16 June 2010

கோடு போட்ட சட்டை

ட்டை வாங்க
கடைக்குப் போவோம்
அந்த கோடு போட்ட
துணியில் ஒரு மீட்டர்
என்பார் அப்பா.
நீலக் கலர் துணியில்
அரை டிராயர்
என்பார் அப்பா.

கொஞ்சம் பெரிசாவே
தச்சுடுங்க
வளர்ற பையன்
என்பார் அப்பா.

ருப்பு, சிகப்பு,
ரெண்டு ஸ்பைடர் மேன்
சண்டை போடுற
டி-ஷர்ட்
ஜீன்ஸ் துணியில்
நாலு பாக்கெட் வெச்ச
முக்கால் பேண்ட்
கேட்கிறான்
என் பையன்

20 பின்னூட்டங்கள்:

Chitra said...

Time changes..... :-)

அன்புடன் நான் said...

காலம் மாறி போச்சு!

கவிதை நச்!

vasu balaji said...

பரவால்லையே. கேட்கிறாரா? :)). எனக்கு இது எடுத்துக்கறேன்னுதானே வரணும்:))

VELU.G said...

வானம்பாடிகள் சொன்னமாதிரி பரவாயில்லை உங்களையெல்லாம் கேக்கறாங்களே, நம்மகிட்ட எடுத்துட்டு வந்தப்புறம் காமிக்கறதோட சரி

நட்புடன் ஜமால் said...

பின்னோக்கி கொண்டு போய்ட்டீங்க...

சிவாஜி சங்கர் said...

தலைமுறை இடைவெளி.!

அமுதா said...

காலம் மாறிக் கொண்டே இருக்கிறது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட..ஆமாம்....

காலம் உருண்டோடுகிறது...

ஜோதிஜி said...

நீங்கள் பின்னோக்கி பார்த்திட்டிங்க. வளர்றவரு முன்னோக்கி போய்க்கிட்டுருக்காரு. சரிதானே?

இங்கும் அதே அக்கப்போரு தான்.

யாசவி said...

நன்னி

நடத்துங்கோ :)

Prathap Kumar S. said...

ஹஹஹ... உங்ககாலம் வேற உங்க பையன் காலம் வேற பின்னோக்கி...

நீங்க சின்ன வயசுல போட்ட வார் போட்ட நிக்கரை உங்க பையனுக்கு வாங்கிகொடுத்துபோடச்சொல்லுங்க... போடுறாரான்னு பார்ப்போம்...:)))

Anonymous said...

காலம் மாறுது

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப நல்லாருக்கு :-)

Anonymous said...

//முக்கால் பேண்ட்
கேட்கிறான்
என் பையன்//

//கொஞ்சம் பெரிசாவே
தச்சுடுங்க
வளர்ற பையன்”
என்பார் அப்பா//

ஒரே நேர்கோட்டுல இதுக்குதுல்ல.. ரசித்தேன்.. நன்றி.

க. சுரேந்திரன்.
அகம் புறம்

sathishsangkavi.blogspot.com said...

இதுக்கு பேர்தான் காலம்....

ஈரோடு கதிர் said...

அழகு

ப்ரியமுடன் வசந்த் said...

பின்னோக்கி சார் நீங்க பெயரிலே இன்னும் உங்க பையன் உங்களுக்கு ஆப்போசிட்ல...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்லாருக்கு.

Unknown said...

இன்னும் பையனுக்கு அந்த வயசு வரலை..

மத்தபடி நாமெல்லாம் அந்தக் காலத்துலயே நாமே செலக்ட் செஞ்சவிங்க..

Pepe444 said...

HI FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/