10 February 2010

காதலர் தினத்தில் பாபர்

கரிகாலன் காலப் போல ....

எப்படியும் சாமர்கண்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறி என்னுள்...

தமிழ்ப்படம் ஹிட்டுன்னு எங்களுக்கு தெரியும். ஆனா இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை....

எதிரியின் குதிரை மிக அருகில் வந்துவிட்டது. தப்பிக்க வேண்டும். வேறு வழியில்லை....

இப்படி 500 வருடங்களுக்கு முன்னும், பின்னும் சில நொடிகளில் சென்றவாறு, சென்ற வாரம் படித்த புத்தகம்


பாபர்               - தமிழில் ச.சரவணன்
வெளியீடு - சந்தியா பதிப்பகம்

நீண்ட காலமாக வரலாற்றை ஆர்வமுடன் படிப்பவர்கள் எதிர் நோக்கும் கேள்வி “அத எல்லாம் தெரிஞ்சு என்ன பண்ண போற ?”. அதற்கு விடையாக இந்த புத்தகத்தில் ”சாதாரண மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது அரசியல். அரசியலை நிர்ணயிப்பது வரலாறு. எனவே வரலாற்றைத் தெரிந்துகொள்வது முக்கியம்” என்ற விளக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொகலாயப் பேரரசு இந்தியாவில் அமைவதற்கு காரணம் பாபர். பானிப்பட் போரில் இப்ராஹிம் லோடியை வென்று, இந்தியாவிற்குள் நுழைந்தவர் என்ற அளவிலேயே இவரைப் பற்றி படித்திருக்கிறேன்.

பாடபுத்தகங்களில் அரசர்களை, ஒரு தெய்வப்பிறவிக்கு ஒப்பாகவே எழுதியிருப்பதால், அவர்களும் சாதாரண மனிதர்கள் என்ற உணர்வே எழுவதில்லை. ஆனால், இந்த புத்தகம், பாபர் எழுதிய சுய சரிதை நூலைப் பின்பற்றி எழுதியுள்ளதால், தன்னிலையில் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

”எதிரிகள் எங்கு வருகிறார்கள் என்று பார்ப்பதற்கு என் குதிரையிலிருந்து திரும்பி பார்த்தேன். குதிரையின் சேணம் திருப்பிக் கொண்டதால் நான் தலை குப்புற கீழே விழ நேர்ந்தது. “

”பசியின் காரணமாக குதிரையைக் கொன்று பசியாறினோம்”

“நான் என் அம்பினை எடுத்து டாம்பாலின் தலையை நோக்கி எய்தேன். இதே நேரத்தில் எங்கிருந்தோ வந்த அம்பு என் வலது தொடையைக் கிழித்துக்கொண்டு சென்றது. டாம்பால் என்னை நெருங்கி வாளால் என் தலைக் கவசத்தில் அடித்தான். நிலைகுலைந்து போனேன். வேறு வழியின்றி குதிரையைத் திருப்பி, தப்பித்து வந்தேன்.”

இந்த வரிகளைப் படிக்கும் போது, பாபரும் மனிதப் பிறவி; அவரும் போரில்  திரைப்படங்களில் காண்பிக்கப்படும் போர்க்காட்சிகள் போலில்லாமல், தனி ஆளாக சென்று எதிரியிடம் மாட்டிக்கொண்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பித்தது புரிகிறது.

“நீ எழுதிய கடிதங்களை அனுப்புவதற்கு முன் நீ படித்துப் பார்ப்பதில்லை. நீ அதை படிக்க முயற்சித்திருந்தால் உன்னால் முடிந்திருக்காது; உன்னுடைய கிறுக்கலான எழுத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று தன் மகன் ஹீமாயூனின் கடிதங்களை விமர்சிக்கிறார்.

இந்த புத்தகத்தின் குறைகள் என்று பார்த்தால், இதன் மொழிபெயர்ப்பு சில இடங்களில் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது.  மிக நீண்ட, கமா இல்லாத வாக்கியங்கள் குழப்புகிறது. எழுத்துப்பிழைகளையும் அடுத்த பதிப்பில் திருத்திவிடுவார்கள் என்று நம்புகிறேன். ஆரம்ப அத்தியாயங்களில் பாபரின் வம்சா வழியினர் பற்றிய பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் மனதில் கொள்வது கடினமாக இருக்கிறது.

வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் இந்த புத்தகத்தைப் படிக்கலாம்.

இந்த பதிவிற்கு ஏன் இந்த தலைப்பு என்ற சந்தேகம் கொள்பவர்களுக்காக: கி.பி 1483 ஆம் வருடம் காதலர் தினத்தன்று பாபர் பிறந்தார்.

28 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Very interesting

Chitra said...

இந்த பதிவிற்கு ஏன் இந்த தலைப்பு என்ற சந்தேகம் கொள்பவர்களுக்காக: கி.பி 1483 ஆம் வருடம் காதலர் தினத்தன்று பாபர் பிறந்தார்.

........... கதை இப்படி போகுதா?

Unknown said...

உக்காந்து யோசிப்பிங்களோ??

சந்தனமுல்லை said...

கடைசியிலே வச்சீங்களே ட்விஸ்ட்!!

சுவாரசியமான அறிமுகம்! பாபரும் அக்பரும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள்!

vasu balaji said...

ம்கும். 1483ல் காதலர் தினம் இருந்ததா:))

அமுதா said...

/*இப்படி 500 வருடங்களுக்கு முன்னும், பின்னும் சில நொடிகளில் சென்றவாறு, சென்ற வாரம் படித்த புத்தகம்
*/
நல்ல தொடக்கம்; நல்ல முடிவு

Rettaival's Blog said...

pinnokki... Title was really superb! என்னமோனு நினைச்சு ஏமாந்துட்டேனே!

அண்ணாமலையான் said...

நல்லா அருமையா சொன்னீங்க

sathishsangkavi.blogspot.com said...

அழகான தொடக்கம், அழகான முடிவு...

Unknown said...

// இந்த பதிவிற்கு ஏன் இந்த தலைப்பு என்ற சந்தேகம் கொள்பவர்களுக்காக: கி.பி 1483 ஆம் வருடம் காதலர் தினத்தன்று பாபர் பிறந்தார். //

அப்பாடி தலைப்பு வந்துட்டு.. ஹி ஹி

Dr.Rudhran said...

nice to read

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல அறிமுகம்.

Prathap Kumar S. said...

பின்னிட்டீங்க பின்னோக்கி... அப்ப இந்த புத்தகத்தைத்தான் ஒரு வாரமா உக்காந்து படிச்சீங்களோ?

முகலாய சாம்ராஜ்ய வரலாறு ரொம்ப பெருசு பின்னோக்கி... நீங்க படிச்சது அதுல ஒரு சிறுதகவல்களாத்தான் இருக்கும்...

Romeoboy said...

தலைவரே இது என்ன பாபர் சுயசாரிதமா? முகலாய சாம்ரஞ்சம் பற்றி எளிய நடையில் படிக்கணும்னா மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் புக் படிங்க, ரொம்ப நல்லா இருக்கு.

geethappriyan said...

நண்பரே என்ன பதிவுக்கு லீவு விட்டுட்டீங்க?படிப்பா?வேலையா?
நல்ல பகிர்வோட தான் வந்திருக்கீங்க.
===================
ஒரு கேடுகெட்ட நாதாரி உங்களை அசிங்கமான படத்துடன் ஃபாலோ செய்கிறானே?பார்த்தீர்களா?
இப்படி ரெண்டுமூனு பேர் கிளம்பி நம் காட்ஜெட்டை நாற்டிக்கின்றனர்,ப்ளாக் செய்யவும்.

Thenammai Lakshmanan said...

சரவணனுக்கும் பின்னோக்கிக்கும் வாழ்த்துக்கள்

Raghu said...

ம‌த‌னின் "வ‌ந்தார்க‌ள்..வென்றார்க‌ள்" (விகட‌ன் பிர‌சுர‌ம்) ப‌டிச்சு பாருங்க‌, மொக‌லாய‌ர்க‌ள் வ‌ர‌லாறை அருமையாக‌ சொல்லியிருப்பார்

கிருபாநந்தினி said...

கடைசி வரியில அசத்திப்புட்டீங்களே! எங்கெங்கேர்ந்தெல்லாம் லிங்க் எடுக்கறீங்ணா!

புலவன் புலிகேசி said...

என்னாமா வரலாறு கலக்ட் பன்றீங்க...

அகஆழ் said...

அருமை பின்னோக்கி... உண்மையில் தங்களது சுவாரஸ்யமான எழுத்து நடையில் தலைப்பை பற்றியே மறந்துபோயிருந்தேன்... :-)

பின்னோக்கி said...

நன்றி - சின்ன அம்மிணி
நன்றி - சித்ரா - கதை அப்புறமா எப்படி போகுது தெரியுமா ? :)
நன்றி - முகிலன் - படுத்துக்கிட்டு மோட்டு வளைய பார்த்துக்கிட்டா, இது எல்லாம் தோணும்.
நன்றி - சந்தன முல்லை - பாபரும், அக்பரும், இந்தியாவையும் கவர்ந்தவர்கள் :)
வானம்பாடிகள் - ஏன் சார் உங்களுக்கு இந்த சந்தேகம். கி.மு 347 ஆம் ஆண்டிலேயே இருந்துக்கு. அத இன்னொரு பதிவா போடுறேன் :)

பின்னோக்கி said...

நன்றி - அமுதா

நன்றி - ரெட்டை வால்ஸ் - ஏமாத்தனும்னு எழுதலைங்க.

நன்றி - அண்ணாமலையான்
நன்றி - சங்கவி
நன்றி - பேநா மூடி - யோசித்துத்தானே அப்படி வெச்சேன். :)

பின்னோக்கி said...

நன்றி - டாக்டர். ருத்ரன் சார். உங்கள் வருகைக்கு.

நன்றி - சைவகொத்துப்பரோட்டா

நன்றி - நாஞ்சில் பிரதாப் - ஒரு மேட்டரும் சிக்கலைங்க. லேப்டாப் காலியாகிடுச்சு. அதுனால கொஞ்சம் இடைவெளி.

நன்றி - ரோமியோ - 20 தடவையாவது படிச்சுருப்பேங்க. அத படிச்சதால தான் இந்த புத்தகம் வாங்குனேன்.


நன்றி - கார்த்திக் - நீங்கள் சொன்ன உடன் தான் கவனித்தேன். நீக்கி விட்டேன். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

பின்னோக்கி said...

நன்றி - thenammailakshmanan
நன்றி - கிருபாநந்தினி. வேற மேட்டர் சிக்காம ரொம்ப கஷ்டப்பட்ட போது, பாபர் மாட்டுனாரு :)

நன்றி - ரகு - படித்திருக்கிறேன்.

நன்றி - புலவன் புலிகேசி - பாராட்டுக்களுக்கு.

நன்றி - அக ஆழ் - நீங்கள் பெயருக்கு ஏற்றார் போல், மிகவும் ஆழ்ந்து படிக்கிறீர்கள் என நினைக்கிறேன் :) அதனால் மறந்துவிட வாய்ப்புண்டு. அல்லது காதலர் தினம் உங்களுக்கு மனதில் இருத்திக் கொள்ள இயலாமல் இருக்கலாம் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வரலாறான பாபருக்கு நீங்க வெச்சீங்களே ஒரு வரலாறு :)))))))

பகிர்வுக்கு நன்றி.

S.Pandian said...

ரொம்ப அருமை நண்பா

ஜோதிஜி said...

”சாதாரண மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது அரசியல். அரசியலை நிர்ணயிப்பது வரலாறு. எனவே வரலாற்றைத் தெரிந்துகொள்வது முக்கியம்”

உணராத வரைக்கும் கனிமொழி மகன் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் அழகை நம் தலைமுறை ரசித்து பார்த்து கொண்டு இருக்கும்?

Aba said...

எவண்டா அவன், என்னோட காலைப்பத்தி பாடுறது?