விளம்பரங்களில், கருப்பு நிறமுடையவர்களை நடிக்க வைக்க மாட்டார்களா என்ற கவலையைப் போக்கியது, இந்த புதிய (எனக்கு புதிய) ஹேவல்ஸ் CFL விளக்கு விளம்பரம். தூக்கு தண்டனையை நிறைவேற்றி விட்டு, தண்ணீரில் முகம் கழுவி, சாப்பாட்டை சாப்பிட முடியாத அந்த பெரியவரின் முகப் பாவனைகள் அருமை. அந்த வாழ்க்கையின் விரக்தியை அவர் வெளிப்படுத்திய விதமும், விளம்பரத்தின் கடைசியில் வரும் அந்த கிராமப்புற வயல் வெளியின் ஒதுக்குப்புறமான வீடும் மனதை என்னவோ செய்வது உண்மை. காணி நிலம் வேண்டிய பாரதி, அப்படி ஒரு வீட்டைத்தான் நினைத்திருப்பாரோ ?.
அந்த விளம்பரம் இங்கே
சிந்தனைக் குதிரையை சுரண்டி எழுப்பியதில் மாட்டியது ஐ10 விளம்பரம். ஷாருக்கான் நடித்த அந்த விளம்பரத்தில், ஒரு படத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் போது, அந்த கதாநாயகியை வர்ணிக்கும் விதமாக, தன் காரை நினைத்து வர்ணிப்பார். முடிவில், ஐ10 என்று சொல்ல, டைரக்டர் கட் செய்வதுடன் விளம்பரம் முடிகிறது. விளம்பரத்தில் நம்பகத்தன்மை இருக்கிறதா எனத் தெரியவில்லை. அந்த விளம்பரத்தில் நடித்த நாட்களைத் தவிர, மற்ற நேரங்களில், ஷாருக்கான், ஐ10 என்ற ஒரு காரைப் பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே.
ஷாருக்கானே ஐ10 உபயோகிக்கிறார் என்று நம்பி அந்த ஒரே காரணத்திற்காக யாரும் அந்த காரை வாங்காதிருப்பார்கள் என்று நம்புவோமாக.
இதே போல அமீர்கான் நடித்த Samsung Guru என்ற மொபைல் போன் விளம்பரம். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
ரசிக்கவைத்த மற்றோரு விளம்பரம், இரண்டு மெமரிக் கார்டுகளை ஒரே மொபைல் போனில் உபயோகிக்கலாம் என்ற அந்த விளம்பரம். அக்பர் பற்றிய ஹிந்தி படத்தை மொபைல் போனில் பார்க்கும் போது, மெமரிக்கார்டை எடுத்துவிட, கோபம் கொண்ட அக்பர், நேரில் அவரது படை வீரர்களுடன் வந்து ரகளை செய்வது அற்புதமான கற்பனை.
அலுவலக காபி குடிப்போர் சங்கத்தில் போன வாரம் பேசிக்கொண்டிருந்த போது, “SAVE OUR PLANET" என்ற விளம்பர வாக்கியங்கள் சரியானவையா என்ற விவாதம் நடந்தது.
பூமிப்பந்தின் வாழ்க்கையில், மனித குலம் தோன்றியதும், மறையப் போவதும், ஒரு நொடி நேர நிகழ்வு. வெப்பமயமாதல் மற்றும் சுற்றுபுறம் மாசு அடைவதால், அழியப்போவது மனிதர்கள் மட்டுமே. பூமி, இதை விட மோசமான பனியுகங்களைக் கடந்து வந்திருக்கிறது.
SAVE OURSELVES என்பது சரியான வாசகமாக இருக்கும் என்று எங்கள் சங்கத்தில் முடிவு செய்தோம்.
17 பின்னூட்டங்கள்:
HAVELLS விளம்பரத்தை நானும் பார்த்தேன், அந்த தாத்தாவின் நடிப்பு அற்புதம்,,,HAVELLS ன் எல்லா விளம்பரங்களும் இப்படித்தான் மனித உணர்வுகளை மையம்க வைத்து ஆர்பாட்டம் இல்லாமல் இருக்கும், அதன் தரமும் அப்படியே,,,
===
உங்கள் கா.கு.ச. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
பூமிப்பந்தின் வாழ்க்கையில், மனித குலம் தோன்றியதும், மறையப் போவதும், ஒரு நொடி நேர நிகழ்வு. வெப்பமயமாதல் மற்றும் சுற்றுபுறம் மாசு அடைவதால், அழியப்போவது மனிதர்கள் மட்டுமே. பூமி, இதை விட மோசமான பனியுகங்களைக் கடந்து வந்திருக்கிறது.
SAVE OURSELVES என்பது சரியான வாசகமாக இருக்கும் என்று எங்கள் சங்கத்தில் முடிவு செய்தோம்//
நல்ல முடிவு..:)) ஆனால் காலம் காலமாக SAVE OURSELVES என்பதை செய்துதான் இந்த கதி வந்தது நமக்கு! :))
Havells - விளம்பரம் நல்லதாக இருக்கலாம். ஆனால், அவர் மட்டுமே அந்த தண்டனைக்கு காரணம் போல அவர் வாடி வருவதும், அந்த guilty உணர்வையும் வியாபாரம் ஆக்குவதையும் ............ ம்ம்ம்ம்........
Save Ourselves - an interesting thought!
இந்த பதிவு, அருமையா சில விஷயங்களை அணுகி இருக்கிறது. :-)
'Save our grandchildren!' என்பது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
என்ன பின்னோக்கி சார் ... ரஜினிகாந்த் மாதிரி எப்பவாவது ஒரு தடவ ரிலீஸ் பண்றீங்க...?
ஏனோ தூக்கு தண்டனை நிறைவேற்றும் காட்சியை பார்க்கும்போதெல்லாம் அடூரின் நிழல் கூத்துவில் வரும் ஒடுவில் உன்னிகிருஷ்ணன் ஞாபகத்துக்கு வருகிறார்.
விளம்பரங்களில் சாதாரணர்களை அதாவது மாநிறத்தவர்களை உபயோகப் படுத்துவது குறித்து தனிப் பதிவே பதியலாம் நீங்கள்?
ஸாரி..நிழல் குத்து என்றிருக்க வேண்டும்!
சித்ரா டீச்சர் சொல்லும் அதே எண்ணம்தான் எனக்கும் தோன்றியது.
// SAVE OUR PLANET //
என்பதை மனிதர்களை தவிர இதர உயிரினஙகளை குறிக்கும்!! பூமி என்று அர்த்தம் கொள்ள கூடாது!
// SAVE OURSELVES //
செய்ததால் வந்த வினை - மற்ற உயிரினஙகளின் அழிவு.
விளம்பர விமர்சனம் நன்று.
காபி குடிப்போர் சங்கம்.....:))
வேலைப்பளு அதிகமாகி விட்டதோ.
SAVE OURSELVES என்பது சரியான வாசகமாக இருக்கும் என்று எங்கள் சங்கத்தில் முடிவு செய்தோம். //
பூமி சொல்லிக் கொண்டிருக்கும் 'என்னைக் காப்பாற்றுவதெல்லாம் இருக்கட்டும் முதல்ல உங்களை காப்பாத்திக்கோங்க டா ' என்று.
'save our generation' இன்னும் சரியாக இருக்குமோ?
நன்றி
* நாஞ்சில் பிரதாப் - உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
* ஷங்கர் - உண்மைதான். save ourselves ம் சரியில்லை என்றே தோன்றுகிறது
* சித்ரா - நீங்கள் சொல்வது சரியே. நான் அவரின் நடிப்பை மட்டுமே சொன்னேன். அந்த விளம்பரம் ஹிந்தியிலிருந்ததால், என்ன சொல்ல வருகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை
நன்றி
* K.B.JANARTHANAN - நீங்கள் சொல்வதும் சரியே.
* ரெட்டைவால்ஸ் - மேட்டர் எதுவும் சிக்க மாட்டேங்குது. கற்பனை வறட்சி :). நீங்கள் சொன்ன நிழல் குத்து பார்த்ததில்லை. பார்க்கும் போது கண்டிப்பாக நினைக்கிறேன்.
நன்றி
* முகிலன் - சுயநலம் இருக்கும் தானே. ஆனால் அதுவே அழிவுக்கு வழிவகுக்கும் போது, மாற வேண்டியது தேவையாகிறது.
* ராம்பிரகாஷ் - அட ! மற்றவைகளைப் பற்றி மறந்தே போனோம்.
* சைவகொத்துபரோட்டா - மேட்டர் பஞ்சம் :)
* நாய்குட்டி மனசு - நீங்கள் சொன்னதும் நல்லாயிருக்கு
ரசிக்கவைத்த மற்றோரு விளம்பரம், இரண்டு மெமரிக் கார்டுகளை ஒரே மொபைல் போனில் உபயோகிக்கலாம் என்ற அந்த விளம்பரம். அக்பர் பற்றிய ஹிந்தி படத்தை மொபைல் போனில் பார்க்கும் போது, மெமரிக்கார்டை எடுத்துவிட, கோபம் கொண்ட அக்பர், நேரில் அவரது படை வீரர்களுடன் வந்து ரகளை செய்வது அற்புதமான கற்பனை.--
நானும் ரொம்ப ரசிச்ச விளம்பரம் இது.. பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி ! தொடருங்கள் . மீண்டும் வருவேன் .
நண்பரே
ஹாவெல்ஸ் விளம்பரம் பார்த்தேன்,கொடுமையாக இருக்கிறது,விளம்பரங்களில் கூடவா சாவை பார்க்க வேண்டும்?
அந்த மெமர் கார்டு விளம்பரம் பார்த்தேன் அது நன்றாக இருந்தது.
ஹாவெல்ஸ் நல்ல ஃபேன்.பல்பு எப்படியோ?
=============
அப்புறம்?வேலையெல்லாம் எப்படி இருக்கிறது?
ஃபார்மாலிடீஸ் டன்
Post a Comment