05 June 2010

சாலைகளில் பார்த்தது

எந்தப் புகை ? பகை ?

இரண்டு நாட்களுக்கு முன், கிண்டி மேம்பாலத்தில், முன்னே சென்று கொண்டிருந்த, ஆட்டோவில் பார்த்த வாசகம் (இந்தப் புகைப்படத்தில் பாருங்கள்). சிகரெட் புகை மட்டுமே நமக்குப் பகை என அந்த ஆட்டோ ஓட்டுனர் நினைத்துவிட்டார் போல.


3 ரூபாய்க்கு 30 ரூபாய்

நேற்று, கிண்டியிலிருந்து வேளச்சேரி செல்லும் முக்கிய சாலையில், பயங்கர வாகன நெரிசல். 500 மீட்டரைக் கடக்க, கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆனது. அரை அல்லது ஒரு லிட்டர் பெட்ரோல் காலி. மில்லி மீட்டர், சென்டி மீட்டர் கணக்கில், வண்டிகள் நகர்ந்து கொண்டே இருந்ததால், இஞ்சினை நிறுத்திவைக்க முடியவில்லை.  வாகன நெரிசலுக்கு காரணம் ?  பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 3 அதிகமாகப் போகின்றது என்ற செய்தி கேட்டு, எல்லா பெட்ரோல் போடும் இடங்களிலும் நின்ற வாகனங்களினால் ஏற்பட்ட சாலை நெரிசல். 3 ரூபாய் மிச்சம் பிடிப்பதற்காக, அன்று அனைவரும் இழந்தது 30 ரூபாய்.

5 பின்னூட்டங்கள்:

ஜோதிஜி said...

என்னாச்சு, ரொம்பநாளாச்சு.

திருப்பூரில் இப்போது வெளியே செல்ல வேண்டுமென்றால் இரவு 9 மணி அளவில் கூட நிறைய யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது.

அதுவும் பள்ளிக்கூடங்களுக்கு அருகே பார்க்கும் காட்சிகள் கண்ணீர் வரவழைப்பதாக இருக்கிறது.

ஒரே காரணம் தேவையிருந்தாலும் இல்லாவிட்டாலும் நான்கு சக்கரத்தை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே யிருப்பது. அதற்கு மேலும் வாகனங்கள் என்பது இப்போது அவஸ்யத்திற்கானது என்பது போய் கௌரவத்திற்கானது என்பதாகிவிட்டது.

ஒரே ஒரு குழந்தை பாலர் பள்ளி படிக்கிறது. டொயடேட்டா இன்னோவா கொண்டு வந்து விட்டு அழைத்து செல்கிறது.

ஒட்டுநர், குழந்தை இரண்டு பேருக்கு.
வசதிகள் படுத்தும் பாடு. பொதுமக்களுக்கு அசதியைத்தான் தந்து கொண்டுருக்கிறது.

பின்னோக்கி said...

@ஜோதிஜி - கார் வாங்கும் முன் நிறைய உழைப்பு :). இரண்டு சக்கர வாகனங்களில், குழந்தையை அழைத்துச் செல்லவே பயமாக இருக்கிறது :(

கே. பி. ஜனா... said...

காலத்தின் கொடுமை சார்!

Thekkikattan|தெகா said...

அடக் கொடுமையே! நல்ல அவதானிப்பு...

geethappriyan said...

ஆமாம் நண்பரே டூவீலரில் போய் வந்தால் வெய்யிலும் தூசியும்,புகையும் சேர்ந்து முகம் முழுக்க அழுக்கும் பிசுக்கும் ஆகிவிடுகிறது,மூச்சு விடவும் கடினமாயுள்ளது,அல்லது ஜலதோஷமாவது பிடிக்கிறது,கார் இருக்கும் பட்சத்தில் குழ்ந்தையை பள்ளியில் விட்டு,மனைவியை ஆஃபீஸில் விட்டு வேலைக்கு போக சௌகரியம்,பாதுகாப்பும் கூட,மேலும் பெண்கள் பயமின்றி எளிதாய் ஓட்ட முடியும்,இதுவே கார் பெருக காரணிகள்,நம் ஊரில் நல்ல அகண்ட தெருக்கள்/சாலைகள் இல்லை.