14 June 2010

ஊறுகாயும் ஹேர் ஆயிலும்

இப்பல்லாம், டி.வில ப்ரோக்ராம் பார்க்குறத விட, நடுவுல வர்ற விளம்பரம் ரொம்ப ரசிக்கும்படியா இருக்கு. ஆனா, அதுலயும் திருஷ்டி மாதிரி சில விளம்பரங்கள் வரத்தான் செய்யுது. இல்ல. !!.இல்ல... !!! ஷேவிங் க்ரீம், பனியன் விளம்பரத்தப் பத்தி சொல்லை. அதுக்கெல்லாம் அப்படித்தான் எடுப்பாங்க. நான் சொல்ல வந்தது சின்னீஸ் ஊறுகாய் மற்றும் கார்த்திகா ஹேர் ஆயில் பத்தி.

சின்னீஸ் ஊறுகாய்.


(சினேகா படம் கிடைக்கலைங்க. அதுனால சிம்ரன்)

சின்ன பசங்க சாப்பிட மாட்டேங்குறாங்களாம். சினேகா வந்து, பசங்களே, சின்னீஸ் ஊறுகாய் சாப்பிடுங்க. ரொம்ப டேஸ்டின்னு சொல்றாங்க. ஊறுகாய் உடம்புக்கு கெடுதலான விஷயம். அதுவும், அதைச் சின்ன பசங்க சாப்பிடும் பொருள் மாதிரி காட்டுறது சரியான்னு தெரியலை. இதப்பாத்துட்டு, குட்டீஸ்ங்க, ஊறுகாய் சாப்பிட்டுட்டு, ஐய்யோ, வாய் எரியுதேன்னு கத்தாம இருந்தா சரி.

கார்த்திகா ஹேர் ஆயில்.

ஹேர் ஆயில் விளம்பரம் எடுக்குறது ரொம்ப சிம்பிளான விஷயம். ஒரு பொண்ணு, ஹேர் ஆயில் போட்டதால, நீளமான தலை முடியோட போகும். அதப் பாத்துட்டு, மயங்கி ஒரு ஆண் பின்னாடியே போகணும். இல்லைன்னா ஷேம்பு விளம்பரம்னா, குழந்தை, அம்மாகிட்ட, எனக்கு ஏன் நீளமான முடியில்லைன்னு ? சண்டை போடணும். இதக் கேட்டுட்டு, அந்த அம்மா, ஒரு போடு போடாம, ஷேம்பு போடணும்.

இதெல்லாம், பழைய டெக்னிக். கார்த்திகா ஹேர் ஆயில் விளம்பரத்துல, ஒரு பொண்ணு போகுது. அதோட தலைமுடிய பார்த்து, ‘ஆ’ன்னு வாய பொளக்குறது, பசங்க படத்துல நடிச்ச ஒரு பையன். அடக்கொடுமையேன்னு பயந்து போய் பார்த்தா, அடுத்த ஷாட்டுல, அந்த பொண்ணு, டீச்சரா வர, அந்தப் பையன், “அட ! அந்த அக்காடான்னு சொல்ல” நமக்கு அக்கடான்னு இருக்கும்.

குட்டீஸ் மனசுல ஒரு பெயரைப் பதிய வெச்சுட்டா, அந்தப் பொருள் விற்பனையாகிடும்னு தெரிஞ்சுக்கிட்டு இவங்க பண்ற டெக்னிக்தான் இது.

சரி ! உனக்கு ஏன் இந்தக் கவலை. யாருக்கும் இல்லாத கவலைன்னு நீங்க கேட்கலாம். ஆம் ! நானே பாதிக்கப்பட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி, என் பையன், சூப்பர் மார்க்கெட் போனப்போ “அம்மா ! கோகுல் சீக்ரெட் கார்டன்” பவுடர் வாங்கித்தான்னு ஒரே அடம். இப்ப, எங்க வீட்டுல, பாண்ட்ஸ் பவுடருக்கு பதிலா “கோகுல் சீக்ரெட் கார்டன்” பவுடர்தான்.

டிஸ்கி: சின்னீஸ் ஊறுகாய் மற்றும் கார்த்திகா ஹேர் ஆயில் கம்பெனிகளிடம் இருந்து வாங்கப்பட தொகை பற்றி யார் கேட்டாலும் சொல்லப்படமாட்டாது.

6 பின்னூட்டங்கள்:

geethappriyan said...

உண்மை தான் நண்பரே,
குட்டீஸை குறிவைத்து வரும் நவீன விளம்பரங்கள்,கொடுமை,கண்டதையும் வாங்க வேண்டியிருக்கு.
நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்ல!

geethappriyan said...

நமக்கு அக்கடான்னு இருக்கும்,சூபர்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உண்மை தான், சின்னீஸ் ஊறுகாய் சினேகா தோசை மேல் பரப்பரதைப் பார்த்து அலறிட்டேன். கொஞ்சமா ஊறுகாய் வைத்து சப்பாத்திய சாப்பிட்டு பாருங்க அதோட ருசியே தனி.

Prathap Kumar S. said...

//டிஸ்கி: சின்னீஸ் ஊறுகாய் மற்றும் கார்த்திகா ஹேர் ஆயில் கம்பெனிகளிடம் இருந்து வாங்கப்பட தொகை பற்றி யார் கேட்டாலும் சொல்லப்படமாட்டாது//

நினைச்சேன்... இலவசமாக விளம்பரம் கொடுக்கும்போதே... நினைச்சேன்...சும்மா சொல்லுங்க ஊர்ல யாரும் பண்ணாதது ஒண்ணும் இல்லயே>>>:))

Chitra said...

அதுலயும் திருஷ்டி மாதிரி சில விளம்பரங்கள் வரத்தான் செய்யுது. இல்ல. !!.இல்ல... !!! ஷேவிங் க்ரீம், பனியன் விளம்பரத்தப் பத்தி சொல்லை. அதுக்கெல்லாம் அப்படித்தான் எடுப்பாங்க. நான் சொல்ல வந்தது சின்னீஸ் ஊறுகாய் மற்றும் கார்த்திகா ஹேர் ஆயில் பத்தி.


..... ha,ha,ha,ha,ha.... very funny!

அமுதா said...

/*இப்ப, எங்க வீட்டுல, பாண்ட்ஸ் பவுடருக்கு பதிலா “கோகுல் சீக்ரெட் கார்டன்” பவுடர்தான்*/
:-))
விளம்பரங்கள் குட்டீஸை ரொம்பதான் பாதிக்குது.