வழக்கம் போல இதுவும் இன்று காலை, சாலையில் பார்த்தது தான். இந்த வண்டி, சிக்னலில் நிற்காமல் போனால், யாருக்கு அபராதம் விதிப்பார்கள் ?. அல்லது இந்த வண்டிக்கு அபராதம் விதிக்கும் தைரியம் யாருக்காவது வருமா ?.
ஒரு காலத்தில் மத்திய அரசு, எலக்ரானிக் சிப் பொருத்திய நம்பர் ப்ளேட் எல்லா வண்டிக்கும் வைப்பதாக ஒரு திட்டம் இருந்தது. இப்பொழுதும் அது இருக்கிறதா என்று தெரியவில்லை.
50 லட்சம் ரூபாய் போட்டு கார் வாங்குபவர்கள் கூட, நம்பர் ப்ளேட் எழுதும் போது, கஞ்சத்தனமாக, மிகச்சிறிய, கண்ணுக்குத் தெரியாத வகையில் நம்பர் எழுதுகிறார்கள்.
நான் வண்டி ஓட்டும் போது, பின்னால் வரும் ஆம்புலன்ஸீக்கு வழிவிடுகிறேனோ இல்லையோ, கட்சிக்கொடி கட்டிய டாடா சுமோ, பஸ், குடிதண்ணீர் லாரி மற்றும் மஞ்சள் கலர் நம்பர் ப்ளேட் வண்டிகளுக்கு கண்டிப்பாக வழி விட்டுவிடுவேன். எதுக்கு வம்பு ?.
12 பின்னூட்டங்கள்:
எதுக்கு வம்பு? கமென்ட் போட்டு, வோட்டு போட்டுடுறேன்.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
ஹஹஹஹஹ... சிரிச்சு முடில... இப்படில்லாம் கூட பண்ணுறானுங்களா...
கடவுளே எம்மக்களை நீதான் காபபாத்துனும்...
super snap
ஹ்ம்ம் எங்க ஏரியால ஒரு பைக்ல தளபதின்னு எழுதி இருக்கும்.. தருதலைங்க என்னைக்கு தான் திருந்த போறாங்க.
ஹஹ்ஹஹ்ஹா....அதானே..எதுக்கு வம்பு!! நல்ல பாலிஸி! :))
என்னது..? எதுக்கு வம்பா...?
அகில ஒலக பொரச்ச்சி தலிவி எங்க அம்மா பேர வண்டில போட்டா..அத போட்டா புடிச்சு பதிவு போடுவியலோ.!
இருக்கு ஒங்களுக்கு...!;)
இது நிறைய நடக்குதே:))
நன்றி
@சித்ரா
@நாஞ்சில்
@சசிகுமார்
@<எப்படீங்க உங்க பெயரை எழுத ? :)
@சந்தன முல்லை
@தமிழ் அமுதன் - பயந்து வருதுங்க. தப்பா ஒண்ணும் எழுதலைங்கோவ்.
@வானம்பாடி - சென்னைக்கு வெளியே பார்த்திருக்கிறேன். இப்பொழுது சென்னையிலும்.
எதுக்கு வம்பு ?.
:-)))
எங்க ஏரியாவில ஒரு வண்டி எண் 6055 athai boss என்று வரும்படி போட்டு இருக்கிறார்கள். சில வண்டிகளில் முதல் எண்ணும் கடைசி எண்ணும் மிக சிறியதாகவும் நடுவில் உள்ள எங்கள் மிக பெரியதாகவும் போட்டு இருக்கிறார்கள். இதுக்கு ஏதாவது அவசர சட்டம் வந்தால் தேவலாம்.
அம்மா மேலை அத்தனை விசுவாசம் :)
//எதுக்கு வம்பு ?.//
ஆமா எதுக்கு வம்பு
Post a Comment