சிறிது நேரத்திற்கு முன் பெய்த மழை வீட்டைச் சுற்றிலும் இருந்த மண்ணைச் சேறாக்கியிருந்தது. வீட்டின் உள் அறையில் டேவிட் உறங்கிக்கொண்டிருக்கும் போது, டேவிட்டின் மகன் ஜான், ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அருகிலிருந்த சோபாவில் ஜானின் தம்பி மேத்யூஸ் தூங்கிக்கொண்டிருந்தான்.
பின்னிரவு நேரத்தில், இடி இடிக்கும் ஓசைக்கு நடுவில் கேட்ட துப்பாக்கி சத்தத்தில் ஜான் அதிர்ந்து போனான். அப்பா உறங்கும் அறையிலிருந்து அந்த சத்தம் வந்தது. என்ன செய்வது ?. அறையின் உள்ளே சென்று பார்க்கலாமா ? ஒருவேளை, திருடன்/கொலைகாரன் அங்கே இருந்தால் என்ன செய்வது ?. அறைக்கதவைத் திறக்கப் பார்த்தபோது, உள்ளே தாழ்பாள் போட்டிருப்பது தெரிந்தது. வேறு வழியில்லை போலீசுக்கு போன் செய்யவேண்டியதுதான். அதற்கு முன், மேத்யூஸை பக்கத்து வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். அனுப்பினான். அதற்குப் பின் போலீசுக்கு போன் செய்தான்.
“ஹலோ ! என் பெயர் ஜான். என் அப்பா தூங்கிக் கொண்டிருக்கும் அறையில், துப்பாக்கி சத்தம் கேட்டது”
“பதப்படாதீர்கள் !. உங்களையும், உங்கள் அப்பாவையும் தவிர வேறு யார் உங்கள் வீட்டில் இருக்கிறார்கள் ?”
“என் தம்பி இருக்கிறான். அவனைத் துப்பாக்கி சத்தம் கேட்டதும், பக்கத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டேன்”
“வீட்டினுள் நுழைந்தவன், இப்பொழுது அந்த அறையினுள் இருக்கிறானா ? “
“ அது தெரியவில்லை. சீக்கிரம் போலீசை அனுப்புங்கள்.”
போலீஸ் வந்த போது எல்லாம் முடிந்திருந்தது. எதிர்பார்த்தது போல டேவிட், தலையில் சுடப்பட்டு, கட்டிலில் சரிந்திருந்தார். வீட்டை முழுவதுமாக ஆராய்ந்ததில், கொலைகாரன், டேவிட் படுத்திருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை, பெரிய கல் ஒன்றினால் அடித்து உடைத்து உள்ளே நுழைந்திருப்பது தெரிந்தது. கல் அறையின் உள்ளே கிடந்தது. விசாரணைக்காக, ஜானின் உடைகள் சேகரிக்கப்பட்டது.
டேவிட்டின் எதிரி யாராவது இருக்கிறார்களா ?. அவர் வக்கீலாக பணிபுரிந்தவர். மிக ’நல்லவர்களுக்கு ?!’ மட்டுமே ஆஜராகக் கூடியவராக இருந்ததால், யார் வேண்டுமானாலும் இந்தக் கொலையை செய்திருக்கலாம்.
அடுத்தது, ஜன்னலை உடைக்க உதவிய கல். முதல் மாடியில் இருந்த ஜன்னலை உடைக்க, தரையிலிருந்து அதை எறிந்திருக்க வேண்டும் என முடிவு செய்தார்கள். கல்லின் எடையைப் பரிசோதித்ததில், அவ்வளவு உயரத்திற்கு எறிவதற்கு ஒருவனால் முடியாது என்பதை உணர்ந்தார்கள். கல்லின் எடையையும், தரையிலிருந்து ஜன்னல் இருந்த தூரத்தையும் கணக்கில் கொண்டால், ஒலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியின் ஜெயித்தவர்கள் எறிந்த தூரத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. மேலும், வீட்டின் அருகில் எந்த மரமும், முதல் மாடிவரை ஏறுவதற்கு வசதியாக இல்லை.
வீட்டின் வெளிப்புறத்திலிருந்து, மாடிக்கு ஏறியதற்கான தடையம் எதுவும் இல்லை. அன்று மழை பெய்ந்திருந்தது ஆனால் சேறு வீட்டின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. வெளியிலிருந்து ஒருவன் வந்து இந்தச் செயலை செய்திருப்பதற்கு சாத்தியங்கள் இல்லை.
உடைந்திருந்த கண்ணாடியின் சில்லுகள் அறையின் வெளிப்புறத்திலும் கிடந்தது. தடயவியல் வல்லுனர்கள் உடைந்த கண்ணாடியின் வடிவமைப்பை நுண்ணோக்கி வழியே பார்த்த போது, கண்ணாடி, அறையின் உள்ளிருந்து உடைக்கப்பட்டிருக்கிறது என்பதனை உறுதி செய்தார்கள்.
இப்பொழுது சந்தேகம் அந்த நேரம் வீட்டில் இருந்த ஜானின் மேல் திரும்பியது. பக்கத்து வீட்டில் விசாரித்ததில், இரவு 11 மணியளவில் அவன் தம்பியை கொண்டு வந்துவிட்டது உண்மை என்றார்கள். போலீசுக்கு போன் செய்த நேரம் 11.20. ஆக, சத்தம் கேட்டப் பிறகு, பாதுகாப்புக்காக தம்பியை பக்கத்து வீட்டிற்கு அனுப்பியது பொய். மேலும், மனவியல் நிபுணர்களிடம் ஜானின் பேச்சை தந்து பரிசோதித்ததில், குரலில் உண்மையான பதட்டம் இல்லை என்று உறுதிசெய்தனர்.
உடையைப் பரிசோதித்ததில், துப்பாக்கி சுடும் போது வெளியான, மிக நுண்ணிய வெடிமருந்து ஒட்டியிருந்தது. துப்பாக்கி சுடும் போது, அவன் மிக அருகில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில் ஜான், டேவிட்டைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டான். என்ன நடந்தது ?. டேவிட் தூங்கியதும், இடிச்சத்தத்தை வீட்டினுள் கேட்ட சத்தம் என தம்பியை நம்ப வைத்து, அவனை பக்கத்து வீட்டிற்கு கொண்டு விட்டுவிட்டு வந்தான். அறையினுள் புகுந்து, துப்பாக்கியால் கொன்று விட்டு, கல்லால் ஜன்னலை உடைத்திருக்கிறான். அறையின் உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு, ஜன்னல் வழியே வெளியே சென்றுவிட்டான். பிறகு போலீசுக்கு போன் செய்திருக்கிறான்.
காரணம் என்ன ? நெடுநாட்களாக தான் கேட்டுக்கொண்டிருந்த ஸ்போர்ட்ஸ் மாடல் காரை வாங்க அப்பா பணம் தராததால், அவருடன் சண்டை. சம்பவம் நடந்த இரவு, சண்டை தொடர்ந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட கோபம் இச்செயலைச் செய்யக் காரணமாக இருந்திருக்கிறது. வளர்த்த கடா மார்பில் ... இல்லை இல்லை, தலையில் பாய்ந்தது.
17 பின்னூட்டங்கள்:
அடேங்கப்பா......! சுவாரசியமான கதை.
ஹா..ஹா..இந்த முறை பாதியிலேயே யூகிக்க முடிந்தது...
நல்ல பதிவு(கொலை) பின்னோக்கி...!!!
நன்றி
- சித்ரா - கதையில்லைங்க நிஜம்.
- சிவன் - துப்பறியலாம் வாங்க படிச்சுட்டு, எல்லாரும் துப்பறியும் நிபுணர்களாக மாறிவிட்டீர்கள் :)
கதையில்லைங்க நிஜம்///
கொடுமைங்க.:(
எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும்........
உள்ளயிருந்து கண்ணாடிய கல்லால உடைச்சா கல்லு வெளியில தானே கெடக்கும்? இப்போ கல்லு உள்ளயில்ல இருக்கு?
அடுத்தது........ 11.00க்கு நிஜமாகவே வேற யாரும் கொலை பண்ணியிருந்தா... பக்கத்து வீட்டில தம்பிய விடும்போது பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு நடந்தத விவரிக்கப் போய் லேட்டாயிருக்கலாமே???????
சரி..... கீழ இருந்துதான் உடைக்க முடியாது... ஆனா வீட்டுக்கு எதிர்ல இருக்குற மரத்துல ஏறி உடைச்சுட்டு ஜாக்கி சான் மாதிரி கயித்துல பாய்ஞ்சு வந்து கொலை பண்ணியிருக்கலாம் இல்லையா?
இப்போ.... ஜானோட சட்டையில மருந்து பட்டிருக்கு.... ஆனா அது அவன் டேவிட்ட சுடும்போதுதான் பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? அவன் ஈவ்னிங் ஷூட்டிங் கிளாஸ்ல ப்ராக்டிஸ் பண்ணும்போது பட்டிருக்கலாம் இல்லையா?
எனவே யுவர் ஹானர்.... எனது கட்சிக்காரர் ஜான் எந்தக் குற்றமும் செய்யாதவர்.... எதிர்த்தரப்பு வக்கீல் போனமுறை வழக்கில் தனக்கு பீஸ் தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவரது EX-கட்சிக்காரர் டேவிட்டை மரமேறி, கல்லால் உடைத்து, கைற்றில் பாய்ந்து துப்பாகியால் சுட்டுக்கொன்றார் என உறுதியாகக் கூறுகிறேன். அதற்கு இந்த A.C யும் உடைந்தை... இவர் அண்ணாசலையின் அருகிலுள்ள ஒரு கணினி வரைகலை நிறுவனத்தில் Adobe After Effects CS4 ஐக் கொண்டு இந்த போலியான விசாரணை வீடியோவை உருவாக்கியுள்ளார் என்பதற்கு ஆதாரம் இந்த பைலில் உள்ளது.....
ஆகவே... இறுதியாக, கல்லில் இருந்து (என் சுயமுயற்சியால்) கண்டுபிடிக்கப்பட்ட எதிர்த்தரப்பு வக்கீலின் கைவிரல் ரேகையையும், கிராபிக்ஸ் செய்யப்பட்ட விடியோவிர்கான பில் ஆதாரத்தையும், எதிர் மரக்கிளையில் பட்டப்பட்ட கயிற்றையும், அதில் சிறிதே மாட்டியுள்ள வக்கீல் உடையையும், எதிர்வீடுக்காரர் கொடுத்த வாக்குமூலத்தையும், இன்றைய ஷூட்டிங் கிளாசில் ஜான் பயிற்சி எடுத்தான் என்பதற்கான ஆசிரியரின் வாக்குமுலத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு அடிப்படையற்றது என திட்டவட்டமாகக் கூறுகிறேன். தட்ஸ் ஆல் யுவர ஹானர்...
The Judgement is over to you......
kalakkal !
sorry for eng.
nice but please explain the detective phase more detail.
:)
கதையில்லை நிஜமா!!!
கொடூரம்.
நன்றி
ஷங்கர் - வெளிநாட்டுல சகஜமா இருக்கு
கரிகாலன் - ஐய்யோ என்ன விட்டுடுங்க. நீங்க கேட்டதுல நியாயம் இருக்கு. கையில கல்ல வெச்சு உடைச்சுட்டு, வெளியே இருந்து உடைச்ச மாதிரி தெரியனும்னு, கல்ல உள்ளயே போட்டுட்டான்.
ஜான் ஷீட்டிங் கிளாஸ் போகலைங்க :)
யாசவி - இது ரொம்ப சிம்பிள் கேஸ் அதுனால தான் இத எழுதனுமான்னு யோசிக்கிட்டே இருந்தேன்.
செந்தழல் ரவி - நன்றி
சை.கொ.ப - நன்றி
நன்றி யாசவி. துப்பறியும் பகுதியை சற்று விளக்கமாக இப்பொழுது எழுதி இருக்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி
துப்பறியலாம் வாங்க கூட
Judgement... ம்.. நடக்குது இங்கே.. அசத்துங்க.
யுவர் ஹானர், முதலில், இந்த வழக்கில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெட்டத் தெளிவாக அறிய முடிகின்றது. இதற்கான ஆதாரம் கூகிளின் Cacheஇல் பதிவாகியுள்ளதை இந்த முகவரியில் காணவும். http://webcache.googleusercontent.com/search?q=cache:WsQVy0-ZHfUJ:pinnokki.blogspot.com/2010/04/blog-post_14.html. இப்படி கோர்ட்டில் வழக்கு நடைபெறும்போது பதியப்பட்ட வழக்கினை மாற்றுதல் சட்டத்திற்கு புறம்பானது.
சரி, இனி எனது பிரதி வாதத்திற்கு செல்வோம்.
எதிர்க்கட்சி (எ. க.) வக்கீலின் வாதத்தின்படி ஜான் உள்ளிருந்து ஜன்னலை உடைத்து, பின் கல்லை எடுத்துவந்து மீண்டு உள்ளேயே போட்டுள்ளான். இப்போது வழக்கை சிறிது படித்துப் பார்க்கவும். வழக்கின் ஏழாவது பந்தியில், “அன்று மழை பெய்ந்திருந்தது ஆனால் சேறு வீட்டின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. “ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது ஜான் வெளியில் விழுந்த கல்லை மறுபடியும் உள்ளே எடுத்து வந்திருந்தால், வீட்டின் உட்பகுதியில் சேறு பட்டிருக்கும். அனால் இங்கு சேறு தென்படவில்லையன்பது தெளிவாகத் தெரிகிறது.
தற்போது எ.க.வக்கீல் முன்வைக்கக்கூடிய வாதங்கள்:
1. ஜான் வெளியில் விழுந்த கல்லை எடுக்கவில்லை. அவன் வேறு ஒரு கல்லினை முன்கூட்டியே தயாராக வைத்திருக்கலாம்.
2. ஜான் வெளியில் விழுந்த கல்லை எடுத்துவரும்போது தன்னை சுத்தம் செய்து கொண்டிருக்கலாம்.
எனது பிரதிவாதங்கள்:
1. வழக்கின் ஆறாவது பந்தியில் அறையினுள்ளே காணப்பட்ட கல்தான் ஜன்னலை உடைக்க உதவிய கல் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது (அல்லது ஆதாரமற்ற ஒன்றை உண்மையென கூறியிருக்கின்றார்கள்). எனவே ஒன்று, எ.க.வக்கீலின் வாதப்படி வழக்கில் கூறப்பட்ட தகவல் பொய்யானது. அல்லது வழக்கு உண்மையானது, வக்கீலின் வாதம் தவறானது!
2. வழக்கின் ஏழாவது பந்தியில், “வெளியிலிருந்து ஒருவன் வந்து இந்தச் செயலை செய்திருப்பதற்கு சாத்தியங்கள் இல்லை.” என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கையில் ஜான் வெளியில் சென்று, கல்லை எடுத்துவந்திருப்பதற்கு சாத்தியங்கள் இல்லை. அப்படிச் சாத்தியம் இருக்கும்பட்சத்தில் உண்மையான கொலையாளியும் (ஜானைத் தவிர) தன்னை சுத்தம் செய்துவிட்டு உள்ளே நுழைந்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தாலும் சேறு பட்டிருக்காது. எனவே ஒன்று, எ.க.வக்கீலின் வாதம் உணமையானது, வழக்கில் கூறப்பட்ட தகவல் பொய்யானது. அல்லது வழக்கு உண்மையானது, வக்கீலின் வாதம் தவறானது!
அடுத்து, வழக்கின் ஆறாவது பந்தியில் வீட்டின் அருகே எந்த மரமும் கானப்படவில்லை என கூறப்பட்டிருக்கின்றது. இன்றைய திகதி 16.04.2010, கொலை நிகழ்ந்தது பத்து வருங்களுக்கு முன் டிஸ்கவரி சானலில் “மெடிக்கல் டிடக்டிவ்ஸ்” நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்த காலப்பகுதியில். ஆனால், கூகிள் எர்த் எனப்படும் மென்பொருளின் ‘History Imagery’ வசதியில் 25. 05.2002இல் டேவிட் வீட்டின் முன் ஓங்கி வளர்ந்த ஒரு தேக்குமரம் காணப்படுவதற்கான ஆதாரம் இந்த சி.டியில் உள்ளது. அம்மரத்தின் வளர்ச்சியைப் பார்க்கையில் அது குறைந்தது இருபது வயதானது என தாவரவியல் துறை வல்லுனர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். அடுத்து, ஜான் கடந்த ஆறுமாதங்களாக ஷூட்டிங் கிளாஸ் போனதற்கும், கடந்த ஐந்து மாதங்களாக ஷூட்டிங் கிளாஸ் ஆசிரியருக்கு மாதமொன்றுக்கு ஐம்பது டாலர்கள் வீதம் ஐந்து மாதங்களுக்கு டேவிட் பணம் கொடுத்ததற்கான ரசீதுகளும், சம்பவம் நிகழ்ந்த நாளுக்கு முதல் நாள் மாலை டேவிட் இதே உடையுடன் பயிற்சியில் ஈடுபட்டான் என்பதற்கான ஆசிரியரின் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய சி.டி யும் இந்த பைலில் காணப்படுகின்றன. உண்மை இப்படியிருக்க எ.க.வக்கீலோ ஜான் ஷூட்டிங் கிளாஸ் போகவில்லை என்ற அப்பட்டமான பொய்யை கூறிவிட்டு அருகில் ஒரு ஸ்மைலியும் போட்டு வைத்தெரிச்சலைக் கிளப்புகிறார். அதுமட்டுமின்றி எனது மற்றைய ஐந்து ஆதாரங்களுக்கும் பதிலே சொல்லாமல் தனது வாதத்தினை முடித்ததைப் பற்றி கவலைப்படவேண்டியவன் நானல்ல, மாறாக சிறையில் கேப்பங்களி தின்னப்போகும் எ.க.வக்கீல் தான்.
இறுதியாக, எ.க.வக்கீலின் வாதங்களை பொருட்படுத்தாமல், வாய்தா மேல் வாய்தா போட்டு என் கட்சிக்காரரை இயற்கை மரணம் எய்த வைக்காமல், முற்றிலும் தவறாக ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்து எனது கட்சிக்காரர் ஜானை நிரபராதி என தீர்ப்பளிக்குமாறு நான் தாழ்மையுடன் உத்தரவிடுகிறேன்.
யோவ்.. எதிர்க்கட்சி வக்கீலு.... என்னையப் பத்தி தெரியாமப் பேசாதய்யா. நா தினமும் ப்ளாட்பாரத்திலேர்ந்துதான் கோர்ட்டுக்கு வரேன். எனக்கு இருக்குற ஒரே ஒரு பாங் அக்கவுன்டலையும் மினிமம் காசுகூட இல்லாததனாலே போனவருசமே அந்த நாதாரி வங்கி மனேஜர் அக்கவுண்ட கான்சல் பண்ணிப்புட்டான்யா. இப்போ ஒருவேள சாப்பாட்டுக்கும் லாட்டரி அடிச்சுக்கிட்டிருக்கேன்... கிரிமினல் வக்கீலா வேலபாத்து என்னாய்யா பிரயோசனம்? எனக்கு வருசத்துக்கு ஒரேயொரு கிளையன்ட் தான் கெடக்கறான். அவனுங்க கூட ஐநநுறு ரூபாக்குமேல குடுக்கறதில்ல. இந்தியாவிலயிருக்கிற அத்தன கந்துவட்டி காரங்கிட்டையும் முப்பது வருசமா லட்சக்கனக்குல கடன்வாங்கி வச்சிருக்கேன் என்ன செய்ய? (உன்னோட நிலைமையும் இப்படித்தான்னு தெரியும்யா) இந்த நேரத்துல பாத்து இந்த ஜான் பய என்னயப்பத்தி விசாரிக்காம அறுபது லட்சம் ரூபா தரேன், என்னை காப்பாத்துன்னு கால்ல விழுந்து கெஞ்சறான். எனக்கும் பிரதிவாதத்துக்கும் எத்தன கிலோமீட்டர் துரம்னு பாவம் அவனுக்குத் தெரியாது போலிருக்கு... வேற வழியில்லாம நைட் நைட்டா அம்பேத்காரோட புத்தகத்த படிச்சுப் படிச்சு, கிரைண்டர்ல அடிச்சு கரைச்சுக் குடிச்சு, பக்கம்பக்கமா பிரதிவாதம் தயார்பண்ணி, மனப்பாடம் செஞ்சு அங்க (கோர்ட்டுல) வந்து ஒப்பிக்கறேன். தேவையில்லாம வாதம் பண்ணி என் வயித்துல மண்ணள்ளிப் போட்ருடாதய்யா.... அந்தப் பாவம் உன்னைய சும்மா விடாது....
(நா மட்டும் வின் பண்ணேன், உனக்கு அறுபது லட்சத்தில அறுபது பர்சன்ட் தரேன். என்னைய எப்பிடியாவது வின் பண்ண வச்சுடு ப்ளீஸ்....)
மாதேவி அக்கா, ரொம்பத் தேங்க்ஸ். அப்பிடியே நீங்களும் பொழுதுபோக்குக்கு யாரையாவது போட்டுத்தள்ளினா பயப்படாம என்கிட்ட வாங்க... ஹெல்ப் பண்றேன்.
அன்பின் பின்னோக்கி - துப்பறிய பலர் வருவார்கள் - கதை நல்லாவே இருந்தது - வழக்கறிஞர்களின் வாத பிரதிவாதமும் சூப்பர் - நல்வாழ்த்துகள் அனைவருக்கும் - நட்புடன் சீனா
அன்பின் பின்னோக்கி - துப்பறிய பலர் வருவார்கள் - கதை நல்லாவே இருந்தது - வழக்கறிஞர்களின் வாத பிரதிவாதமும் சூப்பர் - நல்வாழ்த்துகள் அனைவருக்கும் - நட்புடன் சீனா
Post a Comment