“புத்தக காட்சிக்கு போவீங்களா ?”
ரெண்டு பேரு போவேன்னு சொன்னாங்க. அவங்க கிட்ட சொல்லி வாங்குன புத்தகங்கள்.
கிழக்கு பதிப்பக வெளியீடுகள்
பின்னோக்கின்னு பேர் வெச்சுட்டு வரலாறு படிக்காமல் இருக்க முடியுமா ? அதனால்,
மெகல்லன் - முகில் - 80 பக்க சின்ன புத்தகம். நல்லாயிருந்தா, சாம்ராட் அசோகர், நெப்போலியன், மாவீரன் அலெக்சாண்டர் வாங்கிப் படிக்கலாம்னு இருக்கேன்.
ராஜிவ் கொலை வழக்கு - ரகோத்தமன் - இந்த புத்தகத்தப் பற்றி சொல்லத் தேவையில்லை.
முடிவில் ஒரு திருப்பம் - ஜெஃப்ரி ஆர்ச்சர் - பவித்ரா ஸ்ரீனிவாசன் - ட்விஸ்ட் கதைகள் மேல் இருக்கும் ஆர்வத்தால் இதை வாங்கினேன். தமிழில் இந்த புத்தகம் விலை ரூபாய் 195. கண்ணதாசன் பதிப்பகம், பல ஆங்கில நாவல்களை தமிழ் படுத்தி ரூபாய் 110க்கு விற்கிறார்கள். பேப்பர் தரமும் அருமையாக இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தின் பேப்பர் தரத்திற்கு ரூபாய் 195 ரொம்ப அதிகம். சரி ! கதைகள் நன்றாக இருந்தால் போதும். பார்ப்போம்.
உயிர்மை பதிப்பக வெளியீடுகள்
கொலையுதிர் காலம் - சுஜாதா - நிறைய பேர், இந்த நாவல் கண்டிப்பாக படிக்கப்பட வேண்டிய ஒன்றுன்னு சொன்னதால வாங்குனேன்.
சுஜாதாவின் மர்மக் கதைகள் - சுஜாதா - துப்பறியலாம் வாங்க எழுதுறத்துக்கு இதுல இருந்து எதாவது கிடைக்குமான்னு பார்க்குறேன்.
இந்த இரண்டு புத்தகங்களும் சுடச் சுட தயாராகிற மாதிரி இருக்கிறது. இன்னும் பைண்டிங் சரியாக காயாமல், நிறைய பேப்பர் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கிறது.
மற்ற பதிப்பகங்கள்
மெர்குரி பூக்கள் - பால குமாரன்
24 ரூபாய் தீவு - சுஜாதா
கனவுத் தொழிற்சாலை - சுஜாதா
நடுப்பகல் மரணம் - சுஜாதா
இன்னும் லயன், முத்து காமிக்ஸ் வாங்க வேண்டும். ரஃபீக் அவருடைய வலைத்தளத்தில், நிறைய புகைப்படங்கள் போட்டு ஆர்வத்தை தூண்டி இருக்கிறார். இந்த புத்தகங்களை யாரிடம் சொல்லி வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சனி, ஞாயிறுகளில் இந்த காமிக்ஸ்கள் இருக்குமா என்பது சந்தேகமே.
வாங்க நினைக்கும் புத்தகங்கள்
பட்ஜெட்டை விட நிறைய வாங்கி விட்டேன். ஆனாலும் இந்த புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று விருப்பம். பார்ப்போம்.
சந்தியா பதிப்பக வெளியீடான யுவான் சுவாங் – இந்தியப்பயணம்
கிழக்கு பதிப்பக வெளியீடுகளான,
அகம், புறம், அந்தப்புரம் - முகில்
என் பெயர் எஸ்கோபர் - பா.ராகவன்
நெம்பர் 40, ரெட்டைத் தெரு - இரா.முருகன்
மைசூர் மகாராஜா - முகில்
இந்த புத்தகங்கள் எல்லாம் சரி. எப்ப சாரு நிவேதிதா, ஜெயமோகன் எழுதிய புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் போறன்னு கேட்டீங்கன்னா, என்னோட பதில் “ஹி..ஹீ..ஹீஹீஹீ.”
நன்றி - கிழக்கு பதிப்பக வலைத்தளம் (படத்திற்காக)
33 பின்னூட்டங்கள்:
/இந்த புத்தகங்கள் எல்லாம் சரி. எப்ப சாரு நிவேதிதா, ஜெயமோகன் எழுதிய புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் போறன்னு கேட்டீங்கன்னா, என்னோட பதில் “ஹி..ஹீ..ஹீஹீஹீ.” /
இந்த லொள்ளுவேறயா:))
//இந்த புத்தகங்கள் எல்லாம் சரி. எப்ப சாரு நிவேதிதா, ஜெயமோகன் எழுதிய புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் போறன்னு கேட்டீங்கன்னா, என்னோட பதில் “ஹி..ஹீ..ஹீஹீஹீ//
நடத்துங்க :)இங்க ஒரு புத்தக கண்காட்சியும் கிடையாது
இந்த புத்தகங்கள் எல்லாம் சரி. எப்ப சாரு நிவேதிதா, ஜெயமோகன் எழுதிய புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் போறன்னு கேட்டீங்கன்னா, என்னோட பதில் “ஹி..ஹீ..ஹீஹீஹீ.
///
அட என்னங்க.. நானெல்லாம் புத்தகம் படிப்பியான்னு கேட்டாலே ஹி ஹீ தான்..
அதுயாருங்க சாருநிவேதிதாவும் ஜெயமோகனும்?
போன் நம்பர் குடுங்க, போகும்போது கூப்பிடுறேன்
சுஜாதா புக்ஸ் அதிகமா இருக்கே ..
முடிவில் ஒரு திருப்பம்- படிக்கலாம்.
குட்..குட்... உங்க கிட்ட நான் வாங்கி படிச்சுக்கலாம் தானே? படிச்சுக்கலாம்னு சொல்லுங்க... யார்கிட்ட லயன் காமிக்ஸ் வாங்க சொல்லலாம்னு சொல்றேன் :-)
//கொலையுதிர் காலம்//
nice novel...
நன்றி
அமுதா - புத்தகமெல்லாம் படிச்ச உடனே தர்றேங்க. நீங்க ஆள் பேர சொல்லுங்க :)
ஜெட்லி
புகலினி
ரோமியோ - சுஜாதா புக் அவ்வளவா படிச்சதில்லைங்க. அதுனால தான்
வானம்பாடிகள்
சங்கர் - நன்றிங்க
பிரியமுடன் வசந்த்
யாசவி
கடைக்குட்டி - :)
//பிரியமுடன்...வசந்த் said...
அதுயாருங்க சாருநிவேதிதாவும் ஜெயமோகனும்?//
adhuthaane
நீங்கள் சொன்ன புத்தகங்களில் 'ராஜிவ் கொலை வழக்கு - ரகோத்தமன்' மட்டும்தான் வாங்கியிருக்கிறேன். ஆனாலும் இன்னும் படிக்கவில்லை.
உயிர்மை பதிப்பக புத்தகம் ஒன்று போன தடவை வாங்கினேன்...(சுஜாதா) கடைசியில் சில பக்கங்களே இல்லை.
அருமை நண்பர் பின்னோக்கி
புத்தகம் வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்,அதை இரண்டு மூன்று முறை படிக்கவும் வாழ்த்துக்கள், மேலும் மேலும் புத்தகம் வாங்கவும் வாழ்த்துக்கள்,
அதுயாருங்க சாருநிவேதிதாவும் ஜெயமோகனும்?//
அவங்க போதைக்கு நாம ஊறுகாய் இல்லைங்க,
நமக்கு என்ன பிடிக்குமோ அதை படிப்போம் வாங்க
//ட்விஸ்ட் கதைகள் மேல் இருக்கும் ஆர்வத்தால் இதை வாங்கினேன். தமிழில் இந்த புத்தகம் விலை ரூபாய் 195. கண்ணதாசன் பதிப்பகம், பல ஆங்கில நாவல்களை தமிழ் படுத்தி ரூபாய் 110க்கு விற்கிறார்கள். //
ஆமாம்.இதே மாதிரி வேறு பதிப்பகங்களும் இருக்கு.பேப்பர் படு மட்டம் ஆனால் புக் காஸ்ட்லி.
கு.ப.ரா வின் சிறுகதைகள் படியுங்கள்.அடையாளம் பதிப்பகம்
.
நீ ஒரு பாப்பானா?
அது தான் நிறைய பாப்பானின் புத்தகமாய் வாங்கி இருக்க, இதிலேயே நான் உன்னை அடையாளம் கண்டு பிடிக்க முடிகிறது, சாரு போல ஒரு தலித் 10 புத்தகம் எழுதி வெளியிட்டால் உங்க வயித்த்ரிசல் வெளியே கண்டிப்பாக தெரியும், மேலே உள்ள பின்னூட்டங்கள் ஊடே நிறைய பூனைக்குட்டிகள் வெளியே வந்துள்ளன, எல்லாம் சாருவின் ரோமத்துக்கு சமம்
லக்கிலுக்கின் விளம்பர உலகமும் விஜயகாந்தும் படியுங்கள்,வெறும் முப்பது ரூபாய்கு இரண்டுமே கோம்போ ஆஃபரில் கிடைக்கிறது, பிடிக்கவில்லை என்றால் திரும்ப பணத்தை கொடுக்கிறார்களாம்.
நன்றி - கே.ரவிஷங்கர் - உயிர்மை புத்தகங்கள் காஸ்ட்லி என்றாலும், புத்தக வடிவமைப்பு நன்றாக இருப்பதால் ஒ.கே. கு.ப.ராவின் சிறுகதைகள் படிக்கிறேன்.
நன்றி அனானி. ஏங்க உயிர்மை வெளியீடெல்லாம் வாங்கியிருக்கேனே ? அத நீங்க கவனிக்கலையா ? :). சாருநிவேதிதா, ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களைப் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு என் இலக்கிய அறிவு இல்லை என்பதற்காக அப்படி சொன்னேன்.
30 ரூபாய்க்கா ? அதிசயமா இருக்கே. விசாரிச்சு பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.
லிஸ்டில் சில புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். நல்ல பகிர்வு.
ஹி..ஹி..
கருவேலநிழல்?
ஹி..ஹி..
:-))
அனைத்தும் அருமையான புத்தகங்கள்.
இதில் சில புத்தகங்களை நான் ஏற்கனவே படித்துவிட்டேன் .
ஒரு சில அனானிகள் தவறான முறையில் பின்னுட்டோம் இடுகிறார்கள் ... தயவு செய்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
//இந்த புத்தகங்கள் எல்லாம் சரி. எப்ப சாரு நிவேதிதா, ஜெயமோகன் எழுதிய புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் போறன்னு கேட்டீங்கன்னா, என்னோட பதில் “ஹி..ஹீ..ஹீஹீஹீ.”//
சாருவை சொன்னிங்க ஓகே... ஜெயமோகன் ஏன்-?
எல்லாம் ஒரு ஊர்பாசம்தான்...ஹி..ஹீ...ஹீஹீ..
கொலையுதிர்காலம் எப்பவோ வாங்குனது- இன்னும் படிக்கலை. அனேகமா இன்னும் பத்துவருசத்துக்குள் படிச்சுருவேன்.
கமெண்ட் மாடெரேட்டர் போடுங்க பின்னோக்கி ஒரு அனானி லுசுத்தனமா பின்னோட்டம் போட்டிருக்கு
நன்றி..மைன்ட்ல வச்சிக்கிறேன்..:)
புத்தகம் வாங்குறது சரி.. படிப்பீங்களா??? :-)
அப்ப.. சென்னை வந்தா, உங்ககிட்ட புக்கை கடன் வாங்கி படிச்சிக்கலாம். ஏப்ரல் மாசத்துக்குள்ள படிச்சு முடிச்சிடுங்க!! ஏன்னா.. ஏப்ரல்ல இந்தியா வர்றேனே...
ஜுராசிக் பார்க் தமிழில் படிக்கவும்.
ஏய் !! கலை சென்னை வர்றாராம். எல்லாம் ஓடிடுங்க :)
நன்றி
நாஞ்சில் - அனானி கமெண்ட் நிறுத்திட்டேன்.
வினோத்கௌதம்
ராம்
வித்யா
பா.ராஜாராம் - வாங்கிட்டாப் போச்சு.
நல்ல பகிர்வு. புத்தக தேர்வுகள் நல்லா இருக்குங்க.
அன்பின் பின்னோக்கி
நல்ல நூல்கள் - படித்திருக்கிறேன் அனைத்து சுஜாதா - பாலகுமாரன் - இரா.முருகன் நூல்களையும் - மற்றவையும் படிப்போம்
நல்வாழ்த்துகள்
நண்பர் பிண்ணோக்கி, உங்களுக்கு இது வரை லயன் முத்து யாரும் வாங்கி வைக்கவில்லை என்றால், நான் போகும் போது வாங்கி விடுகிறேன்... என்னென்ன புத்தகங்கள் வேண்டும் என்று கூறுங்கள்.
அனானிகள் தொல்லை இங்குமா... அவர் அவர் கருத்தை விமர்சிக்கலாம், ஆனால் முறை இருக்க வேண்டும். இப்படிபட்ட ஆட்களிடம் இருந்து கருத்தே வாங்காமல் நீங்கள் செய்தது தான் சரி.
நீங்கள் கூறிய மத்த புத்தகங்களையும், தேடி பார்த்து விடுகிறேன், கண்காட்சியில்.
கலையரசன் ஒரு நல்ல கேள்வி கேட்டிருக்கிறார், வாங்கினதெல்லாம் சரி, படிப்பீங்களான்னுட்டு!
அதற்குப் பதிலையே காணோமே!
வீணையின் தந்திகளும் மீட்டுகிற விரல்களும் சேரும்போது தான்இசை வரும்! புத்தகங்கள் வாங்கி வைத்த வீணை மட்டுமே! படிப்பது என்பது, மீட்டுகிற விரல்கள் மாதிரி!
நன்றி கிருஷ்ணமூர்த்தி சார். 80 சதவிகித புத்தகங்களைப் படித்துவிட்டேன். இந்த புத்தகக் காட்சிக்கு வாங்கியதில் 2 புத்தகம் படித்து விட்டேன் :). இசை வர ஆரம்பித்துவிட்டது.
Post a Comment