சா ? ஒரு மாசமா ஆபீஸ்க்கு வரலையா ?” என்று கேட்டார்கள். /
avvv!
எ.கொ.பி இது!!!
தொடர்ந்து கலக்குங்க...:-)
விண்ணை தாண்டி
வருவாயா...சேம் பீலிங்க்ஸ்...
பார்ப்போம் கேட்க கேட்க பிடிக்குமா என்று..
ஆனா ஓசன்னா பாட்டு சூப்பர் ஹிட்
நன்றி - சங்கர் - நான் ஆட்டத்துக்கு வரலை :). டி.வியில பார்த்தாக் கூட வலிக்குது :)
நன்றி - மோகன் - பாவங்க செல்வராகவன்.
நன்றி - நாஞ்சில் - ஓ ! கண்ணகியே இல்லைன்னு சொல்ற குரூப்பா நீங்க. அப்ப சரி
நன்றி - வானம்பாடிகள் - இப்ப நடக்க முடியுது. கொஞ்சம் வலி. 10 நாட்களில் பூரண குணம். பார்ப்போம்.
நன்றி - அண்ணாமலையான்
நன்றி - முகிலன் - சிம்புவின் சிலம்புன்னு பேர் குடுத்திடலாம் :)
நன்றி - சித்ரா - அட ! எனக்கு நீங்க சொன்னதும் தான் புரியுது ! இன்னைக்கு காலைல எதோ ஒரு பதிவு சிலம்பு பத்தி படிச்சேன். உடனே இந்த படம் நியாபகம் வந்துச்சு.
நன்றி - ஸ்ரீராம் - காமிக்ஸ் கிடைக்கலையா ? நிறைய இருந்துச்சே ?.
நன்றி - முகிலினி
நன்றி - சைவகொத்துப்பரோட்டா - ஆமாங்க. அவரு பாடல் எல்லாம் லேட் பிக்கப்தான். இருந்தாலும் முதல் தடவையே கேட்டா நல்லாயிருக்கணும்.
நன்றி - தமிழுதயம்
நன்றி - கார்திகா வாசுதேவன்
நன்றி - சந்தனமுல்லை - உண்மையில நடந்தது :)
நன்றி - ஜெட்லி - நீங்க சொன்ன பாட்டு நல்லாயிருக்கு
சிலம்பு எதுக்கு யாருக்காவது குடுக்கப் போறீங்களா ஹாஹாஹா
/ஒரு சிலர் “என்ன ? உங்களுக்கு கால்ல அடிபட்டுச்சா ? ஒரு மாசமா ஆபீஸ்க்கு வரலையா ?” என்று கேட்டார்கள். //
ஓஹ் நீங்க அப்ப ஒரு மாசமா ஆபிஸ் போகாமா வீட்ல இருந்தே பதிவெழுதினீங்களா? ;))))))))))))
ஹல்லோ..., ரெண்டு சிலம்பையும் உடைசுட்டாங்கள்ள..,
வர வர இந்த வானம்பாடிகள் சிரிக்க வைப்பதற்கு ஒரே அளவே இல்லாமல் போய்க் கொண்டுருக்கிறது.
வீட்டில் இருந்து பார்க்கும் வேலை என்பது ஒரு வகையில் தண்டணை போலத்தான் போலிருக்கு.
இங்கேயும் அதே நிலமை தான்
Post a Comment