15 April 2010

நம்மால் முடியும் !!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முக்கியமான நாள் இன்று. அணுகுண்டு சோதனை நடத்தியதையடுத்து, இந்தியாவுக்கு க்ரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் தொழில் நுட்பத்தைத் தர சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மறுத்து விட்டது. திறமையானவர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் வகையில், நம்மவர்கள் முயன்று அந்த இன்ஜினை வடிவமைத்து விட்டனர்.

தகவல் தொழில்நுட்பத்திற்கு உதவும் செயற்கைக் கோள்கள் 36,000 கிலோமீட்டர் உயரத்திற்கு செலுத்தப்படவேண்டும். அதற்கு க்ரையோஜெனிக் தொழில்நுட்பம் இன்றியமையாதது.

இன்று அந்திசாயும் வேளையில், GSLV-D3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. அது வெற்றிகரமாக செயல்படவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். கிரிக்கெட் மற்றும் போர் சமயத்தில் மட்டும் காட்டும் தேசபக்தியை, இந்த அறிவியல் தொழில் நுட்பம் வெற்றியடைய வேண்டும் என்பதிலும் காண்பிப்போம்.

All the Best ISRO.

தற்போதைய செய்தி

ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. ராக்கெட் கிளம்பி 500 விநாடிகள் கழித்து, அதில் இருந்து தகவல்கள் வரவில்லை. இந்த முயற்சியின் மூலம் விஞ்ஞானிகள் கற்றது, அடுத்த முயற்சியை வெற்றியடையச் செய்ய வேண்டும். நம்புவோம்.

9 பின்னூட்டங்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

நிச்சயம் வாழ்த்தப்பட வேண்டிய விசயம்.
இந்த முயற்சி வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் சொல்லியே ஆகவேண்டும் .

மிகவும் சிறப்பான பகிர்வுக்கு நன்றி .
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

vasu balaji said...

வாழ்த்துவோம்!

Chitra said...

Sure. we will.....!

ஸ்ரீராம். said...

தோல்வி அடைந்தது கஷ்டமாக இருந்தாலும் வெற்றிப் பாதையில் இதெல்லாம் படிக்கட்டுகளே என்று மேலும் முன்னேறுவோம்

geethappriyan said...

அருமையான பகிர்வு நண்பரே

சிநேகிதன் அக்பர் said...

அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துகள்.

Rettaival's Blog said...

என்ன தலைவரே..லாங் லீவா?

ஜோதிஜி said...

நம்பி வாழ்த்துவோம்.