ஒரு சிறிய அறை. ஒரு கம்பெனியில் சேருவதற்காக கடைசி கட்டத் தேர்வில், 8 பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வினாத்தாள் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில விதிமுறைகளை விளக்குவதற்கு ஒருவர் அறையினுள் வருகிறார். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
“இங்க பாருங்க மக்களே ! உங்களுக்கு முன் ஒரு கொஸ்டியன் பேப்பர் இருக்கு. அதற்கு விடையளிக்க 80 நிமிடங்கள் தரப்படும். 80 நிமிடங்களுக்கு முன், யாராவது இந்த அறையை விட்டு வெளியே போனா, அவங்க அப்படியே வீட்டுக்குப் போய்ட வேண்டியது தான். எந்தக் காரணத்தைக் கொண்டும், கொஸ்டியன் பேப்பரை டேமேஜ் செய்யக் கூடாது. தெரியாம பண்ணிட்டேன். தண்ணிக் கொட்டிடுச்சுன்னு சொன்னாலும், ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எந்தக் காரணம் கொண்டும் என்னோட நீங்க பேச முயற்சி பண்ணக்கூடாது. இந்த ரூம்ல ஒரு காவல்காரன் நிக்கிறான் பாருங்க. அவன் கூடவும் நீங்க பேசக்கூடாது. எதாவது கேள்வியிருக்கா உங்ககிட்ட ?”
இவ்வளவு பேசிய பிறகு, அந்த அறையில் இருந்த யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. 80 நிமிடத்திற்காக கடிகாரம் தொடங்கப்படுகிறது. ரூல்ஸ் சொன்ன அந்த ஆள், அறையை விட்டு வெளியே போய்விடுகிறான்.
எல்லாரும் அவர்களின் கொஸ்டியன் பேப்பரைப் பார்க்கிறார்கள். அடக் கடவுளே !! ஒன்றுமே இல்லை. வெற்றுத்தாளாக இருக்கிறது. அப்புறம் எப்படி அந்தக் கேள்வியைக் கண்டுபிடிக்கிறார்கள் ? யாராவது விடை கொடுத்தார்களா ?
இப்படி ஒரு டெஸ்ட் வைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? இதனை ஒரு படமாக எடுத்திருக்கிறார்கள்.
படத்தின் பெயர் - EXAM
சுவாரஸ்யமான இந்தப்படம் சரியாக 90 நிமிடங்கள் ஓடுகிறது. ஒரே ஒருவர், என்ன கேள்வி என்று கண்டுபிடிக்கிறார். அதுவும் 79 நிமிடங்கள் 50 வது நொடியில். அந்தக் கேள்வியைக் கண்டுபிடிக்க என்னென்ன செய்கிறார்கள் ? எத்தனை பேர் அறையை விட்டு வெளியே போகிறார்கள் ?. இவ்வளவு கடினமான ஒரு தேர்வு எதற்காக ? அந்தக் கம்பெனி என்ன தயாரிக்கிறது?.
இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது படம். ஒரே அறைக்குள் எடுக்கப்பட்ட மிகவும் சுவாரஸியமான இந்தப் படத்தை நீங்களும் பாருங்கள்.
24 பின்னூட்டங்கள்:
ஆகா... பதில் சொல்லுவீங்கனு பார்த்தால் நீங்களும் empty question paper கொடுத்துட்டீங்களே!!!!
wow! I haven't seen the movie yet. I will see it soon.... :-)
இண்ட்ரெஸ்ட்டிங்.. இப்பவே டவுன்லோடு போட்டுடறேன் :)
படத்தின் கதை கலக்கலாக இருக்கிறது. படத்தின் முடிவைச் சொல்லாமல் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!
interesting!
கதைச் சுருக்கமே பயங்கர டென்ஷனைக் கொடுக்கிறது. படம் எப்படி என்று தெரியவில்லை. எழுதியவிதம் நன்றாக இருக்கிறது.
பாத்துடறேன். நல்ல படமா இருக்கும்போல இருக்கு
நண்பரே,
இந்த படம் பார்த்துவிட்டேன்,ப்ரில்லியண்டாய் எடுக்கப்பட்ட இங்கிலாந்து சினிமா.
சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறீர்கள்.
இனிமேல் தான் யாரும் எதிர்பாரா செம திருப்பங்கள் உண்டு.
//அமுதா said...
ஆகா... பதில் சொல்லுவீங்கனு பார்த்தால் நீங்களும் empty question paper கொடுத்துட்டீங்களே!!!! //
repeattuu
படம் பார்த்த யாராவது என்னதான் முடிவுன்னு அடித்த பதிவுக்குள் சொன்னால் நலம்! நான் எங்கே படம் பார்க்கப் போகிறேன்..?
சூப்பர் பின்னோக்கி இந்தமாதிரி படங்களை அறிமுகப்படுத்துங்கள்.
பார்க்காமவிடமாட்டேன்...
ஹ்ம்ம் .. தெரியலையே ..
நாங்க எல்லாம் விடைத்தாள் தான் வெத்து தாளா பார்த்திருக்கிரோம்!!
Brilliant movie pinnokki sir!
இப்போ தான் பார்த்து முடித்தேன்...! படத்தைப் பற்றிய அறிமுகமும் அருமை!
படம் பார்த்தேன்...! அருமை thanks
படிக்கவே... மிக சுவாரஸ்யமா இருக்கு...
பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.
பகிர்வுக்கு நன்றிங்க.
அந்த பரீட்சைக்கு நான் போகவில்லையே.. நான் தப்பிவிட்டேன். :)
பகிர்வுக்கு நன்றிகள்.
EXAM ANSWER PLEASE....
padam parthen anal vidai theriyavillai answer please...
நேத்துதாங்க இந்த படத்த பார்த்தேன், அந்த கடைசி நிமிடம் வரை பர பர...
விடை தெரிந்தவுடன், அடச்சே என்று ஆகிவிட்டது,...
ஆனாலும் நல்ல படம்...நன்றி பின்னோக்கி...!!!
நல்ல படத்தை அறிமுகபடுத்திய பின்னோக்கிக்கு என் நன்றிகள்...
நானும் இந்த படத்தை எழுதி இருக்கேன்...
kudave download link koduthu irrunthingana.....
நல்ல அறிமுகம்..
நிச்சயம் பார்க்க தூண்டுகிறது உங்கள் அளவான விமர்சனம்.
உங்கள் நடை அருமை..
அன்புடன் கபிலன்
தல,
இந்த போஸ்டரை பார்த்தீங்களா?
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்
Post a Comment