26 November 2009

மாறும் ரசனைகள் - புத்தகங்கள்

ஜனவரி முதல் ஏப்ரல் வரை

ஜனவரி மாதம் பொங்கலையொட்டி ஆரம்பிக்கும் புத்தகக் கண்காட்சிக்குப் போவதிலிருந்து தொடங்கும் என் வாசிப்பு பழக்கம். எல்லாரும் சாரு நிவேதிதா, ஜெயமோகன் எழுதுன புத்தகம் எல்லாம் படிச்சுருக்கியான்னு  கேட்கக் கேட்க, அப்படி என்ன தான் அவங்க எழுதுறாங்கன்னு வாங்கி பார்த்துடுவோம்னு புத்தகக் கண்காட்சிக்குப் போனேன்.
 

வழியில் “பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்” புத்தகங்களை வாங்குறவங்களப் பார்த்தப்ப, மலை மேல ஏறிட்டு இறங்கி வர்றப்ப, அப்ப ஏறுறவங்கள பார்க்கும் போது தோணுமே, ”இப்பத்தான் ஏற ஆரம்பிச்சுருக்கீங்களான்னு” அது மாதிரி ”ம்ம்..இப்பத்தான் இந்த புத்தகமெல்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கீங்களான்னு” ஒரு அலட்சியப் பார்வை பாத்துட்டு, சாரு நிவேதிதா எழுதுன சில புத்தகத்த எடுத்து ஒரு ரெண்டு பக்கம் படிச்சேன். தமிழ்ல தான் எழுதியிருந்தாரு. ஆனா இதுவரை நான் கேள்விப்படாத வார்த்தைகள். அப்படியே புத்தகங்களை வைத்துவிட்டு,சைலண்டா, சுஜாதாவின் நைலான் கயிறு, பாலகுமாரனின் இரும்புக்குதிரை, அகதா கிறிஸ்டியின் ஸ்டேல்ஸில் நடந்தது என்ன மற்றும் சா.கந்தசாமி எழுதிய தொலைந்து போனவர்கள் வாங்கிட்டு வந்து, பரீட்சைக்குப் படிக்குற மாதிரி மாங்கு மாங்குன்னு படிச்சு முடிச்சேன்.
 
அடுத்த ரெண்டு வாரத்துக்கு பார்க்குறவங்க கிட்ட எல்லாம்
“நைலான் கயிறு படிக்காதவன் துப்பறியும் நாவலே படிக்கக்கூடாது”
“.90 வருஷத்துக்கு முன்னாடி அகதா கிறிஸ்டி எப்படி எழுதியிருக்காங்க பாரு.”
“இரும்புக்குதிரையில லாரி கம்பெனி நடக்குறதப் பத்தி நாம உட்கார்ந்து பார்க்க்குற மாதிரி என்னமா எழுதியிருக்காரு ?” ன்னு பந்தா பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
 
என் ஃப்ரண்டு “நீ கார்ல் மார்க்ஸ் எழுதுன நவீன தொழில் கொள்கை படிச்சுருக்கியான்னு” கேட்டப் பிறகுதான் அடங்குனேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவரு அந்த மாதிரி புத்தகம் எதுவும் எழுதலைன்னு.
 
இன்னும் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள், அகதா கிறிஸ்டியின் பிற நாவல்கள் படிக்காமல் அப்படியே இருக்கிறது. ஏப்ரல் மாத முடிவில் படிப்பு தாகம் அடங்கிய பிறகு புத்தகத்தின் பக்கமே போக மாட்டேன். இதோ வந்துடுச்சு அடுத்த புத்தகக்கண்காட்சி. பாலகுமாரன் எழுதிய ”உடையார்” புத்தகம் வாங்கி அடுத்த ஒரு வருஷத்துக்குள்ளயாவது படிச்சு முடிக்கணும். இன்னும் நிறைய புத்தகம் வாங்கணும்.

8 பின்னூட்டங்கள்:

கிருபாநந்தினி said...

\\என் ஃப்ரண்டு “நீ கார்ல் மார்க்ஸ் எழுதுன நவீன தொழில் கொள்கை படிச்சுருக்கியான்னு” கேட்டப் பிறகுதான் அடங்குனேன்.// :-) \\ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவரு அந்த மாதிரி புத்தகம் எதுவும் எழுதலைன்னு.// :-)))

செ.சரவணக்குமார் said...

அன்பின் பின்னோக்கி..
மிக நன்று, நிறைய வாசியுங்கள். வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Unknown said...

சினிமா இப்ப புஸ்தவமா அடுத்தது என்ன?

ஸ்ரீராம். said...

இந்தப் புத்தகக் கண்காட்சியில் எனக்கு ஒரு குறை உண்டு. நாம் தயாராகப் போக வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும் அவர்களும் ஒரு நல்ல பெரிய பை ஒன்று தரலாம் அல்லது Big Shopper போன்றவை விற்பனைக்கு வைக்கலாம்.

Prasanna said...

புத்தகங்கள் படிக்காதவுங்க கிட்ட நாம சொல்றது தான் இலக்கியம்:) அதுக்குத்தான் ரொம்ப படிக்கறவங்க சகவாசமே நான் வச்ச்சிகர்து இல்ல (ஹீ ஹீ)..

நல்ல அனுபவ பகிர்வு..

ஆ.ஞானசேகரன் said...

அருமை...

அன்பேசிவம் said...

நண்பா, எனக்கும் உடையார் புத்தகம் படிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது, ஆக நிச்சயம் சென்னை வருவேன், சந்திக்கலாம் அலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும், என் மின்னஞ்சல் முகவரி murli03@gmail.com

அமுதா said...

/*என் ஃப்ரண்டு “நீ கார்ல் மார்க்ஸ் எழுதுன நவீன தொழில் கொள்கை படிச்சுருக்கியான்னு” கேட்டப் பிறகுதான் அடங்குனேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவரு அந்த மாதிரி புத்தகம் எதுவும் எழுதலைன்னு.
*/
:-))

/*பாலகுமாரன் எழுதிய ”உடையார்” புத்தகம் வாங்கி அடுத்த ஒரு வருஷத்துக்குள்ளயாவது படிச்சு முடிக்கணும்.*/
உடையார் அருமையான நாவல். நல்ல தேர்வு. படித்து பகிர்ந்து கொள்ளுங்கள்