முதலாவது,
நான் சிறுவயதில் மிகவும் விரும்பி பார்த்த ஒரு நிகழ்ச்சியின் துவக்கத்தில் வரும் இசை இது. அமைதியான இரவு நேரத்தில்இதனைக் கேட்கும் போது, மனது ஒரு சிறு ஊரையும் அதனையொற்றிய வாழ்வியலையும் நினைவுபடுத்தும்.
|
இரண்டாவது,
இது ஒரு தொலைக்காட்சித் தொடரின் பாடலின் இசை. இதனைக் கேட்கும் போது, சிறு பய உணர்ச்சியத் தூண்டக்கூடியது. கூடவே தாளம் போட வைக்கும் துள்ளலான மெட்டு. கேளுங்கள்.
|
மூன்றாவது,
காலை 6 மணியே விடியல் காலை என்று எண்ணிய சிறு வயதில், இந்த பாட்டுச் சத்தம் கேட்டபடி, கண்ணைக் கசக்கியபடி படுக்கையை விட்டு எழுந்தது நினைவிலிருக்கிறது. சில நேரங்களில் சீக்கிரம் எழுந்திருக்கவில்லை என திட்டு விழும்.
|
நான்காவதாக,
Earth TV யில் உலகின் முக்கியமான நகரங்களின் தற்போதைய நேரம் மற்றும் வெப்ப நிலை, அந்தந்த நகரங்களின் முக்கியமான இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் கேமிரா மூலமாக காண்பிக்கப்படும். CNBC TV-18 தொலைக்காட்சியில் அதனை ஒளிபரப்பும் போது, அதன் பின்ணனியில் ஒலிக்கும் இசையும், உலகின் வெவ்வேறு இடங்களின் காட்சிகளும் மனதிற்கு இதமாக இருக்கும். எவ்வளவு தேடியும், அது எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் இங்கு பகிர இயலவில்லை.
6 பின்னூட்டங்கள்:
இதில் அந்த இரண்டாவது மியூசிக் மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு மர்மதேசம்கற்பகமரம் சீரியல்ல..
1. நாராயணின் "மால்குடி டேஸ்". தற்போது பாலிமர் டிவி என்றொரு சேனலில் வருகிறது.
2. நாகாவின் "மர்ம தேசம்". இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட ராஜ் டிவியில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
3. வந்தே மாதரம் - சரியாக நினைவில்லை. அநேகமாக தூர்தர்ஷன் என்று நினைக்கிறேன்.
1. சந்தேகமே இல்லாமல் இது நாராயணனின் மால்குடி டேஸ்ல் டைட்டில் கார்டில் வரும் பின்னணி இசைதான்
2. கிங் சொன்னாமாதிரி மர்மதேசமான்னு சரியான தெரில...
3.இது நம்ம ஆல்இன்டியா ரேடியோ காலைல நிகழ்ச்சி தொடங்கும்போது போடற வந்தேமாதரம் பாட்டுதான் பின்னோக்கி
1. சந்தேகமே இல்லாமல் இது நாராயணனின் மால்குடி டேஸ்ல் டைட்டில் கார்டில் வரும் பின்னணி இசைதான்
2. கிங் சொன்னாமாதிரி மர்மதேசமான்னு சரியான தெரில...
3.இது நம்ம ஆல்இன்டியா ரேடியோ காலைல நிகழ்ச்சி தொடங்கும்போது போடற வந்தேமாதரம் பாட்டுதான் பின்னோக்கி
முதலாவது ஓபன் ஆகவில்லை. இரண்டாவது கேட்டதில்லை. மூன்றாவது குறிப்புகள் படிக்கும்போதே யூகித்தேன். சரியாக இருந்தது!
நன்றி - வசந்த்
நன்றி - கிங் விஸ்வா - மூன்றுமே சரியாக சொல்லிவிட்டீர்கள்.
நன்றி - நாஞ்சில்
நன்றி - ஸ்ரீராம் - முதலாவது கண்டிப்பாக கேளுங்கள். நான் செக் செய்தேன். சரியாக இருக்கிறது.
Post a Comment