12 February 2010

(எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் - 12.02.2010

இன்று காலை அலுவலகத்திற்கு போய்கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற ஆட்டோவின், பின்புறம் எழுதியிருந்த வாசகம் “இந்த ஓட்டுனர் அவசர கால முதல் உதவி செய்வதில் பயிற்சி பெற்றவர்” என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. விபத்து ஏற்படும் போது, பெரும்பாலும் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுவது ஆட்டோக்கள் என்பதால், இது மிகவும் வரவேற்கத்தக்கது. முதல் உதவி பயிற்சியை, ஓட்டுனர் உரிமம் பெறும் அனைவரும் கற்கவேண்டும் எனக் கட்டாயமாக்கலாம்.


பல காலம் முன் பார்த்த ஒரு விளம்பரம் நியாபகத்திற்கு வருகிறது. “நீங்கள் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது இதைப் படித்தால், இந்த விளம்பரம் உங்களுக்கு மிகவும் அவசியமானது”. அந்த விளம்பரம் ஒரு இன்ஸீரன்ஸ் நிறுவனத்தினுடையது.


பெங்களூரைச் சார்ந்த “ஸ்ரீ ராம சேனா” என்ற அமைப்பின் தலைவரின் முகத்தில் சிலர் கருப்பு வர்ணத்தைப் பூசிவிட்டார்கள். இவர் போன வருடம், காதலர் தினத்தன்று, திருமணமாகாத ஜோடிகள் யாராவது கண்ணில் பட்டால், அவர்களுக்கு கட்டாயத்திருமணம் செய்து வைக்கப்படும் என்று எச்சரித்தார்.

சமுக காவலர்களான இந்த அமைப்பினர், போன வருடம் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து, அங்கு நடனமாடிக் கொண்டிருந்த பல பெண்கள் மற்றும் ஆண்களை அடித்து வெளியே தள்ளினார்கள். இந்த வருடமும் இவர் காதலர்களை எச்சரிக்கை செய்து, டி.விக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர், இவரின் முகத்தில் கரி பூசிவிட்டார்கள். முதல் தாக்குதல் நம்முடையதாக இருக்கட்டும் என பாதிக்கப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம்.

கல்யாணமாகாத ஏழை காதல் ஜோடிகள் இலவசமாக திருமணம் செய்துகொள்ள எளிதான ஒரு வழி, 14 ஆம் தேதி, இந்த அமைப்பின் தொ(கு)ண்டர்கள் முன் சென்று நிற்பதே.


நான் வசிக்கும் பகுதியில் கடந்த மூன்று வருடங்களில் 30 கொலைகள் நடந்து விட்டது. இதனால் போலீசார் வழக்குகளை ஒழுங்கான முறையில் நடத்த வேண்டும் என்று ஒருவர் கோர்ட்டில் கேஸ் போட, இப்பொழுது, எங்கள் சாலையில் எப்பொழுதும் ஒரு போலீஸ் ஜீப் நிற்கிறது. இன்று என் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களின் விபரங்களை (போன் நம்பர், வேலை விபரம், வாட்ச்மேன், வேலைக்காரர்களின் பெயர், கார்/பைக் எண்) போலீசார் சேகரித்துச் சென்றனர். இந்த விபரங்களைத் தர தயக்கமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டியதாயிற்று. போலீசார், விபரங்களை பத்திரமாக வைத்திருப்பார்கள் என்று நம்புவோமாக.

22 பின்னூட்டங்கள்:

Madurai Saravanan said...

sir nalla pathivu . super. pali oru pakkam paavam orupakkam ithu thaan ungkal kadaisi anubavaththirukku vinaa/ irunthaalum paathukappu onrum aappu aakividaathu payappataathirkal.

ஷங்கர்.. said...

நம்பித்தான் ஆகணும் :(

நாஞ்சில் பிரதாப் said...

என்ன பின்னோக்கி இப்ப ரொம்ப பிஸி போலருக்கு...
உங்களோட திக் திக் பக் பக், துப்பறியும் பதிவுகளுக்காகஇன்னொரு கிரிக்கெட் மேட்ச் ஆடுங்க... :):)

முகிலன் said...

//என்ன பின்னோக்கி இப்ப ரொம்ப பிஸி போலருக்கு...
உங்களோட திக் திக் பக் பக், துப்பறியும் பதிவுகளுக்காகஇன்னொரு கிரிக்கெட் மேட்ச் ஆடுங்க... :):)
//

ரிப்பீட்டு...

டிப்ஸ்க்கு நம்ம ப்ளாக்குக்கு வாங்க. :)

பிரியமுடன்...வசந்த் said...

என்ன சார் வேலைப்பளு ஜாஸ்தியா?

போலீஸ்கிட்ட உண்மையுமா சொல்லணும்?

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த இலவச திருமண ஐடியா :))

ஜெட்லி said...

கரி பூசியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்....
எங்கே இருக்கீங்க??

நட்புடன் ஜமால் said...

அந்த ஆட்டோக்காரரோட உதவி கூட ஆங்கிளம் தெரிஞ்சாத்தான் கிடைக்குமோ

-----------

நல்லா கூப்பிடுறானுங்கையா இன்சூரன்ஸ் ஆளுங்க

-----------

எம்பூட்டு நம்பினாலும் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.

ஸ்ரீராம். said...

1) நல்ல யோசனை.

2) அழகு.

3) ஹா...ஹா...

4) அசோக் நகரா?

கவிதை காதலன் said...

வாகனத்தில் எழுதி இருந்த வரிகளை நீங்க குறிப்பிட்டு இருந்தது அருமை

புலவன் புலிகேசி said...

பாத்து அட்ரஸ்ஸ வச்சி அவங்களே ஆட்டையப் போட்டுறப் போறாங்க

+Ve Anthony Muthu said...

மிக அருமையாக எழுதுகிறீர்கள்:! வாழ்த்துக்கள்.!

||| Romeo ||| said...

போலீஸ்காரங்களை நம்புறதா விட நம்மளை நாமே காப்பற்றி கொள்வது நலம் தலைவரே.

ஆட்டோவில் வசனம் என்றாலே எதாவது மொக்கை அல்லது தத்துவம் தான் இருக்கும். இவரு உருப்படியா எழுதி வச்சு இருக்காரு.

Chitra said...

முன்னால் சென்ற ஆட்டோவின், பின்புறம் எழுதியிருந்த வாசகம் “இந்த ஓட்டுனர் அவசர கால முதல் உதவி செய்வதில் பயிற்சி பெற்றவர்” என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.

...........நல்ல ஐடியா. பதிவும் நல்லா இருக்கு.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

கல்யாணம் பண்ணிக்க சுப்பர் வழி..

நன்றி..

ர‌கு said...

//முதல் உதவி பயிற்சியை, ஓட்டுனர் உரிமம் பெறும் அனைவரும் கற்கவேண்டும் எனக் கட்டாயமாக்கலாம்//

அப்ப‌டியே ஆக்கிட்டாலும்....போங்க‌ பாஸ், சென்னைல‌தானே இருக்கீங்க‌, ஆட்டோ அண்ண‌னுங்க‌ ப‌த்தி தெரிஞ்சுமா சொல்றீங்க‌...:))

ஆதி மனிதன் said...

//முதல் உதவி பயிற்சியை, ஓட்டுனர் உரிமம் பெறும் அனைவரும் கற்கவேண்டும் எனக் கட்டாயமாக்கலாம்.//

நல்ல கருத்து. ஆனால் முதலில் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் அனைவருக்கும் ஓட்ட (ஒழுங்காக)தெரியுமா என தெரிந்து உரிமத்தை கொடுத்தாலே பல விபத்துகளை தடுக்கலாம்.

K.B.JANARTHANAN said...

//முதல் உதவி பயிற்சியை, ஓட்டுனர் உரிமம் பெறும் அனைவரும் கற்கவேண்டும் எனக் கட்டாயமாக்கலாம்.// மிக சிறந்த யோசனை!

பேநா மூடி said...

அந்த கொலைக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்

அமுதா said...

/*முதல் உதவி பயிற்சியை, ஓட்டுனர் உரிமம் பெறும் அனைவரும் கற்கவேண்டும் எனக் கட்டாயமாக்கலாம்.
*/
நல்ல ஐடியா. நல்லா இருக்கு இந்த பதிவு. (யாரும் உங்க ஏரியா பக்கம் வரக்கூடாதுனு சொல்றீங்களா? பயமா இருக்கு உங்க ஸ்டாடிஸ்டிக்ஸ்)

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

என்ன நண்பரே வேலைப்பளு மிகவும் அதிகமா?ஆளையே காணோமே?