28 July 2010

தொங்கு பாலத்தின் நடுவில் ...

ராசரியாக ஒரு இந்தியனின் ஆயுட்காலம் 65 முதல் 70 வருடம் என்றால், அதில் பாதி வயதில் இப்பொழுது இருக்கிறேன்.

வாழ்க்கை என்ற, 65 பலகைகளால் கட்டப்பட்ட தொங்கு பாலத்தின் பாதியைக் கடந்த உணர்வு. . இங்கிருந்து நடந்து வந்த பாலத்தை திரும்பிப் பார்க்கும் போது, முதல் 15 அடிகள் மிக எளிதாக, மனதில் பயம் என்பதே தெரியாமல் கடந்திருக்கிறேன்.

டந்து வந்த போது, இரண்டு புறமும் இருந்த கயிற்றை பிடிமானத்திற்காகக் கூட தொடாமல் சர்வ சாதாரணமாக வந்து விட்டேன். அங்கிருந்த போது காலின் அருகிலேயே தரையிருந்தது. விழுந்தாலும் அடி படாது என்ற உணர்வு. அதனால், கீழே பார்க்காமல், இருமருங்கிலும் இருந்த இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி வந்தாகிவிட்டது.

20வது அடியை வைக்கும்போது பாலம் சிறிது ஆட ஆரம்பித்தது. காலின் கீழே சில பலகைகள் உதிர்ந்து விழுந்த போது, முதன் முதலில் பயமும் கவலையும் வந்தது. கடக்கும் பாதையின் முக்கியத்துவமும், அதில் இருக்கும் ஆபத்தும், சவால்களும் புரிய ஆரம்பித்தது.


24வது அடியில், பிடிமானத்திற்கு இருந்த கயிறு வழுவிழந்து அறுந்த போது,  சுற்றி பாதுகாப்புக்காக எதுவும் இன்றி தனியே நிற்கும் உணர்வு. இனி என் வாழ்வு என் நடவடிக்கைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்ற பொறுப்புணர்ச்சி வந்தது.

27-28 வது அடியில், கைப்பிடித்து அழைத்துச் செல்ல ஒருவர், தோளில் சுமந்து இன்னொருவர் என்று மேலும் இரண்டு நபர்கள் என் வாழ்வில். அவர்களுக்கு நான் பிடிமானமா ? இல்லை எனக்கு அவர்களா ?. தெரியவில்லை. ஆனால் புது உற்சாகமும், நம்பிக்கையும் வந்தது.

லையில் சிறுபான்மையாக இருந்த வெள்ளை முடி, அதிக இடங்களைப் பிடித்து பெரும்பான்மையாக மாறத் தொடங்கியிருக்கிறது. கொஞ்சம் தாமதாக வந்தாலும், நானும் இருக்கிறேன் என்று தாடையிலும் சில வெள்ளை முடிகள்.

ப்பாவின் தொப்பையைத் தொட்டு விளையாடின அந்த நாட்களின் நியாபகம் மறுபடியும். ஒரு மாற்றம்; அப்பாவின் தொப்பைக்கு பதிலாக என்னுடையது தொட்டு விளையாடும் என் பையன்.

”நாமெல்லாம் இப்படியா இருந்தோம் ?”
”நாங்க எல்லாம் படிக்கும் போது ....”
”சின்ன வயசுல நான் ....”
”உலகம் ரொம்ப மாறிடுச்சுல்ல ....”
போன்ற வரிகள் அடிக்கடி பேச்சில் இடம் பிடிக்கத்தொடங்கியிருக்கிறது.

“நீ பெரியவனான உடனே, என்னைப் பார்த்துக்குவியா ?" என்ற அசட்டுத்தனமான கேள்வியை, 6 வயது மகனிடம் கேட்கக்கூடாது என்று மனதினுள் வைக்கிறேன். வரும் வருடங்களில் வாய்விட்டு அவனிடம் கேட்டுவிடுவேனோ என்று தோன்றுகிறது.

கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா எழுதிய “70 வயது பிறந்த நாள் அனுபவங்கள்” படித்தவுடன், அவர் சொன்ன ஒரு சில விஷயங்கள் 35 வயதிலேயே நடப்பதைக் கண்டு அதிசயமாக இருக்கிறது. முக்கியமாக அந்த ரம்யா கிருஷ்ணன் விஷயம்.

இது வரை எடுத்த தவறான முடிவுகளைத் திருத்திக் கொள்ள அவகாசம் அதிகமாக இருந்தது. இனி எடுக்கும் முடிவுகள் சரியானவைகளாக எடுக்கப்பட வேண்டும் என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.

தொங்கு பாலத்தின் மீதியையும் சுகமாகக் கடக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

( ***** )

மேலே சொன்ன மாதிரி ஃபீலிங்கோட எழுதலாம். இல்லைன்னா, இன்னைக்கு எனக்கு பிறந்த நாளுன்னு சிம்பிளா சொல்லிடலாம். வாழ்த்தும் அனைவருக்கும் என் நன்றிகள்.

17 பின்னூட்டங்கள்:

vasu balaji said...

பிறந்த நாள் வாழ்த்துகள்:)

ஸ்ரீராம். said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள். ரசனையாக எழுதி இருக்கிறீர்கள். கற்றதும் பெற்றதும் எடுத்து ரம்யா கிருஷ்ணன் பற்றி தலைவர் என்ன சொல்லியிருக்கார்னு திரும்பப் படிக்கணும்....ஆமாம், எத்தனாம் பக்கம்?

King Viswa said...

தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். (வாழ்த்த வயதில்லை என்றாலும்கூட)

உண்மையிலேயே மிகவும் அருமையாக இருந்தது. தொடருங்கள்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அவர்களுக்கு நான் பிடிமானமா ? இல்லை எனக்கு அவர்களா ?//

அது தான் வாழ்வின் ரகசியம். .
அட, பிறந்த நாளுக்கு வித்தியாசமான பதிவு.!
வாழ்த்த வயதுண்டு வாழ்த்துகிறேன்,
பல்லாண்டு பல்லாண்டு வளமோடு நலமோடு வாழ வாழ்த்துகிறேன்!

அமுதா said...

தொங்கு பாலத்தின் ஒவ்வொரு அடியையும் உற்சாகத்துடனுடனும் நம்பிக்கையுடனும் கடக்க வாழ்த்துக்கள்.

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துகள்..

நல்லா இருக்கு..

Prathap Kumar S. said...

முப்பத்ஞ்சு போட்டாச்சு பின்னோக்கி அங்கிள் :)))

பிறந்த நாள் வாழ்த்துக்கள்... அழகா சொல்லிருக்கீங்க...

பின்னோக்கி said...

நன்றி

* வானம்பாடிகள் - வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சார்.

* ஸ்ரீராம் - நான் தந்த லிங்க்லயே இருக்கு படிங்க :)

* கிங் விஸ்வா - பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி. வயச விட மனசு தான் முக்கியம்:)

* நாய்குட்டி மனசு - ரொம்ப நன்றிகள் வாழ்த்துக்களுக்கு

* அமுதா - உங்களை மாதிரி நல்லவர்களோட ஆசிர்வாதத்தோட கடந்துடுவேன் :)

பின்னோக்கி said...

நன்றிகள் முகிலன்.

நன்றிகள் நாஞ்சில் - நானும் யூத்துதான். அங்கிள் ?? நோ. நோ. பேட் வேர்ட்ஸ்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.:)

Chitra said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பின்னோக்கி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி முத்துலட்சுமி, சித்ரா

Mohan said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Deepan Mahendran said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே....

ஆ.ஞானசேகரன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்:)

மங்குனி அமைச்சர் said...

தொங்கு பாலம் எனபது பல பலகைகள் கயிறுகளில் இணைத்து கட்டப் படுவது , இதில் நடக்கும் போது மிக கவனமாக நடக்க வேண்டும் , சில சமயம் நம்மை தடுமாறி கீழே தள்ளி விடும் , பாதிவரை மிக அருமையாக கடந்து வந்து விட்டீர்கள் , மீதிப்பாதியும் கவனமாகவும் , சந்தோசமாகவும் கடக்க வாழ்த்துக்கள்
டிஸ்கி : இப்படியும் வாழ்த்து சொல்லலாம் இல்லாட்டி

"பிறந்த நாள் வாழ்த்துக்கள்" இப்படியும் சொல்லலாம் ,
(உஸ்.... அப்பா என்னா டெக்னிக்கு )

ப்ரியமுடன் வசந்த் said...

Belated birthday wishes sir..

திருமண வாழ்க்கை நல்லா போய்ட்டு இருக்கு போல வாழ்த்துக்கள்..!