04 November 2009

கப்புன்னு பிடிச்சவங்க...பிடிக்காம விட்டவங்க

நர்சிம் எழுதிய இந்த பதிவ, ஹாயா படிச்சு, ரசிச்சுக்கிட்டு இருந்தேன். கடைசியில யாரை தொடர அழைக்கப் போறார்ன்னு பார்த்த போது, என் பெயர் இருந்துச்சு. ஒருதடவைக்கு ரெண்டுதடவை பார்த்தேன் (1000 தடவை பார்த்தாலும் அது தான் தெரியும்..அடுத்த லைன் எழுதுன்னு பலர் திட்டுவதால்) எனக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் லிஸ்ட் எழுதிடலாம்னு முடிவு பண்ணி, நர்சிம் மனசு மாற்றத்துக்குள்ள பதிவு போட்டுடலாம்னு
..
..
..
போட்டுட்டேன்.
திட்டி பின்னூட்டமிட யாராவது விரும்பினால் அதை, பதிவுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூட்டிக்கொள்ள உதவியாக இருந்த நர்சிம் அவர்களின் ப்ளாக்கில் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. அரசியல்வா(வியா)திகள்


பிடித்தவர்      : ஜெ.ஜெயலலிதா (மழை நீர் சேகரிப்பு, புதிய வீராணம், பொதுமக்களுக்கு தொல்லை குடுக்கும் அரசியல் சாரா ரொளடிகளை அடக்கினது)
பிடிக்காதவர்:  Doctor. Ramadoss (எல்லாரையும் தமிழ் படிக்க சொல்லிட்டு, பேரப்புள்ளைகளை கான்வென்ட்ல படிக்க வைக்குறத்துக்காக + ஹை ஜம்ப் + லாங் ஜம்ப் தேர்ச்சிக்காக)

2.இயக்குனர்


பிடித்தவர்        : சேரன் (வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப், த.தவம். ஆண்களும் அழுவார்கள் என்ற உண்மையை சொன்னதற்காக)

பிடிக்காதவர் : பாலு மகேந்திரா (ஹீரோக்களின் சட்டையை அவிழ்க்க வைத்ததற்காக)

3. நடிகர்


பிடித்தவர்     : கமல்ஹாசன் (காலத்தை மீறி கனவு கண்டு படங்கள் எடுப்பதினால். மைக்கேல்.மதன.காமராஜன் இப்பொழுது வந்திருக்க வேண்டிய படம்)
பிடிக்காதவர்: விஷால் (படத்தை பார்க்கவருபவர்கள் முகத்தில் குத்தி, காதில் கத்தி கொயந்த மாதிரி வசனம் பேசுவதற்காக)

4. நடிகை


பிடித்தவர்     : பாவனா (முதலில் அடித்த ரசிகர் மன்ற ஆள் சேர்ப்பு விண்ணப்பம் தீர்ந்து போனதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரசிகர் மன்ற ஆள் சேர்ப்பு, இப்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது)

பிடிக்காதவர் : நயன்தாரா (1 கோடி ரூபாய் கொடுத்து எதுக்கு இவங்கள நடிக்க வைக்குறாங்கன்னு தெரியலை)

5. எழுத்தாளர்


பிடித்தவர்    : பட்டுக்கோட்டை பிரபாகர் (எழுதியது மாத நாவல்கள் என்றாலும் அதில் பல புதுமைகளை புகுத்தியது [வர்ணனைகள் இல்லாமல் ஒரு நாவல், நகைச்சுவை நாவல்])

பிடிக்காதவர்: ராஜேஷ்குமார் (நாவல் படிக்க ஆரம்பித்தது இவரால் என்றாலும், தற்பொழுது, கடைசி பக்கத்தை படிக்கும் போதே முதல் பக்க கதை மறந்துவிடக்கூடிய அளவில் தரத்துடன் [இப்பொழுது] எழுதுவதால்)

6. பாடகர்


பிடித்தவர்      : ஜேசுதாஸ் (தாலாட்டுவதால்)
பிடிக்காதவர்: கவிதை குண்டர் (கையை வைத்து கண்ணை குத்துவதால்)

7.இசையமைப்பாளர்


பிடித்தவர்      : இளையராஜா (வயசு 30 க்கு மேல் ஆகி, பக்கத்து வீட்டு பையன் அங்கிள் என்று கூப்பிடத் தொடங்கியதிலிருந்து)

பிடிக்காதவர் : ஏ.ஆர்.ரஹ்மான் (ஹிந்தி பக்கம் போனதிலிருந்து இவர் மேல் கோபம்)

---
தொடர நான் அன்புடன், பாசத்துடன், கனிவுடன் (கெஞ்சி) அழைப்பது
1. கீதப்ப்ரியன்
2. அமுதா (என் வானம்)

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

27 பின்னூட்டங்கள்:

ஈரோடு கதிர் said...

//(வயசு 30 க்கு மேல் ஆகி, பக்கத்து வீட்டு பையன் அங்கிள் என்று கூப்பிடத் தொடங்கியதிலிருந்து)
//

ஹ ஹ ஹ...

இது எத்தன வருசமா நடக்குதுங்க

ப்ரியமுடன் வசந்த் said...

//பிடித்தவர் : சேரன் (வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப், த.தவம். ஆண்களும் அழுவார்கள் என்ற உண்மையை சொன்னதற்காக)//

உண்மைதான் சொதப்பல்,ஓவர் ஆக்டிங் என்பதையும் தவிர்த்து இயல்பு வாழ்க்கை படம் பிடிப்பவர்...

Sanjai Gandhi said...

படங்களுடன் பதிவிட்டிருப்பது ரொம்பவே ஈர்க்குதுங்க. குட் குட்..

//(1 கோடி ரூபாய் கொடுத்து எதுக்கு இவங்கள நடிக்க வைக்குறாங்கன்னு தெரியலை)//

என்னாது.. ஒரு கோடி குடுக்கிறது நடிக்கிறதுக்கா? நீங்க இவ்ளோ அப்பாவிங்களாங்க? :))

அன்புடன் மணிகண்டன் said...

எல்லோருக்குமான காரணங்களை அடைப்புக் குறியில் போட்டிருப்பது அருமைங்க..

அமுதா said...

/*1000 தடவை பார்த்தாலும் அது தான் தெரியும்*/
:-))
என்னை அழைத்ததற்கு நன்றி (ஹையா... ஜீவனும் மாட்டிக்கிட்டாரா?) விரைவில் போட முயற்சிக்கிறேன்.

பின்னோக்கி said...

கதிர் - அது ஆச்சுங்க 4 வருஷம் :(. இதுல உங்களுக்கு ஒரு சந்தோஷம் :) ??

பின்னோக்கி said...

சஞ்சய்காந்தி - ஹீ...ஹீ.... :))

பின்னோக்கி said...

அமுதா - நன்றி வருகைக்கு. ஜீவன் அருமையான ஜீவன். விரைவில் பதிவு போட்டுடுவாரு பாருங்க. ஸ்டார்ட் த ரேஸ்

vasu balaji said...

நல்லாருக்கு ரசனை.:)

தேவன் மாயம் said...

பிடித்தவர் : கமல்ஹாசன் (காலத்தை மீறி கனவு கண்டு படங்கள் எடுப்பதினால். மைக்கேல்.மதன.காமராஜன் இப்பொழுது வந்திருக்க வேண்டிய படம்)///

ஓகே!!

அத்திரி said...

//பிடித்தவர் : இளையராஜா (வயசு 30 க்கு மேல் ஆகி, பக்கத்து வீட்டு பையன் அங்கிள் என்று கூப்பிடத் தொடங்கியதிலிருந்து)
//


ஆஹா..................

geethappriyan said...

அருமை நண்பர் பின்னோக்கி,
மிக அற்புதமான பதில்கள்,சரவெடி போல இருந்தது.
என்னை தொடர அழைத்தமைக்கு நன்றி.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பார்களே அதுபோல செந்தில் வேலனும் என்னை இதே பதிவு எழுத கூப்பிட்டுள்லார்.
விரைவில் தொடர்வேன்.
ஓட்டுக்கள் போட்டாச்சு

தமிழ் அமுதன் said...

//இளையராஜா (வயசு 30 க்கு மேல் ஆகி, பக்கத்து வீட்டு பையன் அங்கிள் என்று கூப்பிடத் தொடங்கியதிலிருந்து)//

எம்புட்டு வருசமா ?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகா சொல்லியிருக்கீங்க பின்னோக்கி :)

Prasanna said...

//கவிதை குண்டர் (கையை வைத்து கண்ணை குத்துவதால்)//
ஹா ஹா ஹா..

//பிடிக்காதவர் : ஏ.ஆர்.ரஹ்மான்//
அவர் தமிழிலும் தான் போடுகிறாரே..? அது என்னவோ தெரியல, ரஹ்மானை யார் குறை சொன்னாலும் கஷ்டமா இருக்கு.
மத்த எல்லாம் சூப்பர் :))

ஜெட்லி... said...

ராஜேஷ்குமார் பற்றி கரெக்ட்ஆ
சொல்றிங்க.... சேம் ப்ளட்!!

ஜெனோவா said...

படங்களெல்லாம் போட்டு கலக்கிட்டீங்க பின்னோக்கி !

பதில்களும் , காரணங்களும் அருமை !
//SanjaiGandhi™ said...
படங்களுடன் பதிவிட்டிருப்பது ரொம்பவே ஈர்க்குதுங்க. குட் குட்..

//(1 கோடி ரூபாய் கொடுத்து எதுக்கு இவங்கள நடிக்க வைக்குறாங்கன்னு தெரியலை)//

என்னாது.. ஒரு கோடி குடுக்கிறது நடிக்கிறதுக்கா? நீங்க இவ்ளோ அப்பாவிங்களாங்க? :)) //

ரிப்பீட்டேய் .....

வாழ்த்துக்கள்

Prathap Kumar S. said...

பிடித்தவர் : கமல்ஹாசன் (காலத்தை மீறி கனவு கண்டு படங்கள் எடுப்பதினால். மைக்கேல்.மதன.காமராஜன் இப்பொழுது வந்திருக்க வேண்டிய படம்)///
கரீட்டு,

பாவனா மேட்டரு கலக்கல்,

நயன்தாரா 1 கோடி ரூபா வாங்கறது நடிக்க மட்டும் இல்லை தல...உலகம் புரியாதவரா இருக்கீரே...

உங்கள் தோழி கிருத்திகா said...

பிடித்தவர் : ஜெ.ஜெயலலிதா (மழை நீர் சேகரிப்பு, புதிய வீராணம், பொதுமக்களுக்கு தொல்லை குடுக்கும் அரசியல் சாரா ரொளடிகளை அடக்கினது)//////irumbu lady of tamil nadu...nanum unga katchi thaan :)
நயன்தாரா 1 கோடி -thevaillathaan...enna panrathu :(

நாடோடி இலக்கியன் said...

எனக்கும் சேரனை பிடிக்கும்ங்க ஆனால் என்னுடைய பிடிக்காத லிஸ்ட்டில் அவரையும் சேர்த்துதான் எழுதியிருக்கேன்.காரணம் சமீபத்திய அவரின் படங்களும் அவரே நடிப்பதும்.

சிவாஜி சங்கர் said...

ஹையா, இந்த விளையாட்டு நல்லா இருக்கே..

ஆ.ஞானசேகரன் said...

ரசிக்கும்படி உள்ளது

பின்னோக்கி said...

பிரசன்ன குமார் - ரஹ்மான் மேல் எனக்கிருப்பது செல்லக் கோபம். அவர் இசை வடிவைத்தானே அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பின்னோக்கி said...

கண்ணியம்.கடமை.கட்டுப்பாடு எல்லாம் பதிவுல காட்டலாம்னு நயன் பத்தி எழுதுனா என்னய சின்னப்புள்ளை மாதிரி எல்லாரும் பார்க்குறீங்களே. அது தப்பு :)

பின்னோக்கி said...

நாடோடி இலக்கியன் - சேரனோட கடைசி ரெண்டு படத்தையும் பார்க்கலை. அதுனால தான் அவர புடிச்சவங்க லிஸ்ட்ல வெச்சுருக்கேன்னு நினைக்கிறேன் :)

பின்னோக்கி said...

நன்றி - ஜெட்லி, ஆ.ஞானசேகரன்,சிவாஜி,கிருத்திகா,ஜெனோவா,நாஞ்சில்,செந்தில்,ஜீவன்,கார்த்தி, வானம்பாடி, தேவன்மாயம்

வால்பையன் said...

ஜெவை பிடிக்கும்னு சொல்ல வலையுலகில் ஒரு தைகிரியம் வேணும் தல!