+1 அரையாண்டு பரிட்சை முடிஞ்சு லீவு விடற நாளு, என் கிளாஸ் பிஸிக்ஸ் வாத்தியார், லீவு முடிஞ்சு வரும் போது 2 தடவை கொஸ்டியன் பேப்பர்க்கு விடை எழுதிட்டு வரசொன்னாரு. நான் தான் நல்ல பையனாச்சே, லீவுல முக்கி முக்கி 1 தடவை எழுதி முடிச்சோன்ன நோட் தீந்து போச்சு. புது நோட் வாங்கி இன்னொரு தடவை எழுதி முடிச்சேன்.
ஸ்கூல் தொறந்த உடனே முதல்ல அவரு பீரியட் தான். என் நோட்ட செக் பண்ணிட்டு, முதல் நோட்டுல கையெழுத்து போட்டுட்டாரு. ரெண்டாவது நோட்டுல போடலை. உங்களுக்கே தெரிஞ்சுருக்குமே கிளாஸ்ல எழுதாம வர்றத்துக்குன்னு ஒரு கோஷ்டி இருக்கும். அதுல ஒருத்தன், என்னோட புது நோட்டுல கையெழுத்து போடாதத கவனிச்சுட்டு (இதெல்லாம் கரெக்ட்டா பார்ப்பானுங்க), என்கிட்ட கெஞ்சி, நோட்ட வாங்கிட்டு (புடுங்கிட்டு) க்யூல போய் நின்னான். இங்க எனக்கு கை கால் உதற ஆரம்பிச்சுடுச்சு. கண்டுபிடிச்சுட்டா அவ்வளவு தான். நேரா ஹெட்மாஸ்டர்கிட்ட தான் விஜயம் பண்ணனும்.
அவன்(என்) நோட்ட பார்த்தாரு, அவன பார்த்தாரு
“உண்மைய சொல்லு இது உன் நோட்டா ?”
எனக்கு மயக்கம் வராத குறை தான். போச்சு. பொண்னுங்க முன்னாடி மானம் போகனும்னு இருக்கு என்ன பண்ண ?
“என் நோட்டு தான் சார்”
“உண்மைய சொல்லிட்டா விட்டுடறேன்”
“உண்மையாலுமே என் நோட்டு தான் சார்”
“சரி. நீ எழுதலைன்னு தெரியும். யார் எழுதிக் கொடுத்தது”
“என் அக்கா சார்”
“அதுதானே பார்த்தேன். என்ன ஏமாத்த முடியாதுடா. இன்னொரு தடவை ஏமாத்த பார்த்த நடக்குறதே வேற. நாளைக்கு வரும் போது 2 தடவை நீ எழுதிட்டு வா”
“சரி சார்”
போன உயிர் திரும்பி வந்துச்சுடா சாமி. அவன் பீரியட் முடிஞ்ச உடனே
“என்னவோ ரொம்ப பயந்தியே ? எப்படி அவர ஏமாத்துனேன் பார்த்தில்ல”
“டேய் அவரு மட்டும் கண்டுபிடிச்சுக் கேட்டிருந்தா ? என் நோட்ட அப்பத்தான் தேடுற மாதிரி ஆக்ட் குடுத்துருப்பேன்......போடாங்க !!”
----------------
என் ஆபீஸ்ல வேலை செய்யுறவரு, ஹோண்டா சிட்டி கார் வாங்குனாரு. வாங்கி 10 நாள்ல, கார் முன் பக்க கதவுல இருந்து பின் பக்க கதவு வரை, சாவி வெச்சு கோடு போட்ட மாதிரி, ஒரு பெரிய கோடு, கார் பெயிண்ட்ட எடுத்துடுச்சு. அவர் விசாரிச்ச போது பல பேரு, ஹோண்டா சிட்டி கார் வெச்சுருக்கவங்களும் இதே மாதிரி சொல்லியிருக்காங்க. இதை சரி பண்ணனும்னா 20,000 ரூபாய்க்கு மேல கூட ஆகுமாம். இதை பண்றது யார்னு தெரியலை. சில பேர் சொல்றாங்க, கார் சர்வீஸ் பண்ற கடைங்களே இந்த மாதிரி ஆளு வெச்சு பண்ணுதுன்னு. எனக்கு அத நம்புறதா இல்லையான்னு தெரியலை.
எப்ப என் கார் அல்லது பைக் டயர் பஞ்சர் ஆச்சுன்னாலும், ஒரு 500 மீட்டர் தூரத்துலயே ஒரு பஞ்சர் கடை இருக்குறத பார்த்துருக்கேன். ரோடுல நிறைய தடவ சின்ன சின்ன ஆணி கிடக்குறதையும் பார்த்துருக்கேன். ஒரு வேளை நம்ப ஊருல 1 கி.மீக்கு ஒரு பஞ்சர் கடை இருக்குறதால, இது தற்செயலா நடந்ததாக் கூட இருக்கலாம். ஒன்னும் புரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க. சரி இதுல திக்.திக்.பக்.பக் எங்கன்னு கேட்குறவங்களுக்கு. என்னோட ரொம்ப காஸ்ட்லியான கார் (மாருதி 800)ல கோடு போட்டுடக்கூடாதுல்ல. அதுக்கு தான் இந்த திக்.திக்.பக்.பக்.
நன்றி (படங்களுக்கு):saferoutestoschool.ca,iwebie.com
17 பின்னூட்டங்கள்:
அந்த கோடு போடுற விஷயம், சில சைக்கோக்கள் செய்யும் வேளை! நாம நடந்து போறோம், இவங்களுக்கு காரு கேக்குதான்னு என் முன்னாடியே ஒருதன் அதுபோல செய்தான். இத போல ஆட்களை என்ன செய்ய?
சின்ன பசங்க செய்ற வேலை இது..என் வீட்டிற்கு பக்கத்தில் நிற்கும் கார் பக்கத்தில் நிற்கும் சிலரை விரட்டி இருக்கேன்...
நானும் சின்ன வயசில இன்னொருத்தனோட நோட்ட காமிச்சு அடிவாங்கியிருக்கேன் தல...
நியாயமான திக். அனியாயமான பக்.:))
ஆணியை போடுவதே அவர்கள் தான் என்று என் கணிப்பு...
அடையார் பக்கம் ஒரு வாட்டி போகும் போது வண்டி
பஞ்சர், பார்த்தால் பின்னாடியே மொபைல் பஞ்சர் வண்டியுடன்
வந்தவன் பஞ்சர் பார்க்க ஆரம்பித்து விட்டான்...... என்ன
கொடுமை சார் இது......
கார் வைத்து இருப்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் இந்த யாரு கோடு கிழிச்சா? பிரச்சனை பெரிது தான் போலிருக்கு. இதனால் பெரிய அவஸ்த்தை குமார்.
இவ்வளவு பிராப்ளம் இருக்குறதாலதான் நான் இன்னமும் B.M.W கார் வாங்குற பிளான தள்ளிப் போட்டுக்கிட்டு இருக்கேன் :-)
//என்னோட ரொம்ப காஸ்ட்லியான கார் (மாருதி 800)ல கோடு போட்டுடக்கூடாதுல்ல.//
நான் வந்து கோடு போடுறேன்....தல..
ஸ்கூல் மேட்டரை படிச்ச உடனேநமக்கு அந்த மாதிரி அனுபவம் நினைவு வந்துடுச்சு.
கோடு மேட்டரு. ஒரு சில லூஸ்ங்க செய்யுறது. அதுல அவங்களுக்கு ஒரு சந்தோஜம். நீங்க உங்க "காஸ்ட்லி" காரை பத்துரமா பார்த்துங்க ...ஏன்னா மாருதி கம்பெனி இப்பல்லாம் மாருதி800 தயார் பண்றதை நிறுத்திடுச்சாம்... உங்க காரை மியுசித்துல வைக்க வேண்டியது வரும்.
என் மாருதி கார் மேல புலவன் புலிகேசியும் நாஞ்சில் பிரதாப் ரெண்டு பேரும் பொறாமைல இருக்காங்கன்னு தெரியுது. காருக்கு சுத்தி போடணும் :)
எல்லா க்லாஸ்லயும் திட்டு வாங்கி.. அந்த அனுபவமே தனி.....செம ஜாலியா இருந்த நாட்கள்...
கலையரசன் said...
அந்த கோடு போடுற விஷயம், சில சைக்கோக்கள் செய்யும் வேளை! நாம நடந்து போறோம், இவங்களுக்கு காரு கேக்குதான்னு என் முன்னாடியே ஒருதன் அதுபோல செய்தான். இத போல ஆட்களை என்ன செய்ய?//
உண்மையிலேயே சென்னையில் இதுபோல நடக்குதுங்க, கார் கீறலை எடுக்க ஆகு செலவு இருக்கே?அதுவும் ப்ரீமியம் ரக கார்களுக்கு டின்கரிங் பார்க்க ஆகும் காசுக்கு ஒரு டூவீலர் வாங்கலாம். அவ்வளவு பில் வரும்.
இதை பேராசை பிடித்த ஒருசில கார் மெக்கானிக்குகளும் செய்வதாக அறிந்தேன்.
இதில் சைக்கோக்கள் வேலையே அதிகம் .ஒரு வித குரூரம்,
எங்கள் பம்மல் ஏரியாவில் ஆணிகளை இரவே மண் ரோட்டில் கலந்து விடுவதை பார்த்திருக்கிறேன்.
காலையில் கடை திறக்கும் முன்னே கியூ நிற்கும் பஞ்சர் போட. நல்ல நினைவூட்டல் பதிவு
ஓட்டுக்கள் போட்டாச்சுங்க
:)
நோட் நிகழ்வு சுவாரஸ்யம்
http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html
Please accept this gift from me with deep appreciation for your blog.
-vidhya
நன்றி வித்யா உங்களின் பரிசுக்கு.
பசங்க விடயம் ரசிக்கும் படி இருந்த்தது... பாராட்டுக்கள்.
...................
என்னோட கார்ல யாரும் இதுவரைக்கும் கோடே போட்டதில்ல.
என்னோட காரை வீட்டுக்குள்ளே வைத்து விளையாடிவிட்டு... அலமாரியில வைத்து விடுவேன்.
சி.கருணாகரசு - சரியான ஜோக்குங்க. சிரிக்க வைத்துவிட்டீர்கள்.
Post a Comment