06 March 2010

விஷயம் என்னன்னா !!

முதலில் எனக்கு நடந்த ஒரு கொடுமை.
வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்யச் சொல்லி அலுவலகத்தில் நடக்கும் கொடுமை.இந்த கொடுமைகள் கடந்த ஒரு மாதமாக அதிகமாக நடக்கிறது. இது ஒரு காரணம்.


பல முறை அடித்துத் துரத்திய பங்குசந்தை, கடந்த ஒரு வாரமாக இரு கைகள் நீட்டி அழைக்க, அதை தவிர்க்க முடியவில்லை.இது ஒரு காரணம்.


இந்த மாதத்தில் என் மச்சானுக்கு திருமணம். கல்யாணமாகி மச்சான் இருக்கும் அனைத்து ஆண்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், நம் திருமணத்தை விட, மச்சானின் திருமணம் மிக மிக முக்கியமான நிகழ்வு. அதில் சிறிது அலட்சியம் காட்டினால் முன்,பின் மற்றும் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும். எனவே வார இறுதிகளில் பாண்டிபஜாரில் இருக்கும் அனைத்து கடைகளுக்கும் விஜயம் நடைபெறுகிறது.

பின்னோக்கி எழுதாததால், பதிவுலகம் மிக வேகமாக முன்னேறுவதாக செய்தி வந்தது. அந்த வேகத்தை, பதிவுலகை பின்னோக்கி இழுப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று முடிவு செய்தேன். இதையும் தாண்டி பல லட்சக்கணக்கானவர்களின் அன்பான விசாரிப்புகளும் (??!!!) என்னை எழுதத் தூண்டியது. எழுதலாம் என்று நினைத்த போது தடை, நித்தியானந்தா மூலம் வந்தது. வீடியோ பார்த்த போது சன் டிவி ‘R’ என்ற எழுத்தில் தொடங்கும் நடிகை என்று க்ளூ கொடுத்து, என் துப்பறியும் மூளையைத் தட்டி எழுப்பியது. பல மணி நேர துப்பறிதலுக்குப் பிறகு, ரா* ** என்று கண்டுபிடித்து அடுத்த நாள் அலுவலகத்தில் சொல்ல, அனைவரும் கை கொட்டி சிரித்து என்னை அவமானப் படுத்தினார்கள். நக்கீரன் வெப்சைட்டில் நடிகையின் பெயரை வெளியிட்டு, என் அனுமானம் தவறாகிப் போன, கவலை 3 நாட்களை விழுங்கிவிட்டது.


அப்புறம் விஷயம் என்னன்னா... ம்ம்ம்... வீட்டில் பொரிக்கும் அப்பளம் சைசில் இருக்கும் நிலா, கடந்த சில வாரங்களாக, பொருட்காட்சியில் விற்கும் அப்பளம் சைஸிற்கு தெரிகிறது. இன்னும் சில வாரங்களுக்கு, நிலா, பூமிக்கு மிக அருகில் இருப்பதால், காணத்தவறாதீர்கள்.

The Life Of David Gale (ரொம்ப உருகிட்டேன்), Instinct (இது வேற படங்க), Primer (இதுவரை நான் பார்த்த படங்களில் மிகவும் குழப்பமான படம்), Knowing (எல்லாரும் தெரிந்து கொள்ள ஆசைப்படும் விஷயம்), Up In The Air (போன வருடம் இது நடந்து விடுமோ என்று பயந்ததைப் பற்றிய படம்) படங்களை பார்த்தேன்.

20 பின்னூட்டங்கள்:

அண்ணாமலையான் said...

அடடே வந்துட்டீங்களா வாங்க வாங்க

நாஞ்சில் பிரதாப் said...

பின்னோக்கி அப்ப நீங்க ஊர்லதான் இருக்கீங்களா??? நானும் டைம் மெஷீன் ஏறி ஒரு 1000 வருஷம் பின்னாடி போய்ட்டீங்கன்னு நினைச்சேன்...

R எழுத்துல வேற நடிகையே கிடைக்கலையா... போயும்...போயும்...ச்சே...ரொம்ப பின்னாடி பார்க்காதீங்கன்னு சொன்னா கேட்கறிங்களா????

வினோத்கெளதம் said...

செம கலக்கல் பதிவு..
என்னையும் வரவர எங்க அலுவலகத்தில் கொடுக்குற காசுக்கு வேலை செய்ய சொல்லுகிறார்கள் அநியாயம்..:)

வானம்பாடிகள் said...

இடிக்குதே. மச்சான் கலியாணம் இருக்கிறப்ப இவ்வளவு படம் உக்காந்து பார்த்தா எங்கயோ வீங்கியிருக்கனும். அதான் எழுதலை:))

ஜோதிஜி said...

வாங்க

நட்புடன் ஜமால் said...

வாங்க வாங்க

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

வாங்க நண்பர் பின்னோக்கி
எல்லாமே நல்ல படம்
டேவிட் கேலுக்கு நான் எழுதியிருக்கேன்.
அப் இன் த ஏர்.
ஃப்ரீயா ஆகும் போது மற்ற படத்துக்கு எழுதவும்.
என்ன நிலா பக்கத்துல இருக்கா?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அப் இன் த ஏர் பாலா எழுதியிருக்கார்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

ramprakash said...

கொடுக்காத காசுக்கு வேலை செய்ய சொல்வதைவிட இது பரவாயில்லை!! என் நண்பனின் நண்பனுக்கு 3 மாதமாக சம்பல பாக்கி. சாப்டுவேர் தினகூலி போல் ஆகி விட்டது!! அவன் ஊரே அவனை பார்த்து சிறிக்கறதா உணருகிரான்..... ;(

பின்னோக்கி said...

நன்றி
- அண்ணாமலையான் - வணக்கம்
- நாஞ்சில் பிரதாப் - உலக அறிவு ரொம்ப கம்மிங்க :)
- வினோத் கௌதம் - :)
- வானம்பாடிகள் - நிறைய அனுபவமிருக்கும் உங்களுக்கு. எங்களை மாதிரி சின்னப்பசங்களுக்கு சொல்லுங்க ;)
- ஜொதிஜி - வந்துட்டேங்க. நிறைய படிக்கணும். கொஞ்சம் டைம் குடுங்க.
- நட்புடன் ஜமால் - நன்றி
- கார்த்திக் - நீங்கள் மற்றும் பாலாவினால் தான் பார்த்தேன்
- ஷங்கர் - ஆளே மாறிட்டீங்க. வரணும்.

- டி.வி சார் நன்றி
- ராம் பிரகாஷ் - ஆமாங்க. ஜோக்குக்காக எழுதினது ;). பாவம். உங்கள் நண்பர்கள் நிலை. வருத்தமாக இருக்கிறது. விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.

Chitra said...

வீட்டில் பொரிக்கும் அப்பளம் சைசில் இருக்கும் நிலா, கடந்த சில வாரங்களாக, பொருட்காட்சியில் விற்கும் அப்பளம் சைஸிற்கு தெரிகிறது. இன்னும் சில வாரங்களுக்கு, நிலா, பூமிக்கு மிக அருகில் இருப்பதால், காணத்தவறாதீர்கள்.

...............நொறுங்காம, எல்லோரும் பத்திரமா பாத்துக்கோங்க.
வாருங்கள்! வாழ்த்துக்கள், பின்னோக்கி!

thenammailakshmanan said...

//பின்னோக்கி எழுதாததால், பதிவுலகம் மிக வேகமாக முன்னேறுவதாக செய்தி வந்தது. அந்த வேகத்தை, பதிவுலகை பின்னோக்கி இழுப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் //

ஹா ஹா ஹா சூப்பர்

எவ்வளவு நாளாச்சு பின்னோக்கி உங்களைப்பார்த்து ..வாங்க வாங்க

அமுதா said...

:-))

Sivaji Sankar said...

Oooo

அகஆழ் said...

தங்கள் பதிவை படிக்கும் பொழுது நிச்சயமாக எடை குறைகிறது பின்னோக்கி...

வருக...வருக

பின்னோக்கி said...

நன்றி - சித்ரா
நன்றி - தேனம்மை
நன்றி - சிவாஜி
நன்றி - அமுதா
நன்றி - அகஆழ்

பின்னோக்கி said...

நன்றி - சித்ரா
நன்றி - தேனம்மை
நன்றி - சிவாஜி
நன்றி - அமுதா
நன்றி - அகஆழ்

Salethar said...

Interesting blog buddy!!..
Good to see that, you started watching english movies (with Tamil sub titles??) :-))