07 March 2010

உச்சி முகர்தல்


புரண்டு படுத்து
தூக்கம் தொலைக்கும் இரவுகள்
ஆழ்ந்த உறக்கத்தில்
அருகிலிருக்கும் மகனை
கையிடுக்கில்
அவனை அணைத்து
தலைமுடியும் நெற்றியும்
இணையும் இடத்தில்
என் முகம் புதைத்து
முகர்ந்து பார்க்கையில்
வரும் அவன் வாசம்
சொக்கவைக்கும்

33 பின்னூட்டங்கள்:

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு பின்னோக்கி.

சி. கருணாகரசு said...

மிக உண்மை... வாழ்த்துக்கள்.

அக்கினிச் சித்தன் said...

அழகான சுருக்கமான பார்வை.

சைவகொத்துப்பரோட்டா said...

மிக அருமை, அட்டகாசமாய் இருக்கிறது.

புலவன் புலிகேசி said...

அருமைங்க...

ஜோதிஜி said...

வேறு எவர் ஒருவருக்கு இதில் இருந்து அடுத்த கவிதை பிறக்கும்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

உண்மை..:)

நாய்க்குட்டி மனசு said...

அது என்னங்க குழந்தையோட நெற்றியில? இந்த சுகம் இழந்தவர் துரத்ரிஷ்டசாலி

சந்தனமுல்லை said...

Gus one!

நட்புடன் ஜமால் said...

நானும் ...

நாஞ்சில் பிரதாப் said...

கலக்கல் பின்னோக்கி...

Sangkavi said...

Super....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு

பின்னோக்கி said...

நன்றி
பா.ரா - உங்கள் பார்வையில் இன்னும் அழகாக எழுதியிருப்பீர்கள். எனக்கு அவ்வளவு சரியாக எழுத வரவில்லை.

- சி.கருணாகரசு
- அக்கினிச் சித்தன்
- சைவகொத்துப்பரோட்டா
- புலவன் புலிகேசி
-ஜோதிஜி - நீங்க சொன்ன மாதிரி, இதை ரொம்ப அழகான வரிகளில் எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். எழுதினால் மகிழ்வேன்.

ஷங்கர்
நாய்குட்டி மனசு - அப்படி முகம் புதைத்து வாசம் நுகர்ந்து, அப்படியே தூக்கம் வந்துவிடும். அதனால் அந்த இடம். நம் மூச்சுக்காற்றும், அவன் மூச்சுக்காற்றும் சந்திக்காது இப்படி படுத்தால். அதனால் குழந்தைக்கு நல்லது.
முல்லை - நன்றிங்க
நாஞ்சில் பிரதாப் - நன்றிங்க
சங்கவி
டி.வி சார்
நன்றிகள்

K.B.JANARTHANAN said...

அந்த நல் வாசத்தை உங்கள் கவிதையில் நுகர முடிகிறது...நன்று.

Chitra said...

மிகவும் மென்மையான உணர்வு........ அருமை!

ஸ்ரீராம். said...

ஆஹா...அருமையான உணர்வு..

தியாவின் பேனா said...

நச்...
அருமைங்க

thenammailakshmanan said...

உண்மை அருமை பின்னோக்கி

அமுதா said...

நல்லா இருக்கு

Mohan said...

அனுபவத்தில் வந்த இந்தக் கவிதை நன்றாக இருக்கிறது.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

கலக்கல்ங்க நண்பரே,ஏன் தமிலிஷ்ல சேர்க்கலை?

அகஆழ் said...

மெய் சிலிர்க்கிறது...பின்னோக்கி !!!

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே , தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

அருமையாக இருக்குங்க. :)

Madurai Saravanan said...

உண்மை என்றும் அருமையாக வரும் . வாழ்த்துக்கள்.

paarvai said...

Very nice

கிருபாநந்தினி said...

பின்னோக்கி! படத்தில் இருப்பது உங்க குழந்தையா! ஹைய்யோ..! கொள்ளை அழகு! உடனே திருஷ்டி சுத்திப் போடுங்ணா! உங்க கவிதையைப் படிச்சவுடனே அந்தக் கிறக்கத்தில் நான் என் புஜ்ஜிம்மாவின் வாசத்தை முகர்ந்து பார்த்தேன்.

vidivelli said...

நல்லாயிருக்குங்க.........

வசதியிருந்தால் நம்ம பக்கமும் வரலாம்தானே..........

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்..பார்க்கவும்

Imayavaramban said...

உண்மையில் நெஞ்சம் தொட்ட பதிவு. நிறைய கவிதையும் எழுதுங்கள்.

கார்த்திக்
http://eluthuvathukarthick.wordpress.com/

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

என்ன நண்பரே,
மிகுந்த வேலை பளுவா?
ஒன்றுமெ இடுகையே இல்லையே?

ஜோதிஜி said...

பின்னிரவில்
உள்ளே நுழைவேன்.
தூங்க வைக்க போராடிய
மனைவி களைத்த முகம்
கண்ணில் தெரியும்.

விரும்பிய பொம்மைகளும்
வேண்டுமென்று கேட்ட
அடம்பிடித்த பாயும்
தனியாக கிடக்க
வெறுந்தரைகளில் மூலைக்கொன்றாய்
உருண்டு கிடப்பார்கள்.

குழந்தைகளை பாயில்
தூக்கி போட
முயற்சிக்க
தூக்கத்தில் புலம்பும்
அவர்களின்
புரியாத பாஷை எனக்கு
தேவபாஷை,

இப்படித்தான் ஒவ்வொருவரையும் உங்கள் கவிதையின் மூலம்
உருவாக்கி விடுகிறீர்கள் ரமேஷ் .........