25 October 2010

வந்துடுச்சு (காமிக்ஸ்) தீபாவளி

நீங்கள் காமிக்ஸ் பிரியர் என்றால், யுவகிருஷ்ணா (லக்கிலூக்) அவர்களின் இந்தப் பதிவை கண்டிப்பாக படியுங்கள். காமிக்ஸ் பிரியர்களுக்கான ஸ்பெஷல் தீபாவளி வந்துவிட்டது. தகவல் தந்த யுவகிருஷ்ணாவுக்கு நன்றி.

அக்டோபர் - 1987 - தீபாவளி



அக்டோபர் - 2010 - தீபாவளி

இன்று காமிக்ஸ் கிடைத்தது. அட்டைப் படங்கள் இங்கே.

11 பின்னூட்டங்கள்:

ஸ்ரீராம். said...

முத்து காமிக்ஸ் பற்றி தகவல் இல்லையே....இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட்...! எங்கள் வீட்டில் இருந்த பலப்பல புத்தகங்களை எடைக்குப் போட்ட தவறு இப்போது தெரிகிறது...! ம்..ஹூம்...

எஸ்.கே said...

மகிழ்ச்சி! நன்றி!

Unknown said...

இரும்புக்கை மாயாவி சின்ன வயசுல தவறாம படிச்சுடுவேன், உங்க பதிவு பழசை ஞாபகம் படுத்துது....

நல்ல பகிர்வு நண்பரே ....

vasu balaji said...

பகிர்வுக்கு நன்றி

வெடிகுண்டு வெங்கட் said...

தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்

Rafiq Raja said...

உங்களுக்கும் காமிக்ஸ் கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் அனேகருக்கு, அந்த கொடுப்பினை இல்லை.

அட்டகாசமான தொடரை முழுவதும் படித்து சேகரிக்க போகிறோம், என்று நினைத்தாலே சந்தோஷம் பீறிடுகிறது.

வருகைக்கும் கருத்துக்கும், நன்றி பின்னோக்கி.

பின்னோக்கி அளித்த அட்டை விவரங்களை பார்த்து மேலும் பார்க்க ரசிகர்களுக்கு ஆவல் தோன்றினால், இப்பதிவை சுட்டலாம்.. http://www.comicology.in/2010/10/lion-comics-208-xiii-collector-special.html

ஜோதிஜி said...

மந்திரவாதி மாண்ட்ரேக் படித்து இருக்கீங்களா?

ஜோதிஜி said...

வேலைப்பளூ அதிகமோ?

test said...

காமிக்ஸ் வாசிப்பதை நிறுத்தி பல (கிட்டத்தட்ட 15 வருடங்களின் பின்னரும் எனது நண்பன் ஒரு நாள் விஜயன் என்ற பெயரைக் கேட்டதும் S.விஜயனா? என்று கேட்டான் (யாழ்ப்பாணத்தில்).

என்றும் மறக்க முடியாதவை காமிக்ஸ். :))

test said...

உங்கள் பதிவு எனது காமிக்ஸ் அனுபவங்களை மீட்டது. எனது பதிவு,
http://umajee.blogspot.com/2010/11/blog-post_17.html

கிருபாநந்தினி said...

காமிக்ஸ் புஸ்தகம்னா அது முத்து காமிக்ஸ்தான்! நான் நாலாங்கிளாஸ் படிக்கிறப்போ இரும்புக்கை மாயாவி, பெய்ரூட்டில் ஜானி, விண்ணில் மறைந்த விமானங்கள், மஞ்சள் பூ மர்மம், மர்மத் தீவில் மாயாவி-ன்னு எத்தனையெத்தனை படிச்சிருக்கேன் தெரியுமா! இரும்புக்கை மாயாவி, அப்துல் வகாப், ஜானி, ஸ்டெல்லா, லாரன்ஸ், டேவிட், ரிப் கெர்பி, டேஸ்ட்மாண்ட்னு அத்தனை கேரக்டர்களுமே ஏதோ நம்மோடயே வாழ்ந்த மாதிரி ஒரு உணர்வு கிடைக்கும், அதைப் படிக்கிறப்போ! லயன்ஸ் காமிக்ஸ் அந்த அளவுக்கு இருக்குமான்னு படிச்சுதான் சொல்லணும்!