14 January 2010

எதுவும் மாறவில்லை

விடிந்து சில நிமிடங்களில் முழிப்பு வந்தது. ஓய்வு என்பதே இல்லாமல் போன வாழ்க்கை, காலையில் எழுந்ததிலிருந்து வேலை. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய் கழியும் இந்த வாழ்க்கைச் சுழலில் ஏன் சிக்கினோம் என்று சில நேரம் தோன்றுகிறது அவனுக்கு. ஆனால், மங்கிய ஒளியில், சலனமில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவி, மகளை பார்க்கும் போது புது சக்தி கிடைக்கிறது. அது தான் அவனை தினமும் போராட வைக்கிறது.

அமைதியான இடத்தில் வீடு. மரங்களடர்ந்த, அருகில் சலசலக்கும் ஆறு என்று இயற்கையை சார்ந்த வாழ்வும் சில நேரங்களில் வெறுத்துப் போகிறது.


வெளியே வந்து பார்த்த போது, சற்று முன் எழும்பி இருந்த சூரியனை மழை மேகங்கள் சூழத் தொடங்கியிருந்தது. இந்த வானிலையில் வெளியே போவது சரியில்லை என நினைத்தான். மீண்டும் கண் மூடித் தூங்க முயற்சித்தான்.

”எழுந்திரிங்க !!, சாப்பிட ஒன்றும் இல்லை” என்ற குரல் கேட்டு முழித்தவனுக்கு தான் வெகு நேரம் தூங்கிவிட்டது போல இருந்தது. கண்ணைக் கசக்கி பார்க்கும் போது, எதிரிலிருந்த அவளின் உருவம் இப்பொழுது தெரிந்தது.

“வெளியே இவ்வளவு மழை பெய்யும் போது எப்படி வெளியே போவது ?” என்றான்.

“வேறு வழியில்லை, சாப்பிட எதாவது வேண்டும். அவளுக்கு மிகவும் பசிக்கிறது. சின்னக் குழந்தை, பசியால் அழ ஆரம்பித்துவிட்டால் கடினம்” என்றாள்.

பெய்யும் மழையில் வெளியே போனவன் ஒரு மணி நேரம் கழித்து, முழுவதும் நனைந்தவாறு, ”மழை நிற்காது போல இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இதையே வைத்துக்கொள்” என்று, அப்போது வேட்டையாடிய காட்டு எருமையின், காலை மட்டும் அவளிடம் தந்துவிட்டு, முப்பத்தியிரண்டாயிரம் வருடங்கள் கழித்தும் குகைச்சுவற்றில் அழியாமல் இருக்கப்போகும் வேட்டைக் காட்சியை வரையத் தொடங்கினான்.

நன்றி: http://images.bidorbuy.co.za/

24 பின்னூட்டங்கள்:

Paleo God said...

ஆயிரத்தில் ஒருவனும் அவதாரும் ஒரே நேரத்துல பார்த்த பாதிப்பா???

::))

சிம்பிள் & நச்.::)

vasu balaji said...

இது நல்லாயிருக்கே. இது பின்னோக்கித்துவமா:))

வெற்றி said...

கதை அருமைங்க!! :))

Chitra said...

வேட்டையாடிய காட்டு எருமையின், காலை மட்டும் அவளிடம் தந்துவிட்டு, முப்பத்தியிரண்டாயிரம் வருடங்கள் கழித்தும் குகைச்சுவற்றில் அழியாமல் இருக்கப்போகும் வேட்டைக் காட்சியை வரையத் தொடங்கினான். ................. வேட்டையாடு, அழியாமல் வரைந்து விடு .............. பதிவில் போட்டு விடு. அருமை.

பின்னோக்கி said...

நன்றி

பலாபட்டறை - :-)

வானம்பாடிகள் - ரொம்ப பின்னோக்கிட்டேன்னு நினைக்கிறேன். நீங்க பின்நவீனத்துவம்னா என்னன்னு சொன்னீங்கன்னா, பின்னோக்கித்துவத்த பத்தி சொல்றேன்

வெற்றி - நன்றி

சித்ரா - நன்றிகள் ரசித்ததற்கு. சம்பவங்கள் எதுவும் தோன்ற வில்லை. அதனால் மிகவும் படுத்தாமல் சிறியதாக எழுதினேன்.

ஸ்ரீராம். said...

பழங்கதைன்னு சொல்றதா...புதுக் கதைனு சொல்றதா...

அண்ணாமலையான் said...

காலச்சுவடு?

Prathap Kumar S. said...

பின்னோக்கி வர வர நீங்க ரொம்ப பின்னாடி பார்க்கிறீங்க... நாயகன் படம் விமர்சனம் போடும்போது 22 வருஷம் பின்னாடி போனீங்க... இப்ப 32 ஆயிரம் வருஷமா... விட்டா ஆதாம் ஏவாள் காலத்துக்கே போயிருவீங்களோ??

எப்படியோ ஆனா கதைநல்லாருக்கு... அந்த எருமைக்கும் காலுதான்போச்சா
:-)

ப்ரியமுடன் வசந்த் said...

அதுக்காக இம்புட்டு நாள் பின்னோக்கி பார்க்கிறதெல்லாம் ரொம்ப ஓவரு...

Romeoboy said...

You mean அதிவாசி ??

என் நடை பாதையில்(ராம்) said...

ரொம்ப பின்னோக்கிட்டீங்க போலிருக்கு...

நட்புடன் ஜமால் said...

ஆம்! எதுவும் மாறவில்லை தான்

இந்த பதிவு கூட அப்படி ஒரு வேட்டைக்காட்ச்சியை பதிவு செய்ததாக இருக்கலாம் 32இலட்சம் ஆண்டுகள் கழித்து - அப்பவும் யார்ன்னா பின்னோக்கி - பின்னோக்கியை (ப்லாக்கை)பார்க்கக்கூடும்

வினோத் கெளதம் said...

Reverse gear போட்டு ரொம்ப வேகமா போய்டிங்க போல :)

பின்னோக்கி said...

நன்றி

ஸ்ரீராம்

அண்ணாமலையான் - சயின்ஸ் பிக்‌ஷன் மாதிரி டைம் பிக்‌ஷன் டிரை பண்ணினேன்.

நாஞ்சில் பிரதாப் - கால் மேட்டர் நீங்க சொல்லிய பிறகு தான் கவனித்தேன். தூக்கிவருவதற்கு எளிது என்பதால் கால் என்று எழுதினேன் :)

பிரியமுடன் வசந்த் - :)

ரோமியோபாய் - கற்கால மனிதனுங்க.

என் நடைபாதையில் - :-)

நட்புடன் ஜாமால் - ஆஹா ! உங்கள் பாராட்டுக்கு நன்றி. காலத்தை கடந்து நிற்கும் பதிவுன்கிறீங்க. தேங்க்ஸ்.

வினோத் கௌதம் - பின்னோக்கின்னு பேர் வெச்சுட்டு இதக் கூட பண்ணலைன்னா எப்படி ? :)

அப்பாதுரை said...

சுவை

Rettaival's Blog said...

பின்னோக்கி சார்...வால்கவிலிருந்து கங்கை எதுவும் படிச்சீங்களா? அநியாயத்துக்கு பின்னோக்கிப் போறீங்க!
Really an excellent one!

நர்சிம் said...

நல்லா இருக்கு பாஸ் இது

S.A. நவாஸுதீன் said...

ஆயிரத்தில் ஒருவனும் அவதாரும் ஒரே நேரத்துல பார்த்த பாதிப்பா???

அதேதான் போல. ரொம்ப பின்பின்னோக்கியா மாறின மாதிரி இருக்கு. கலக்குங்க.

பின்னோக்கி said...

நன்றி*அப்பாதுரை

நன்றி*ரெட்டைவால்’ஸ் - இல்லைங்க அந்த புத்தகம் படிச்சதில்லை. ஏன் ? அதுல இது மாதிரி இருக்கா ?. சத்தியமா காப்பி இல்லைங்க. நம்புங்க :). சில வாரம் முன்னாடி, குகை ஓவியங்களை வரைந்தது, அந்த கால பெண்களாக இருக்கலாம்னு ஒரு செய்தி வந்தது. அதை வைத்து, வாழ்க்கை எத்தனை ஆயிரம் வருடங்களிலும் மாறவில்லை என்பதை வைத்து எழுதினேன்.

நன்றி*பா.ராஜாராம்
நன்றி*நர்சிம்
நன்றி*S.A.நவாஸீதீன்.

ஜோதிஜி said...

நன்றாக நினைவில் இருக்கிறது.

கோவையை சேர்ந்த சுரேஷ் வலைதள அறிமுகமாக என்னுடைய சுதந்திர தொடரை அறிமுகப்படுத்திய போது உங்கள் இடுகை அறிமுகம் ஆனது. பிரதிப் அறிமுகப்படுத்திய போது தான் உள்ளே வந்தேன்.

ஏதோ ஒரு வகையில் உங்களின் தனித்துவம் இன்று வரையில் காப்பாற்றிக்கொண்டுருப்பதும் இடுகையின் பெயரை சார்ந்து இருப்பதும் மிகுந்த ஆச்சரியம்.

வாழ்த்துகள்.

Rettaival's Blog said...

அய்யோ பின்னோக்கி சார்...அதனுடைய பாதிப்பு இருக்குன்னு தான் சொன்னேன்! தவிர இவ்வளவு சரித்திர ஆர்வம் உள்ளவர் அந்த புத்தகத்தைப் படிக்கலைன்னாதான் ஆச்சரியமா இருக்கு! ராகுல சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை ஆத்திகர், நாத்திகர் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று! உங்களின் "படிக்க வேண்டிய புத்தகங்கள் "பதிவிலிருந்தே நீங்கள் ஒரு சரித்திர வெறியர்(?) என்று தெரிந்து கொண்டேன்.

You can add this email id to chat with me vignesh.vj@gmail.com ....of course if you wish only!

geethappriyan said...

ஓய்வுக்குபின் வேட்டை துவங்கியாச்சா பாஸ்?ஓட்டௌக்கள் போட்டாச்சி

அமுதா said...

ம்... எதுவும் மாறவில்லை தான்

ராஜன் said...

ஐகவிதை போல ஒரு கதை,சூப்பர் சார்,
இதெல்லாம் ஏன் எல்லோராலையும் எழுத முடியலை,உங்க பேரை முன்னோக்கின்னு வைங்க அதுதான் கரைட்.டாட்டா .பை பை