09 January 2010

திக்.திக்.பக்.பக் - 3

திக்.திக்.பக்.பக்- சிறுவயதில் என்னை பயத்திலாழ்த்திய, இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது, சிரிப்பிலாழ்த்தும் சில சம்பவங்களின் தொகுப்பு இது.

*********
என் சிறு வயதில், ஒரு நாள் பெற்றோர்கள் வெளியூர் போயிருந்தார்கள்.ரொம்ப நாளாக அப்பா சாப்பிடும் ஜெம்ஸ் வடிவிலான சிகப்பு நிற மாத்திரை மேல் எனக்கும் என் 3 வது அண்ணனுக்கும் ஒரு கண் வீதம் மொத்தம் இரண்டு கண்கள். இது தான் தக்க சமயம் என்று, 100 மாத்திரைகள் கொண்ட பாட்டிலிலிருந்து ஆளுக்கு 50 மாத்திரை வீதம் பிரித்துக் கொண்டோம். வாயில் போட்டு மூணு சப்.சப்.சப். இனிப்பு சுவை முடிந்து, மாத்திரை கசப்புத் தொடங்கும் அந்த நேரத்தில் ஒரு துப்ப்ப். இதே மாதிரி 100 மாத்திரையையும் சாப்பிட்டு விட்டு, மாத்திரையை, பீரோவுக்கு அடியில் போட்டோம்.


அம்மா வீடு திரும்பி, வீட்டைக் கூட்டும் போது, பீரோவுக்கு அடியிலிருந்த அத்தனை வெள்ளை மாத்திரைகளைப் பார்த்து அலறி, எங்களைக் கேட்க, அடிக்கு பயந்து உண்மையைச் சொன்னோம். அதுவரை தைரியமாக இருந்த நாங்கள், பீதியடைந்து அழ ஆரம்பித்தோம்.
“டேய் ! எப்படா சாப்டீங்க ?”
“காலைலயே சாப்டுட்டோம்மா !!!”
எங்க ரெண்டு பேரையும் மொத்திவிட்டு, அம்மா அழ ஆரம்பித்தார்.

இதன் மூலம் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், மருந்து மாத்திரைகளை குழந்தையின் கைக்கு, வாய்க்கு எட்டும் தொலைவில், உயரத்தில் வைக்காதீர்கள்.

*********
அதே சிறு வயது. நாமக்கல்லில் பெரிய மொட்டை மாடியுடன் கூடிய தனி வீட்டில் இருந்த காலம். குறும்பு செய்ய ஏற்ற, அம்மா, அப்பா வெளியூர் போயிருந்த நேரம். பேய் மழை. மாடியில் போய், மழை நீர் வடிகால் ஓட்டையை அடைத்து விட்டோம். சில மணி நேரத்தில் முட்டி அளவுக்குத் தண்ணீர் வந்துவிட்டது.அதில் குதித்து விளையாடினோம்.

மழை நின்றபின், பக்கத்து வீட்டிலிருந்த என் நண்பன், இந்த மாதிரி தண்ணீர் தேங்கினால், வீடு இடிந்து விடும் என்று பயத்தைக் கிளப்பினான். சில மாதங்களுக்கு முன், இன்னொரு நண்பன், புது வீடு கட்டும் போது, கான்கிரீட் தளத்தில் தண்ணீரைத் தேக்கி வைத்திருந்தது நியாபகத்திற்கு வந்தது. அப்பொழுது அந்த மாதிரி தண்ணீர் தேக்கி வைப்பது கட்டிடத்திற்கு வலு கொடுக்கும் என்று அவன் சொல்லியிருந்தான். சிவில் இஞ்சினியரின் பையனா பிறந்துவிட்டு, இதற்கு பயந்தால் என்ன ஆவது ?.

ஆனால் நேரம் ஆக ஆக, இன்னொரு கவலை வந்தது. ஒருவேளை தண்ணீர் தேங்குவது புதிய கட்டிடத்திற்கு வேண்டுமானால் பலம் தரலாம்; ஆனால் நாங்கள் இருந்த பழைய வீட்டிற்கு எதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது. அந்த சின்ன வயதில், வீடு இடிந்தால் என்ன ஆகும் என்று யோசிக்கும் போது ஏற்பட்ட பயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

அம்மா, அப்பா வீடு திரும்பும் நேரமும் வந்தது. மழை நின்று பல மணி நேரமாகியிருந்தது. முடிவு செய்து, அனைத்து அடைப்புகளையும் திறந்து விட்டோம். எங்கள் வீட்டிலிருந்து கொட்டிய தண்ணியை, அந்த தெருவே வேடிக்கைப் பார்த்தது. அடுத்த இரண்டு நாட்கள் வீடு இடிந்துவிடுமோ என்ற பயம் இருந்து கொண்டேயிருந்தது. பள்ளிக்கூடம் முடிந்து வீட்டை நெருங்கும் போது, வீட்டைப் பார்த்தவுடன் தான், நிம்மதியாக இருக்கும். இப்பொழுது நினைக்கும் போது சிரிப்பு வருகிறது. ஆனால் அப்பொழுது ?.

24 பின்னூட்டங்கள்:

மந்திரன் said...

பயங்களை எங்களுக்கும் கடத்தி இருக்கிறீர்கள் .
பயபுள்ள , ரொம்பத்தான் பயந்து புட்டீங்க ..

அண்ணாமலையான் said...

ஹா ஹா ஹா....

அண்ணாமலையான் said...

நாந்தான் உங்க 100 வது ஃபாலொயர்...

Chitra said...

அந்த களங்கமில்லா பிஞ்சு மனதில், பீதியை கிளப்பிட்டாங்களே. இடுகை அருமை.

சங்கமித்திரன் said...

ஏனுங்கன்னா அந்த வூடு இப்போ இடியாம இருக்கா?
ஏனுங்கன்னா அந்த மாத்திரை துன்னதுக்கு ஏதும் சைட் எஃபெக்ட் இருக்கா இப்போ?

சங்கர் said...

அப்படி என்ன மாத்திரை அது? ஜெலுசில்லா

Prathap Kumar S. said...

சின்ன வயசுல பல வீரபராக்கிரம செயல்கள் செய்திருக்கீங்க...
இப்போஉள்ள சின்ன பசங்களுக்கு இந்த அனுபவம் கிடைககாது. இன்டர்நெட்டும், வீடியோ கேம்சும் தான் அவங்க உலகம்...

காலம் ரொம்ப மாறிப்போச்சுங்க பின்னோக்கி...

சங்கர் said...

//Chitra said...
அந்த களங்கமில்லா பிஞ்சு மனதில், பீதியை கிளப்பிட்டாங்களே.//

யாரை சொல்றீங்க?

VISA said...

இரண்டாவது பயம் மிகவும் இயல்பானதும். அதை சொன்ன விதமும் இயல்பாக ரசிக்க முடிகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இடுகை அருமை.

Vidhya Chandrasekaran said...

:)))

vasu balaji said...

திகில் சிரிப்பு:)) நல்லாருக்கு.

பாலா said...

//நாந்தான் உங்க 100 வது ஃபாலொயர்...//

இதையெல்லாம் கணக்கெடுக்கனுமா?? ஹை.. நான் 97!! :) :)

ஏரியா பூரா.. ஒரே நாமக்கல் வாசனை!! :) :)

என் நடை பாதையில்(ராம்) said...

/*அடுத்த இரண்டு நாட்கள் வீடு இடிந்துவிடுமோ என்ற பயம் இருந்து கொண்டேயிருந்தது. பள்ளிக்கூடம் முடிந்து வீட்டை நெருங்கும் போது, வீட்டைப் பார்த்தவுடன் தான், நிம்மதியாக இருக்கும்.*/

ஹா! ஹா!

sathishsangkavi.blogspot.com said...

பயத்தை அனுபவிக்கிற வரைக்கும் பயம் இருக்காது........

வினோத் கெளதம் said...

நல்லா தான் பயந்து இருக்கீங்க..என்கிட்டயும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு..:)

பின்னோக்கி said...

நன்றி
மந்திரன்
அண்ணாமலையான் - 100வதா வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க.
சித்ரா
பொட்டிக்கடை
சங்கர் - என் நண்பன் வசமாக சிக்கினான். அவனிடம் சொல்லி காமிக்ஸ் வாங்கிவிட்டேன். நன்றி.
நாஞ்சில்
விசா
வித்யா
வானம்பாடிகள்
ஹாலிவுட் பாலா - நாமக்கல்ல மறக்க முடியாதுங்க.
என் நடை பாதையில்
சங்கவி - சரியா சொன்னீங்க
வினோத்கௌதம் - பதிவு போடுங்க. வந்து பயந்துகிட்டே படிக்கிறேன்.

யாசவி said...

nice tortoise

Jackiesekar said...

நல்ல பதிவு பின்னோக்கி... பயத்தில் அழுவதை தவிர அம்மாவால் என்ன செய்து விட முடியும்..??? ஓட்டு போட்டு வாசகர் பரிந்துரைக்கு வர வச்சிட்டேன்

பின்னோக்கி said...

அட ஆமாம் ஜாக்கி சேகர் முதல் தடவையா வந்திருக்குன்னு நினைக்கிறேன். நன்றி.

நன்றி யாசவி.

அண்ணாமலையான் said...

//நாந்தான் உங்க 100 வது ஃபாலொயர்...//

இதையெல்லாம் கணக்கெடுக்கனுமா??
அதாவது ஒரு இதுக்கு எதுக்குனா அது வந்து அதான் அந்த ஒரு எதுக்குனா... வேனாம் விட்டுருங்க...( ஆனாலும் நாந்தான் 100)

அமுதா said...

:-)).... ரொம்ப லூட்டி அடிச்சிருப்பீங்க போல

ஸ்ரீராம். said...

இனிய அனுபவங்கள்...

கும்மி said...

சார் ,
நான் உங்கள ரீடர்ல படிக்கிறதால அதிகமா பின்னூட்ட முடியல,ஃபால்லோவும் ஆகல?
ஆமாம் இந்த 500 ஃபாலொவர் 600 ஃபாலோவர் என்று சொல்றாங்க ஆனா உங்க பதிவில் இருக்கும் விஷயம் அங்கு இல்லையே, நான் யாரையும் லேசுல பாராட்ட மாட்டேன். என் புள்ள ஃபஸ்ட் ரேன்க் வந்தப்பவே பாராட்லைன்னா பாருங்களேன்,
நல்லா எழுதறம்மா. பை,சீயு அகெய்ன்