ஞாயிற்றுக் கிழமை, 4 மணியளவில் ஜாக்கிசேகர் தன் பதிவில், பாரதி பதிப்பகத்தில், சுஜாதா எழுதிய நாவல்கள் மிகவும் மலிவான விலையில் கிடைப்பதாக எழுதியிருந்தார்.
என்னென்ன புத்தகங்கள் இருக்கிறது என்று தெரியவில்லை. யார் வாங்கி வருவார்கள் தெரியவில்லை.
பதிவினை மீண்டும் படித்த போது ஒரு ஐடியா. உடனே அந்தப் புகைப்படத்தை பெரிது படுத்திப் பார்த்தேன். அதில், சுஜாதாவின் புத்தகங்கள்
காகிதச் சங்கிலிகள்
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
அப்பா, அன்புள்ள அப்பா
மனைவி கிடைத்தாள்
ஹைக்கூ ஒரு எளிய அறிமுகம்
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய
வல்லமை தாராயோ
இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள்
நான்கடி சவுக்கு
மிஸ் இந்தியா மிஸ்ஸிங்
எல்லாம் பொய்
ஆரம்பத்தில் அப்படித்தான்
புத்தகங்கள் தெளிவாக தெரிந்தது. சரி, புத்தகங்களின் பெயர் கிடைத்துவிட்டது. யார் வாங்கி வருவார்கள்?. தூண்டிலை வீசினேன். பொறுமையுடன் காத்திருந்தேன். 6 மணியளவில் என் மனைவியின் தம்பி உருவில் 6 அடி மீன் சிக்கியத (பதிவு படிக்கும் பழக்கம் என் மச்சானுக்கு இல்லை. அதனால் தைரியமாக எழுதுகிறேன்).
”எங்க இருக்கு இந்த புத்தகக் காட்சி?”
“பச்சையப்பா காலேஜ் பக்கத்துல. அந்த இடத்துக்கு போய் யார்கிட்ட கேட்டாலும் சொல்லுவாங்க. கண்டுபிடிக்குறது ரொம்ப ஈஸி”
“சேட்டன் பகத் எழுதுன புத்தகம் இருக்குமா ?”
“நீ வேற, 10 கோடி புக் இருக்கு. சேட்டன் பகத் புக் இல்லாம இருக்குமா ?”
(அட, என்ன சொன்னாலும் வீட்டை விட்டு கிளம்ப மாட்டேங்குறானே ?)
“ஸ்டால் நம்பர் தெரியுமா ?”
“125. நேரா அங்க போ. இந்த புக் லிஸ்ட் காண்பி. அவங்களே எடுத்துக் கொடுப்பாங்க. நீ தேட வேண்டியதிருக்காது”
ஒரு வழியாக 6.30 மணியளவில் கிளம்பி, 7.30 மணிக்கு போய், 8 மணிக்கு “நீங்க சொன்னதுல 4 புக்ஸ் கிடைக்கலை. மத்ததெல்லாம் வாங்கிட்டேன்” என்ற தகவல் கேட்டு, உஸ்... ஒரு வழியா, இந்த புத்தகக் காட்சியை வீட்டிலிருந்தபடியே முடித்த சந்தோஷத்தை அனுபவித்தேன்.
பெரும்பாலான புத்தகங்கள் 1990-களில் பிரிண்ட் ஆனது. அப்பொழுது விற்பனை விலையான ரூபாய் 15-க்கே தந்தார்கள். இதனால் பாரதி பதிப்பகத்திற்கு நஷ்டமா ? தெரியவில்லை. எப்படியிருந்தாலும், புத்தக விலையை மாற்றாமல், பழைய விலைக்கே விற்றது நல்லதாகப் போயிற்று. தகவல் தந்த ஜாக்கிசேகர் அவர்களுக்கு நன்றி (புகைப்படத்திற்காக இன்னுமொரு நன்றி).
13 பின்னூட்டங்கள்:
Nice Idea!
-Karthick
http://eluthuvathukarthick.wordpress.com/
நானும் அந்த பதிவ படிச்சிட்டு தான் போய் பார்த்தேன்
எனக்கு ஒரு போன் பண்ணியிருந்தா வாங்கி தந்திருக்க மாட்டேனா?
நான் உங்களுக்கு போன் பண்ணி வாங்கி வைக்க சொல்லலாம்னு இருந்தேன்! தப்பிச்சிட்டீங்களே பாஸ்...
நல்லா படிங்க:)
சென்னையில் இல்லாததில்...இது ஒரு வருத்தம்...!!!
காலேஜ் படிக்கும்போது ஒரே ஒரு முறை கண்காட்சிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது..அதுக்கப்புறம் சென்னை வர்றதே அப்பப்போதான்...
நல்ல புத்தகங்களை படிச்சுட்டு எங்களுக்கும் அறிமுகப்படுத்துங்க...!!!
மச்சான் நல்லா உதவி பண்ணி இருக்காரு. புத்தகத்தை நீங்களே படிச்சிருவீங்கள்ள?
நன்றி
biopen
சங்கர் - மச்சான் இந்த ஹெல்ப்பாவது பண்ணட்டுமேன்னு தான் :)
கலையரசன் - மீ த எஸ்கேப்
வித்யா
சிவன் - :(
சித்ரா - ஏங்க எனக்கு கால்ல தான் அடிபட்டிருக்கு, வாய்ல இல்லை. அதுனால படிக்க முடியும். ஓ. சாரி.. கண்ணுல அடிபடலைன்னு சொல்ல வந்தேன் :). ஐயய்யோ.. வாய வெச்சுகிட்டு சும்மா இல்லாம கண்ணு, வாய்னு எழுதிட்டேனே. ஆண்டவா என்ன உட்டுடு.
எப்படியோ சில புத்தகங்கள் தேத்திட்டீங்க போல...
ஆமாம் என் இன்னும் தமிளிஷ் சப்மிட் பண்ணப் படாமல் இருக்கு? அப்புறம் எப்படி வோட் போடறது?
நன்றி ஸ்ரீராம் - இந்த பதிவுல வெறும் புக் லிஸ்ட் மட்டுமே இருக்குறதால, தமிழிஸ்ல போடலைங்க.
எனக்கு ரெண்டு புக் பார்சல்..:)
வீட்டுல இருந்தே புத்தக கண்காட்சியும் பார்த்து, புத்தகத்தையும் வாங்கிட்டீங்க,,,சூப்பர்...
உங்ககிட்ட அப்ப கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு...
நன்றி பின்னோக்கி.. அங்கு இருந்த சுஜாதா, பட்டுகோட்டை பிரபாகர், சுபா, எல்லாம் என் வீட்டில்... உங்களுக்கு வாசிக்க வேண்டும் என்றால் என்னிடம் வாங்கி போய்வாசிக்கலாம்...
அன்புடன்
ஜாக்கி
மச்சான்கள் எதற்கெல்லாம் தான் பயன் படுகிறார்கள்! ஆமாம், மனைவிக்குத் தெரியுமா இதெல்லாம்?
Post a Comment