21 January 2010

சில (உண்மை) ஜோக்குகள்

3 வது அண்ணன் இன்ஜினியரிங் டிராயிங் கிளாஸ்க்கு தேவையான சில உபகரணங்களை எடுத்துப் போகவில்லை. லெக்சரர் வரிசையாக செக் பண்ணிக்கொண்டே வந்திருக்கிறார். எதாவது எடுத்து வராதவர்களிடம் காரணம் கேட்டுவிட்டு, அவர்களது ரோல் நம்பரை குறித்து வைத்துக்கொண்டார். என் அண்ணனிடம் வந்து நின்றவுடன், அவர் எதுவும் கேட்கும் முன்,

“என் ரோல் நம்பர் E77567" என்றான்.



1993 ஆம் வருடம். இன்ஜினியரிங் காலேஜ், கம்பியூட்டர் லேப்.
என் 3வது அண்ணனின் நண்பர்கள், ஒரு கம்பியூட்டரிலிருந்து இன்னொரு கம்பியூட்டருக்கு டேட்டா அனுப்பும் ஒரு புராஜெக்ட் செய்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒருவர்

“டேய் ! யார்ரா அது, கேபிள்ல கால்ல மிதிக்கிறது ?. இந்த கம்பியூட்டர்ல டேட்டாவே வரலை”

கேபிளை, தண்ணீர் கொண்டு செல்லும் பைப் போல நினைத்த அவர், இன்று அமெரிக்காவில் பெரிய நெட்வொர்க்கிங் கம்பெனியில் பணிபுரிகிறார். இதில் இருந்து ஏட்டுச்சுரக்காய் கறிக்குத் தேவையில்லை என்பது புரிகிறது.



கம்பியூட்டர் லேபுக்கு பரிட்சை அன்று மட்டுமே வருகை தரும் சிலரில் ஒருவருக்கு, கேள்வித்தாள் தரப்பட்டு, அவரும் விடைத்தாளில் எதோ எழுதினார். அதை கம்பியூட்டரில் அடித்து, விடை எடுத்துக்கொடுக்க வேண்டும். கம்பியூட்டரின் முன் அமர்ந்தவர், அரை மணி நேரம் கழித்து,
“சார் ! இந்த கம்பியூட்டர் ரிப்பேர் போலயிருக்கு !”
“ஏன் ? என்ன ஆச்சு”
“கம்பியூட்டர் ஸ்கிரீன் (மானிட்டர்) கருப்பா இருக்கு, கீ போர்டுல என்ன அடிச்சாலும், மானிட்டர்ல ஒன்னும் வரலை”
“டேய் !, மானிட்டருக்கு பின்னால இருக்குற ஸ்விட்ச்ச போடுடா.”
(பழைய கால கம்பியூட்டரின் மானிட்டர்களுக்கு, ஆன் ஸ்விட்ச் பின்னால் இருக்கும் என்பது நாம் அறிந்ததே)




என் அண்ணனின் நண்பர் ஒருவர் இன்ஜினியரிங் டிராயிங் பரிட்சையில் எடுத்த மார்க் 100. இதில் என்ன ஆச்சரியம் ?. அவர் விடை எழுதியது 80 மார்க்குக்கு மட்டுமே. இன்று வரை என்ன நடந்தது என்பது அவருக்கே புரியாத புதிர்.


டிஸ்கி: மேலே சொன்ன அனைத்தும் நீங்க தானே செய்தீர்கள் ? என்று வரும் பின்னூட்டங்கள் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

36 பின்னூட்டங்கள்:

Anonymous said...

மேலே சொன்ன அனைத்தும் நீங்க தானே செய்தீர்கள் ? kekekekeke......

நட்புடன் ஜமால் said...

வேற யாருமே செய்யாததை தானே செய்திருக்கீங்க

ச்சே ச்சே

சொல்லியிருக்கீங்க ...

Mohan said...

"கம்பியூட்டர் ஸ்கிரீன் கருப்பா இருக்கு"‍‍-இந்த மாதிரி இப்ப வரைக்கும் நடக்கிற மாதிரிதான் தோணுது.

Unknown said...

//Blogger முகிலினி said...

மேலே சொன்ன அனைத்தும் நீங்க தானே செய்தீர்கள் ? kekekekeke......//

வழி மொழிகிறேன்...,

சைவகொத்துப்பரோட்டா said...

//மேலே சொன்ன அனைத்தும் நீங்க தானே செய்தீர்கள் ? என்று வரும் பின்னூட்டங்கள் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்படும்//

"இந்த சோக்" கூட நல்லா இருக்கு.

Chitra said...

ஹா, ஹா, ஹா,......good ones!

சந்தனமுல்லை said...

ROTFL!!

பகிர்வுக்கு நன்றி!

அண்ணாமலையான் said...

சிரிச்சிக்கிட்டே இருக்கேன்

vasu balaji said...

இதை வேற கேட்கிறோமா:))

சங்கர் said...

அங்க ஒருத்தரு மூக்கிலே குத்தணும்னு சொல்றாரு, நீங்க மிதிச்சேன்னு சொல்றீங்க, கேபிள் மேலே ஏன் இந்தக் கொலைவெறி :))

sathishsangkavi.blogspot.com said...

இது உண்மைக்கதை தானே....

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. எல்லாமே சூப்பர்தான். உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி. நானா இருந்தா இப்படி என்னபத்தி உண்மையை சொல்லமாட்டேன்.

ஸ்ரீராம். said...

தமாஷ்...

என் மாமா கூட இப்படி ஒன்று சொல்வார். மூன்று Points கேட்ட இடத்தில் அவர் தனக்கு தெரிந்த இன்னும் மூன்று points சேர்த்து எழுத திருத்தியவர் அதற்கும் மார்க் போட்டு விட நூறுக்கு நூற்று ஐந்து எடுத்த கதையை சொல்லி உள்ளார்

Prathap Kumar S. said...

ஹஹஹ சூப்பர், கேபிள்ல காலால மிதிக்கிறது செம காமெடி... அதுல தத்துவத்தை வேற சொல்லிட்டீங்க

வெற்றி said...

//என் அண்ணனின் நண்பர் ஒருவர் இன்ஜினியரிங் டிராயிங் பரிட்சையில் எடுத்த மார்க் 100. இதில் என்ன ஆச்சரியம் ?. அவர் விடை எழுதியது 80 மார்க்குக்கு மட்டுமே. இன்று வரை என்ன நடந்தது என்பது அவருக்கே புரியாத புதிர்.//

இப்போவெல்லாம் எல்லா தேர்விலும் இப்படிதான் நடக்கிறது..அதிலும் அண்ணா பல்கலைகழகம் மிக கொடுமை...

கல்லூரி படிப்பை முடித்தபின்பு அதை பற்றி சொல்கிறேன்..

Subankan said...

மேலே சொன்ன அனைத்தும் நீங்க தானே செய்தீர்கள் ?

Unknown said...

நல்லா இருக்கு. ரசித்தேன்.

Unknown said...

நல்ல காமெடி..

இது மாதிரி பல பாத்துருக்கேன்... :)

Jackiesekar said...

நல்ல காமெடி பாஸ்...

Deepan Mahendran said...

டேய் ! யார்ரா அது, கேபிள்ல கால்ல மிதிக்கிறது ?. இந்த கம்பியூட்டர்ல டேட்டாவே வரலை”

இது Highlight காமெடி..!!!

ரோஸ்விக் said...

தமாஷு...

கேபிள காலால மிதிச்சிங்கன்னா... அடுத்தவாரம் திங்கட்கிழமை நீங்க கொத்துபரோட்டாவா வருவீங்க... :-))

பின்னோக்கி said...

டிஸ்கி போட்டாலும் போட்டேன், என் வாயால நானே கெட்டேன் :).

கேபிளாருக்கும் எனக்கும் உள்ள பிரச்சினையை பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை :-). (எதோ எழுதுனா, அதுக்கு இத்தனை அர்த்தம் கண்டுபிடிக்கிறீங்களே).

தணிக்கை குழு இன்று ரெஸ்ட் எடுப்பதால், நாளை பரிசீலனை தொடங்கும்.

மாதேவி said...

சிரி...சிரி...சிரி....

ஈரோடு கதிர் said...

நம்பிட்டேன்...


ஆனா சிரிச்சேன்...சிரிச்சேன்...சிரிச்சேன்

Arun said...

நல்ல இருந்தது பின்னோக்கி

ப்ரியமுடன் வசந்த் said...

:)))

ஜமாலண்ணா இதேமாதிரி உங்க காலேஜ் லேப்லயும் நடந்துச்சுன்னு போன வாரம் சொன்னீங்கதானே...

ROTFL

Romeoboy said...

படித்தேன் ரசித்தேன்.. அந்த டேட்டா ஜோக் நல்ல இருக்கு தலைவரே ..

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..அருமை பின்னோக்கி!

//கேபிள காலால மிதிச்சிங்கன்னா... அடுத்தவாரம் திங்கட்கிழமை நீங்க கொத்துபரோட்டாவா வருவீங்க... :-))//

மகனே..timing..

:-))

Anonymous said...

//மேலே சொன்ன அனைத்தும் நீங்க தானே செய்தீர்கள் ? //

கேட்டாச்சு :)

ஆ.ஞானசேகரன் said...

அனைத்தும் கலக்கல்

வரதராஜலு .பூ said...

ஹா ஹா ஹா

கண்ணகி said...

80க்கு 100தான் இருக்கிறதுலயே டாப்..ஹா,,ஹ,..

மந்திரன் said...

//மேலே சொன்ன அனைத்தும் நீங்க தானே செய்தீர்கள் ?//
நாங்க கேட்க மாட்டோம் .
இது எல்லாம் நீங்கத்தானே செய்து இருப்பீங்க என்று தெரியும்

கே. பி. ஜனா... said...

அடடா.. அப்புறம் என்ன நடந்தது?

சிங்கக்குட்டி said...

//யார்ரா அது கேபிள்ல மிதிக்கிறது //

ஹ ஹ ஹா சூப்பர். கலக்கல் காமிடி இது மதியம் படிக்கும் போது சத்தம் வரும் படி சிரித்து விட்டேன்.

geethappriyan said...

நண்பரே
இது எல்லாமே யாரை உள்ளிட்டு பார்த்தாலும் அவர்களுக்கும் பொருந்தும் போல,நான் உங்கலையே வைத்து பார்க்கிறேன்.:))