26 January 2010

சாலையோரம் - தொடர் பதிவு

(என் வானம் அமுதா, இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்)

7 வயதில், காரில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, என் 3 வது அண்ணன், தூரத்தில் வரும் வண்டியைப் பார்த்து பயந்து, அவசரமாக அவன் கையை வைத்தே கார் கதவை மூட, விரல் மாட்டி நசுங்கியது. இது தான் எனக்கு நியாபகமிருக்கும் முதல் விபத்து.


முதன் முதலில் நான் கார் ஓட்டியது 9 வயதில். பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய உடன், காரை எடுத்துக்கொண்டு இரண்டு தெரு ஓட்டிவிட்டு, மூச்சிரைக்க வீடு திரும்புவேன். கையில் கருப்பாக டயரின் வண்ணம் ஒட்டியிருக்கும். தேய்ந்து போன பழைய டயரை, கார் என யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் என்ன ?.

2வது அண்ணன் சைக்கிள் வாங்கிய கதையை இந்த பதிவில் எழுதியிருக்கிறேன்.

சென்னையில் மவுண்ட் ரோடில் TVS-50 ஓட்டியது ஒரு சாதனையாக இருந்த காலம் அது. ஒரு நாள் இடது பக்கம் சிக்னல் பார்க்காமல் திரும்பிய போது, அங்கு மறைந்து (???) நின்ற காவலர் லபக் என்று கோழி மாதிரி அமுக்கினார். அபராதம் கட்டிய போது, அந்த ரசீதில் எழுத என் அப்பாவின் பெயரை சொன்ன போது, ரொம்ப வருத்தமாக இருந்தது.

பைக் ஓட்டும் போது, சாலையில் இடது புறத்தில், மிகவும் இடப்புறமாக ஓட்டும் பழக்கம். என்றைக்குமே சாலை நடுவில் பெரிய வண்டிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டியதில்லை. இப்பொழுது கார் ஓட்டும் போதும் 50 கி.மீ வேகத்திற்கு மேல் போவது இல்லை. இதை பலர் கிண்டல் செய்த போதும், நான் கண்டு கொண்டதில்லை. குருதிப்புனல் படத்தில் வரும் வசனம் “ஒவ்வொருத்தருக்கும் ஒரு ப்ரேக்கிங் பாயிண்ட் இருக்கு”. அதுபோல, வண்டி ஓட்டும் ஒவ்வொருவருக்கும், தன்னால் கட்டுப்படுத்தக்கூடிய அதிக பட்ச வேகம் என்று ஒன்றிருக்கிறது. அதனை உணர்ந்து ஓட்டினால் நிறைய விபத்துக்களைத் தவிர்க்கலாம். எனக்கு 50 கி.மீ தான்.

ஒரு நாள் அலுவலகம் போகும் போது பார்த்த, சாலையில் சிதறிக் கிடந்த ஒரு பைக்கும், மதிய உணவு அடங்கிய சாப்பாட்டுக் கூடையும் இன்னும் நினைவிலிருக்கிறது. சாலைகளில் சில இடங்களில், விபத்து நடந்த இடத்தில் ஒரு மனித உருவம் வரைந்து வைத்திருப்பார்கள். அந்த இடத்தை கடக்கும் போது அனைத்து வண்டிகளின் வேகம் தானாகவே குறையும். இப்பொழுது அப்படி வரைவது இல்லை ??.

இன்றைய நிலையில், உடலுறுப்பில் சேதாரம் இல்லாமல் வீடு திரும்புவது ஒரு சாதனையாகவே இருக்கிறது.

ஒரு சின்ன பார்முலாவைக் கடைபிடிப்போம். கொஞ்சம் பொறுமை + 100 சதவிகிதம் சாலை விதிகள் கடைபிடித்தல் - மது - செல்போன் = விபத்து குறைவான சாலை.

சுடச்சுட: இன்று காலை (27 ஜனவரி) வரும் போது, என் காரில் பின் விளக்கு, ஒரு பஸ்ஸீக்கு பிடித்துப் போக, மாட்டி இழுத்துவிட்டது. விளக்கோடு போயிற்று. 

41 பின்னூட்டங்கள்:

Radhakrishnan said...

வேகம் விவேகம் அல்ல என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\“ஒவ்வொருத்தருக்கும் ஒரு ப்ரேக்கிங் பாயிண்ட் இருக்கு”. அதுபோல, வண்டி ஓட்டும் ஒவ்வொருவருக்கும், தன்னால் கட்டுப்படுத்தக்கூடிய அதிக பட்ச வேகம் என்று ஒன்றிருக்கிறது. அதனை உணர்ந்து ஓட்டினால் நிறைய விபத்துக்களைத் தவிர்க்கலாம்//

அழகா சொல்லி இருக்கீங்க..யார் என்ன சொன்னால் என்ன . நாம் சரியா இருக்கனும்ன்னு நினைக்கிறதுக்கு பாராட்டுக்கள்..

Prathap Kumar S. said...

//தேய்ந்து போன பழைய டயரை, கார் என யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் என்ன ?.//

சூப்பர் காமெடி...
அருமை பின்னோக்கி, சூப்பரா சொன்னீங்க... தேவையில்லாம ஓவர் ஸ்பீடாப்போனா, கமல் சொன்னா மாதிரி என்ன அவார்டா கொடுக்கறாங்க?

ப்ரியமுடன் வசந்த் said...

//
இன்றைய நிலையில், உடலுறுப்பில் சேதாரம் இல்லாமல் வீடு திரும்புவது ஒரு சாதனையாகவே இருக்கிறது.
//

மிகச்சரியா சொன்னீங்க சார்

மிக வேகமாக வாகனம் ஓட்டுபவர்களால் வாகனம் ஓட்டாமல் நடை பாதையில் நடந்து போகும் பாத சாரிகளின் நிலை பரிதாபத்துக்குரியது

சந்தனமுல்லை said...

/டயரை, கார் என யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் என்ன ?.
/

:-)) பின்னோக்கி டச்!

நல்ல ஃபார்முலா - எல்லோருமே பின்பற்றினால் நலம்!
தொடர்ந்தமைக்கு நன்றி!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சரியாகச் சொன்னீர்கள் பின்னோக்கி, நாம் செய்த தவறால் ஏதும் உயிர் இழப்பு நேர்ந்தால் காலத்துக்கும் சரி செய்ய முடியாத தவறாகி விடும்.
கவனமாக பயணம் செய்வோம்.

Paleo God said...

“ஒவ்வொருத்தருக்கும் ஒரு ப்ரேக்கிங் பாயிண்ட் இருக்கு”. அதுபோல, வண்டி ஓட்டும் ஒவ்வொருவருக்கும், தன்னால் கட்டுப்படுத்தக்கூடிய அதிக பட்ச வேகம் என்று ஒன்றிருக்கிறது. அதனை உணர்ந்து ஓட்டினால் நிறைய விபத்துக்களைத் தவிர்க்கலாம். எனக்கு 50 கி.மீ தான்.//

அருமையா சொல்லி இருக்கீங்க..:)


ஒரு நாள் அலுவலகம் போகும் போது பார்த்த, சாலையில் சிதறிக் கிடந்த ஒரு பைக்கும், மதிய உணவு அடங்கிய சாப்பாட்டுக் கூடையும் இன்னும் நினைவிலிருக்கிறது. சாலைகளில் சில இடங்களில், விபத்து நடந்த இடத்தில் ஒரு மனித உருவம் வரைந்து வைத்திருப்பார்கள். அந்த இடத்தை கடக்கும் போது அனைத்து வண்டிகளின் வேகம் தானாகவே குறையும். இப்பொழுது அப்படி வரைவது இல்லை ??.//

அட நானும் அதை என் சாலையோரம் பதிவில் சொல்லி இருப்பேன்..

மிக நல்ல பதிவு பின்னோக்கி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகா சொல்லி இருக்கீங்க

Unknown said...

நல்ல பகிரதல். மத்தவங்கள மாதிரி ரொம்ப பயமுறுத்தாம அழகா சொல்லியிருக்கீங்க.

sathishsangkavi.blogspot.com said...

//சென்னையில் மவுண்ட் ரோடில் TVS-50 ஓட்டியது ஒரு சாதனையாக இருந்த காலம் அது. ஒரு நாள் இடது பக்கம் சிக்னல் பார்க்காமல் திரும்பிய போது, அங்கு மறைந்து (???) நின்ற காவலர் லபக் என்று கோழி மாதிரி அமுக்கினார். அபராதம் கட்டிய போது, அந்த ரசீதில் எழுத என் அப்பாவின் பெயரை சொன்ன போது, ரொம்ப வருத்தமாக இருந்தது.//

ஆமாங்க தப்பு செஞ்சது நாம் ஆனால் அப்பா பெயரை சொல்லும் போது அனைவரும் தட்டு தடுமாறி தான் சொல்வோம்...

ஜோதிஜி said...

நீங்கள் சொன்ன கடைசி வார்த்தைகளுடன் கொஞ்சம் அதிர்ஷ்டம். உண்மை தான். நீ எப்படி முறைப்படி விதிகளை மதித்து ஓட்டினாலும் நான் இப்படித்தான் இருப்பபேன்னு பேயோட்ட மக்களை எப்படி சமாளிப்பது.

அமுதா said...

/*கையில் கருப்பாக டயரின் வண்ணம் ஒட்டியிருக்கும். தேய்ந்து போன பழைய டயரை, கார் என யாரும் ஒப்புக்கொள்ளவில்லை*/
:-))


ஒரு சின்ன பார்முலாவைக் கடைபிடிப்போம். கொஞ்சம் பொறுமை + 100 சதவிகிதம் சாலை விதிகள் கடைபிடித்தல் - மது - செல்போன் = விபத்து குறைவான சாலை.

நல்ல ஃபார்முலா. எல்லோரும் கடைபிடிப்போம்

பாலா said...

//முதன் முதலில் நான் கார் ஓட்டியது 9 வயதில். //

நல்லவேளை..!! முதல்ல படிச்சப்ப.. ’பணத்திமிர்’ ஒரு பின்னூட்டம் உறுதின்னு நினைச்சேன். :) :)

--

முழுசா படிக்காம.. யாராவது பின்னூட்டம் போட்டாலும் போடுவாங்க பாருங்க! :)

பின்னோக்கி said...

நன்றி
வெ.இராதாகிருஷ்ணன்
முத்துலெட்சுமி - இந்த ஒரு விஷயத்துல மட்டும் வீராப்பு வருவதில்லை எனக்கு :)
நாஞ்சில்
பிரியமுடன் வசந்த்
சந்தனமுல்லை
நாய்குட்டி மனசு
பலா பட்டறை - அட ! எப்படி உங்களின் அந்த பதிவை மிஸ் பண்ணினேன்னு தெரியலை. இப்ப படிச்சேன். உலுக்கிட்டீங்க. கடவுளே !

டி.வி.ராதாகிருஷ்ணன்
முகிலன்
சங்கவி
ஜோதிஜி - நீங்க சொன்னது சரி. அதிர்ஷ்டம் கண்டிப்பாக வேண்டும்.
அமுதா
ஹாலிபாலி - அட ! இத வெச்சே படிக்காம பின்னூட்டமிடுபவர்களைக் கண்டுபிடித்துவிடலாம். நல்லா ஐடியா. நன்றி. :)

vasu balaji said...

தேவையான தெளிவான பகிர்வு.

வினோத் கெளதம் said...

நான் கூட என்னடா ஒன்பது வயசுல கார் ஒட்டி இருக்கிங்களேன்னு பார்த்தேன்..அப்படி பார்த்தா நான் ஏழு வயசிலேயே ஓடிட்டேன்..:)
அந்த படம் மிகஅருமை எந்த ஊரு..!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அழகா சொல்லி இருக்கீங்க

Anonymous said...

பார்முலாவை எல்லாரும் கடைப்பிடிக்கணும். அப்பதான் விபத்துகள் குறையும்.

Chitra said...

ஒரு சின்ன பார்முலாவைக் கடைபிடிப்போம். கொஞ்சம் பொறுமை + 100 சதவிகிதம் சாலை விதிகள் கடைபிடித்தல் - மது - செல்போன் = விபத்து குறைவான சாலை.

...............very effective formula, if followed rightly.

நட்புடன் ஜமால் said...

அபராதம் கட்டிய போது, அந்த ரசீதில் எழுத என் அப்பாவின் பெயரை சொன்ன போது, ரொம்ப வருத்தமாக இருந்தது.]]

எனக்கும் இப்படி ஒரு நிகழ்வு இருந்தது - சாலையோர சண்டையில்

formula is nice.

சைவகொத்துப்பரோட்டா said...

//இன்றைய நிலையில், உடலுறுப்பில் சேதாரம் இல்லாமல் வீடு திரும்புவது ஒரு சாதனையாகவே இருக்கிறது.//

ரிப்பீட்....

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு

Vidhoosh said...

பாராட்டுக்கள்
அருமையா சொன்னீர்கள்.

Jackiesekar said...

வழக்கம் போல் நல்ல கொசுவர்த்தி சுருள்...

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.

புலவன் புலிகேசி said...

//தேய்ந்து போன பழைய டயரை, கார் என யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் என்ன ?.//

நான் ஒத்துக்கறேன் தல. ஏன்னா நானும் அந்த காரை ஓட்டியிருக்கேன். இன்னொன்னு என்னன்னா நான் வாயாலயே கூட கார் ஓட்டிருக்கேன்

சுண்டெலி(காதல் கவி) said...

thevaiyaana...pathivu...avasaraththil marappavarkalukku..

சிவாஜி சங்கர் said...

use full post annaa... :)

பனித்துளி சங்கர் said...

மீண்டும் கடந்த காலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்திருக்கிறது உங்களின் இந்த பதிவு அற்புதம் .
பகிர்வுக்கு நன்றி !

அகஆழ் said...
This comment has been removed by the author.
அகஆழ் said...

\\“ஒவ்வொருத்தருக்கும் ஒரு ப்ரேக்கிங் பாயிண்ட் இருக்கு”. \\
நல்ல கருத்து.
இதோட
‘ஒவ்வொண்ணுக்கும் ஒரு ப்ரேக்கிங் பாயிண்ட் இருக்கு’ னும் போடலாம். ஏன்னா இங்க brake பிடிச்சா எங்கயோ போய் நிக்கும் சில வண்டி :-)

தாராபுரத்தான் said...

அவசர உலகத்தில் அவசியமான பதிவு.

Lucky Limat - லக்கி லிமட் said...

///வண்டி ஓட்டும் ஒவ்வொருவருக்கும், தன்னால் கட்டுப்படுத்தக்கூடிய அதிக பட்ச வேகம் என்று ஒன்றிருக்கிறது. ///

உண்மை நண்பரே , இது தெரியாமல் விபத்துக்குள்ளான நபர்கள் அதிகம்.

அன்புடன்,
லக்கி லிமட்
சுஸ்கி & விஸ்கி தோன்றும் பேரிக்காய் போராட்டம்

சிவாஜி சங்கர் said...

அண்ணா உங்களுக்காக ஒரு ஜாலியான பதிவு என்வலைக்குள் ;) :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

தேய்ந்து போன பழைய டயரை, கார் என யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் என்ன ?. //

:)))) மென்மையான நினைவலைகள்.

கொஞ்சம் பொறுமை + 100 சதவிகிதம் சாலை விதிகள் கடைபிடித்தல் - மது - செல்போன் = விபத்து குறைவான சாலை.

சரியா சொன்னீங்க.

ஆதி மனிதன் said...

//..வண்டி ஓட்டும் ஒவ்வொருவருக்கும், தன்னால் கட்டுப்படுத்தக்கூடிய அதிக பட்ச வேகம் என்று ஒன்றிருக்கிறது. அதனை உணர்ந்து ஓட்டினால் நிறைய விபத்துக்களைத் தவிர்க்கலாம்..//

சரியாக சொன்னீர். அடுத்தவன் 100 Km ஸ்பீடில் போகிறான்னு நாமமும் அத ட்ரை பண்ண கூடாது. நம்ம லிமிட்ட நாம பாலா பண்ணலே பல விபத்துகளை தடுக்கலாம்.

பலா பட்டறையின் வேண்டுகோளுக்கிணங்க என்னுடைய "சாலையோரம் - தொடர் பதிவு" - http://aathimanithan.blogspot.com/2010/01/blog-post_22.html

ஸ்ரீராம். said...

"அபராதம் கட்டிய போது, அந்த ரசீதில் எழுத என் அப்பாவின் பெயரை சொன்ன போது, ரொம்ப வருத்தமாக இருந்தது"

உண்மை. இயல்பான உணர்ச்சி.

Rettaival's Blog said...

விபத்து குறைவான சாலை//

சென்னையில் எங்கே இருக்கிறது அந்த மாதிரியான சாலை. பின்னோக்கி சார்! 100 ஃபீட் ரோட்டிலும் பி.ஹெச் ரோட்டிலும் இரவு 11 மணிக்கு மேல் ஓட்டிப் பாருங்கள்...நம் உயிர் நம்மிடம் மட்டுமில்லை... அடுத்தவன் கையிலும் உள்ளது என்பதும் புரியும். சிக்னலை மதித்தாலே போதும் தலைவரே...பல உயிரைக் காப்பாத்தியிருக்கலாம்! சிக்னலை மதிக்காம இருக்கறது ஹீரோயிசம்னு நினைக்கறது தான் இங்க பிரச்சினை!

அன்புடன் மலிக்கா said...

நல்லகருத்துக்கள் தெளிவான சிந்தனைகள் அருமை..
http://niroodai.blogspot.com

thiyaa said...

அருமையா சொல்லி இருக்கீங்க.

Thenammai Lakshmanan said...

slow and steady wins the race

ithu unmaiyaa pinnookki