25 January 2010

ஏமாற்ற பல வழி - Duplicity ஆங்கிலப் படம்

எப்படித்தான் யோசிப்பாங்களோ ?.
இவங்களால மட்டும் எப்படி நம்புற மாதிரி எடுக்க முடியுது ?
சே ! ஏமாந்துட்டேனே !

மேலே சொன்னவற்றில் எதாவது ஒன்று Duplicity-2009 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு தோன்றுவது 90 சதவிகிதம் நிச்சயம். எனக்கு மூன்றுமே தோன்றியது.


கதை ?. இரண்டு பெரிய மருந்து கம்பெனிகளுக்கு நடுவில் நடக்கும் விற்பனை ரீதியான போட்டி. ஒரு கம்பெனியில் நடப்பதை உளவு பார்த்து தெரிந்து கொள்ள மற்றவர்கள் முயற்சிப்பது. இதற்கு நடுவே கதாநாயகனும், நாயகிக்கும் இடையிலான, யாரை யார் ஏமாற்றுவது என்று போட்டி. கொஞ்சம் காமெடி, ஆக்‌ஷன், த்ரில் மற்றும் ரொமான்ஸ் - இந்த நான்கையும் போட்டு ஒரு குலுக்கு குலுக்கினால் இந்த படம்.

நாயகனாக க்ளைவ் ஓவன், நாயகியாக ஜீலியா ராபர்ட்ஸ்.  இருவருக்கும் இடையில் காதல் என்று நாம் ஒரு காட்சியில் நினைக்க, அடுத்த காட்சியில், நாம் நினைத்தது தவறோ ? என்று நினைக்கும் வகையில் அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு காதல் !!. 40 மில்லியன் டாலர் சம்பாதித்து விட்டு, தொழிலுக்கு சுபம் போடலாம் என்ற கனவில், இருவரும் கடைசியாக, இந்த மருந்து கம்பெனி உளவில் ஈடுபடுகிறார்கள்.


ஜீலியாவுக்கு மருந்து கம்பெனியில் பாதுகாப்புப் பிரிவில் வேலை. அந்த கம்பெனி ஒரு புதிய தயாரிப்பை அடுத்த 10 நாட்களில் உலகிற்குத் தெரிவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும், அந்த புதிய மருந்து என்னவென்று அவள் கண்டுபிடித்து, அதன் பார்முலாவை போட்டிக் கம்பெனிக்குத் தெரிவிப்பதே கதை.

டபுள் கிராஸிங் எனப்படும் ஒருவனை மற்றொருவன் ஏமாற்றுவது படம் முழுக்க இருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால் ஒரு கட்டத்தில், எந்த கதாபாத்திரத்தையும் நம்ப முடியாத அளவுக்கு நம்மை நம்ப வைக்கிறார்கள். ஓ! இவன், இவனை ஏமாற்றுகிறான் என்று நாம் நினைக்கையில், அடுத்த காட்சியில் நிலைமை தலைகீழாக மாறுகிறது.

2 மணி நேரம் உங்களுக்கு கிடைத்து, கிளைமேக்ஸில் ஒரு ட்விஸ்ட் உள்ள பொழுது போக்கான படம் ஒன்று பார்க்க நினைத்தால், இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்.

கடைசி காட்சியில் அவன் சிரிக்கும் போது, நமக்கு “ஏமாத்திப்புட்டீங்களே அய்யா!” என்று அம்மா தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னது (பாடியது) நினைவுக்கு வரும் ! வரலாம்.

24 பின்னூட்டங்கள்:

ஜெட்லி... said...

அறிமுகத்துக்கு நன்றி...டைம்
கிடைச்சா பார்க்குறேன்...

அண்ணாமலையான் said...

பாத்துருவோம்

சைவகொத்துப்பரோட்டா said...

ஓகே, ரைட் , அப்ப பாத்துர வேண்டியதுதான்...

நட்புடன் ஜமால் said...

ரைட்டோ ...

Rettaival's Blog said...

புரட்சிதலைவி ஜூலியா ராபர்ட்ஸ் வாழ்க

Chitra said...

nice review.

Chitra said...

........................................இது சும்மா கோடுதான்.......

Paleo God said...

ரெட்டைவால் ' ஸ் said...
புரட்சிதலைவி ஜூலியா ராபர்ட்ஸ் வாழ்க//

:)))))))

Deepan Mahendran said...

//கடைசி காட்சியில் அவன் சிரிக்கும் போது, நமக்கு “ஏமாத்திப்புட்டீங்களே அய்யா!” என்று அம்மா தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னது (பாடியது) நினைவுக்கு வரும் ! வரலாம்.
//

:)
உடனே பார்த்துட வேண்டியது தான்...!!!

K.S.Muthubalakrishnan said...

Thanks for intro

Unknown said...

இப்பிடி ஒரு மோசமான ரிவ்யூவை நான் இது வரைக்கும் படிச்சதில்லை. இனிமே நீங்க ரிவ்யூ எழுதாம இருக்கறதே நல்லது

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஐ, ஏமாந்துப்புட்டிங்களே? :)))

பாலா said...

எனக்கு படம் பிடிக்கலீங்க! :(

அகஆழ் said...

அது சரி! படம் பார்த்த ‘effect'ல அப்படியே ‘review' எழுதலயே! கண்டிப்பா பார்க்கலாமா :-)

பின்னோக்கி said...

ஹாலிவுட் பாலா - உங்களுக்கு பிடிக்காம போயிருக்க சான்ஸ் இருக்கு. ஏன்னா, நீங்க நிறைய இங்கிலிஷ் படம் பார்க்குறவரு. சஸ்பென்ஸ் ஈஸியா யூகிச்சிருப்பீங்க :)

முகிலன் - உங்க கமெண்ட் முழுவதுமே படிச்சுட்டதால ஏமாறலையே :)

நன்றி
ஜெட்லி
அண்ணாமலையான்
சைவகொத்துப்பரோட்டா
நட்புடன் ஜமால்
ரெட்டைவால்ஸ்
சித்ரா - நான் சும்மா டாட் வெச்சேங்க. உங்களை குழப்புறத்துக்கு :)

kailash,hyderabad said...

அறிமுகத்துக்கு நன்றி.ஏற்கனவே நீங்க ட்விஸ்ட் உள்ள படங்கள் லிஸ்ட் கொடுத்ததில் இருந்து ஒவ்வொன்றாக டௌன்லோடு செய்து பார்த்து கொண்டிருக்கிறேன். பார்க்க வேண்டிய படங்களில் இந்த படத்தையும் சேர்த்தாச்சு .

பின்னோக்கி said...

நன்றி
பலா பட்டறை
சிவன் - ஹாலிவுட்க்கு படம் புடிக்கலைன்னாரு. அதுனால படம் பார்த்துட்டு என்னைய திட்டாதீங்கோவ் :)
முத்து பாலகிருஷ்ணன்
அக ஆழ் - படம் மாஸ்டர் பீஸ் இல்லை. ஜாலியா போகும். ஒரு தடவை பார்க்கலாம்.

பின்னோக்கி said...

நன்றி கைலாஷ் - பெரும்பாலான படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.

Prathap Kumar S. said...

நம்ம தல ஹாலிபாலிக்கு புடிக்கலையாமா? தல உங்களை நம்பமுடியாது... ஆகஸ்ட் சீரிஸ் பார்த்த அனுபவமே போதும்...

பின்னோககி லிஸ்ட்டுல சேர்த்தாச்சு... பார்த்துட்டு சொல்றேன்...

geethappriyan said...

எனக்கும் படம் பிடிக்கலீங்க! :(
ஓவர் ட்விஸ்டு,துபாய்ல எல்லாம் எடுத்திருப்பாங்க.

geethappriyan said...

இது கூடவே இண்டெர்னேஷனல்னு இதே க்லைவ் ஓவனின் படம் வந்தது, அதுவும் உளவாளி கதையே,அது தேவலை

geethappriyan said...

ரொம்ப அழகாய் எழுதினீங்க,இனி அடிக்கடி உங்களிடமிருந்து விமர்சனங்கள் எதிர்பார்க்கிறோம்.

பின்னோக்கி said...

நன்றி - கார்த்திக் - இண்டர்நேஷனல் பார்த்துட்டேன். அது பயங்கர சீரியஸ் பொலிடிக்கல் த்ரில்லர். இந்த படம் நிறைய டிவிஸ்ட் + காமெடி. மே பி, நான் ரொம்ப ஏமாந்துட்டதால படம் புடிச்சுடுச்சு.

பின்னோக்கி said...

கார்த்திக் - விமர்சனமா ? நீங்க, ஹாலிபாலி, ஜாக்கி எல்லாம் தான் எழுதலாம். நான் சும்மா அறிமுகம் மாதிரிதான் எழுதினேன். விமர்சனம் பண்றது ரொம்ப கஷ்டமான விஷயம்.

ஸ்ரீராம். said...

இதுதான் முதல் விமர்சனமா..

இவ்வளவு ட்விஸ்ட் இருந்தால் எது எங்கே 'திரும்பி'யது என்று என் போன்ற மறதி மனங்களுக்கு நினைவிருக்காது..!