15 June 2010

திக்.திக்.பக்.பக் - 4

காலேஜ்ல செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சு, ரிசல்ட் வர்றத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே, பீதியக் கிளப்ப ஆரம்பிச்சுடுவானுங்க. படக் படக் பதிலா திக்.திக்னு (அப்பாடி !!, இந்தப் பதிவோட தலைப்பு வந்துடுச்சு) ஹார்ட் அடிக்க ஆரம்பிச்சுடும். எக்ஸாம் எழுதுறதுல ஒரு டென்ஷன்னா, ரிசல்ட் வர்ற நாளு அதைவிட டென்ஷன்.

”R.E.C ஃப்ரொபசர் பேப்பர் திருத்தியிருக்காராம். நம்ம காலேஜ்ல 4 பேர் தான் எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸாம்.”

”யூனிவர்சிட்டியில என் சித்தப்பா வேலை பார்க்குறாரு. அவரு மூலமா, என் ரிசல்ட் பார்த்துட்டேன். எதிர்பார்த்த அளவுக்கு மார்க் வரலை (ஏண்டா ! 50 மார்க்குக்கு எக்ஸாம் எழுதிட்டு, என்னடா எதிர்பார்ப்பு வேண்டிக்கிடக்கு ?). உங்க மார்க்கெல்லாம் எனக்குத் தெரியலை (உன் மார்க் வெச்சே எங்க மார்க் எங்களுக்கு தெரிஞ்சுடுச்சு).

”இப்பதான் ஆபீஸ் ரூம் போனேன். ரிசல்ட் வந்துடுச்சாம். இன்னைக்கு ஈவினிங் நோட்டீஸ் போர்டுல ஒட்டிடுவாங்க.”

”லெக்சரர் காரிடர்ல என்னைய முறைச்சு பார்த்துகிட்டே போனாங்க. ஐ திங்க், அவங்க எடுத்த சப்ஜெக்ட்ல தான் நிறைய பேர் அவுட் போலயிருக்கு.”

ஒவ்வொருத்தனும் இந்த மாதிரி வாய்க்கு வந்தபடி சொல்லிக்கிட்டே இருப்பானுங்க. கடைசியா லெக்சரர் வந்து “ரிசல்ட் ஒட்டியாச்சே. பார்க்காமா கிளாஸ்ல இருக்கீங்க. அதிசயமா இருக்குன்னு” சொன்ன உடனே, ஓடுவோம்.
 (படத்துல என்ன ஒரு சிரிப்பு பாருங்க. மத்தவன் பெயில் ஆனத பார்க்குறதுல, இவங்களுக்கு ஒரு சந்தோஷம்)


ஒவ்வொரு கிளாஸ்லயும் மூணு குரூப் இருக்கும். 1. யுனிவர்சிட்டி ரேங்க் எடுக்குறவனுங்க. 2. லெக்சரர் உயிரை எடுக்குறவனுங்க. அரியர்ஸ் எழுதரதயே தொழிலா நினைக்குறவங்க. 3. இப்படியும் இல்லாம, அப்படியும் இல்லா, பார்டல பாஸ் ஆகி எஸ்கேப் ஆகுறவங்க. நான் 3 வது குரூப்.

அடிச்சுப் புடிச்சு, நோட்டீஸ் போர்டுல என் பேர பார்த்துட்டு, மார்க் எவ்வளவுன்னு பார்க்க மாட்டேன். Pass. Fail ன்னு ஒரு Column இருக்கும்ல, அத மட்டும் கடகடன்னு ஸ்பீடா, ஒருதடவை பார்ப்பேன். பாஸ்னா, எஸ்கேப். பக்.பக் முடிஞ்சுடும். மார்க் பார்க்குற அளவுக்கு தைரியம் இருக்காது. கிளாஸ்க்கு திரும்பி போன உடனே, கேர்ஸ்கிட்ட, என் மார்க் எவ்வளவுன்னு கேட்பேன். அவங்க நான் கிளாஸ்ல எத்தனாவது ரேங்க் ?? வர்ற செமஸ்டர்ல எவ்வளவு மார்க் எடுத்தா, பர்ஸ்ட் கிளாஸ் கிடைக்கும்ன்னே சொல்லிடுவாங்க. அதுங்களுக்கு வேலையே அதுதான். எல்லாத்துலயும் நல்லா மார்க் வாங்கிட்டு, ரிசல்ட் வந்த உடனே, யாரு ஃபர்ஸ்ட், யாரு செகண்ட்னு ரேங்க் போட்டுருக்குங்க.

ரிசல்ட் பார்த்துட்டு வந்த உடனே, சிலர் முனிவர் ரேஞ்சுக்கு அமைதியா கடைசி பெஞ்ச்ல உட்கார்ந்துப்பானுங்க. ஆறுதல் சொல்லலாம்னு நினைச்சோம்னா, நாம நோகற அளவுக்கு திட்டுவானுங்க.

போன செமஸ்டர் க்ளாஸ் எடுத்த லெக்சரர், இந்த தடவையும் வந்துட்டா போச்சு. ”ம்..சொல்லுங்க. என் சப்ஜெக்ட்ல யாரெல்லாம் பாஸ் ? அவங்க மட்டும் எழுந்திருச்சு நில்லுங்கன்னு” வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுவாங்க.

எனக்குத் தெரிஞ்சு, பைனல் இயர் படிக்குற போது, ஒருத்தன், 45 பேப்பர் அரியர்ஸ் பாஸ் பண்ணினான். இன்னைக்கு வரை, அந்த ரெக்கார்ட எவனும் ப்ரேக் பண்ணலைன்னு நினைக்கிறேன். காலைல ஒரு எக்ஸாம், மத்தியானம் ஒரு எக்ஸாம்னு (ஒன் டே மேட்ச்ன்னு கோட் வேர்டு இதுக்கு), வாரத்துல 5 நாளும் எக்ஸாம் எழுதுவானுங்க.  பார்க்கவே ஆச்சரியமா இருக்கும். ஃபர்ஸ்ட் இயர் மேக்ஸ் எக்ஸாம, பைனல் இயர் முடிஞ்சும், ரெண்டு வருஷம் கழிச்சு காலேஜ் வந்து எழுதியிருக்காங்க. அவங்களுக்காக தனியா, அந்த சிலபஸ்ல கொஸ்டியன் பேப்பர் தயார் பண்ணுவாங்க.

13 பின்னூட்டங்கள்:

Prathap Kumar S. said...

ஹஹஹ. செம காமெடி...பழசெல்லாம் ஞபாகம் வந்துடுச்சு...

அதுசரி... அந்த ரிசல்ட் பார்க்குற போட்டோவுக்கு பாய்ஸ் காலேஜ் போட்டோ எதுவும் கிடைக்கலையா??? :))))

geethappriyan said...

கேர்ள்ஸுக்கு தான் எவ்வளவு நல்ல மனசு?அடுத்தவங்க ரிசல்டையும் பார்த்துட்டு வந்து சொல்றாங்களே?
எந்த காலேஜ்னு சொல்லலையே?

நீங்க சொன்னதையெல்லாம் நான் அனுபவித்ததில்லைங்க,ரொம்ப ஏக்கமாயிருக்கு.

டிப்ளொமாவில் சரியாய் அரியர்ஸ் இல்லாமல்,மேத்ஸில் பார்டர் மார்க்கில் பாஸ் செய்தேன்.தியரி ப்ராக்டிகலில் நாங்க வெயிட்டுல்ல.

geethappriyan said...

பெண்களுடன் படித்ததில்லைங்க.நர நர

Paleo God said...

//, 45 பேப்பர் அரியர்ஸ் பாஸ் பண்ணினான். இன்னைக்கு வரை, அந்த ரெக்கார்ட எவனும் ப்ரேக் பண்ணலைன்னு நினைக்கிறேன்//

அசத்தல்! :))

Chitra said...

ஒவ்வொரு கிளாஸ்லயும் மூணு குரூப் இருக்கும். 1. யுனிவர்சிட்டி ரேங்க் எடுக்குறவனுங்க. 2. லெக்சரர் உயிரை எடுக்குறவனுங்க. அரியர்ஸ் எழுதரதயே தொழிலா நினைக்குறவங்க. 3. இப்படியும் இல்லாம, அப்படியும் இல்லா, பார்டல பாஸ் ஆகி எஸ்கேப் ஆகுறவங்க. நான் 3 வது குரூப்.

...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... கனகச்சிதமா குரூப் பிரிச்சிட்டீங்களே..... சூப்பர்!

Thenammai Lakshmanan said...

அதுங்களுக்கு வேலையே அதுதான். எல்லாத்துலயும் நல்லா மார்க் வாங்கிட்டு, ரிசல்ட் வந்த உடனே, யாரு ஃபர்ஸ்ட், யாரு செகண்ட்னு ரேங்க் போட்டுருக்குங்க//

கூடப் படிச்ச பொண்ணுங்க மேல இம்புட்டு மரியாதையா பாஸ்...:)))

sathishsangkavi.blogspot.com said...

//45 பேப்பர் அரியர்ஸ் பாஸ் பண்ணினான்.//

இந்த சாதனைய முறியடிக்கிறது கொஞ்சம் கஷ்டந்தான் நண்பா...

நான் 18.....

vasu balaji said...

அவசரப்படாம நல்லா நிதானமா ஆழப் படிச்சி எழுதியிருப்பாரோ?

பின்னோக்கி said...

நன்றி
நாஞ்சில் - அது தானே பார்த்தேன். நீங்க மட்டும் தான் போட்டாவ பார்பீங்கன்னு நினைச்சேன். நடந்தது :)

கீதப்ப்ரியன் - அட நீங்க வேற. கேர்ஸ் கூட படிக்குறது, கடியான விஷயம்.

நன்றி - ஷங்கர்
நன்றி - சித்ரா
நன்றி - தேனம்மைலெக்‌ஷ்மணன் - கூடப்படிச்சவங்கதானேன்னு ஒரு மரியாதைல அப்படி எழுதினேன். ரொம்ப நல்ல பொண்ணுங்க அவங்க.

நன்றி - சங்கவி - 18ம் சாதனை தான்.

நன்றி - வானம்பாடிகள் - ஆமாம் சார். ஆழ்ந்த படிப்பு :)

Romeoboy said...

நல்லா இருக்கு பாஸ் பதிவு .. எப்படியோ கடைசீல டெம்ப்ளேட் மாத்திட்டீங்க

பின்னோக்கி said...

வாங்க ரோமியோ. ரொம்ப நாள் ஆச்சு. எழுதறதயும் விட்டுட்டீங்களே.

ரொம்ப கஷ்டப்பட்டு டெம்ப்ளேட் மாற்றினேன். தமிழிஷ் போய்டுச்சு. மீட்டு கொண்டுவரணும் :)

அமுதா கிருஷ்ணா said...

அம்சமாய் இருக்கு பதிவு..மூணாவது குருப் தான் ஜாஸ்தி ஆளுங்க..

Eswari said...

பழைய இனிய நினைவுகள் வந்து போனது.
அருமையான பதிவு.
//ஒவ்வொரு கிளாஸ்லயும் மூணு குரூப் இருக்கும்//
நானும் 3 வது Group தான்